என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா? என விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    • வெயிலின் கொடுமையில் பலியானவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை தேவை.

    * நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா? என விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

     

    * வெயிலின் கொடுமையில் பலியானவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

    * கூட்ட நெரிசலால் அல்ல வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே உயிரிழப்பு என தெரிய வந்துள்ளது.

    * வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
    • தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அதிகாரிகள் பேச்சுவார்த்தை.

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

    இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.


    இந்த நிலையில் 'சாம்சங் இந்தியா' தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று தலைமைச் செயலகத்தில், ஆலையின் நிர்வாகத்தினரை அழைத்து பேசினார். அப்போது நிர்வாகத்தினர் என்னென்ன கோரிக்கையை ஏற்பார்கள்? என்பதை கேட்டறிந்தார்.

    இதன் அடுத்த கட்டமாக இன்று காலையில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அதிகாரிகளும் ஆலை நிர்வாகத்தினரும் இருங்காட்டு கோட்டையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


    இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா? என்பது மாலையில் தெரிய வரும்.

    • குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம்....
    • நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்?

    பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம்....

    நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன்?

    நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள், விநாயர் சதுர்த்தி ஊர்வலம், கோயம்பேட்டில் நடக்கவிருந்த

    பாஜகவின் மாநாடு அதேபோல் ஆண்டாண்டு நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி, எத்தனை மருத்துவர்கள், எத்தனை செவிலியர்கள், எத்தனை உதவியாளர்கள் என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கும் தமிழக அரசு....

    நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்?

    கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதலமைச்சர் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன?

    மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்துதான் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.
    • ஒரு நிகழ்ச்சியை கூட சரியாக நடத்த முடியாத கையாளாகாத அரசு தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது.

    சேலம்:

    சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * விமான சாகசத்தை காண வருவோருக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் 5 உயிர்கள் பலியாகி உள்ளது.

    * கூட்ட நெரிசலில் சிக்கியதில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    * முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்துதான் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.

    * எவ்வளவு பேர் வருவர் என உளவுத்துறையிடம் தகவல் பெற்று திட்டமிட்டு அடிப்படை வசதிகளை செய்து தருவது அரசின் கடமை.

     

    * முதலமைச்சரின் அறிவிப்பை நம்பி நிகழ்ச்சியை காண வந்த மக்களுக்கு துன்பம் நிகழ்ந்துள்ளது.

    * பிற மாநில நகரங்களில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றபோது திட்டமிட்டு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

    * இனியாவது லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்விற்கு முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

    * இதை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லி இருக்கிறார். 5 பேர் உயிரிழந்த விவகாரத்தை கூட அரசியலாக்கக்கூடாதா?

    * வாருங்கள் என அழைத்து அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், மக்களுக்கான தகுந்த பாதுகாப்பை செய்ய தவறி உள்ளார்.

    * ஊடகம், செய்தியில் வருவதை தான் நான் கூறுகிறேன். பல லட்சம் பேர் வரும் நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடுகள் அவசியம்.

    * ஒரு நிகழ்ச்சியை கூட சரியாக நடத்த முடியாத கையாளாகாத அரசு தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது.

    * உளவுத்துறை எதற்காக வைத்துள்ளீர்கள்? அது செயல்படவில்லை என நீங்களே ஒத்துக்கொள்கிறீர்களா?

    * அழைப்பு விடுக்காவிடில் கண்டிப்பாக இவ்வளவு பேர் கூடியிருக்க மாட்டார்கள். எனவே அழைப்பு விடுத்த முதல்வரே பொறுப்பு.

    * கூட்டநெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்கது.
    • தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை என்பதை தெரிவித்த கனிமொழி பதிவை வரவேற்கிறேன்.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்கது.

    * விமானப்படை அதிகாரிகள் சொன்னதைப்போல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.

    * தமிழக காவல்துறை முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சரியான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால் இதுபோன்ற விளைவு ஏற்பட்டுள்ளது.

    * தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை என்பதை தெரிவித்த கனிமொழி பதிவை வரவேற்கிறேன் என்று கூறினார்.

    • தினசரி உணவில் தக்காளி பயன்பாட்டை குறைத்துவிட்டனர்.
    • தக்காளியின் வரத்தும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த மாதம் சில்லரை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு மட்டுமே விற்கப்பட்டது. இந்த நிலையில் வரத்து குறைந்து வருவதால் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.55-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது மேலும் அதிகரித்து சதத்தை தாண்டி உள்ளது. மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.80 வரை விற்கப்படுகிறது.

    வெளிமார்க்கெட்டில் உள்ள கடை, காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதனால் தினசரி உணவில் தக்காளி பயன்பாட்டை குறைத்து விட்டனர். தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.


    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்குள்ள வியாபாரிகளும் தற்போது அதிகளவில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதன் காரணமாக தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உற்பத்தி நடக்கும் இடத்திலேயே விலை கடுமையாக அதிகரித்து உள்ளது.

    மேலும் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்தும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் வரும் தக்காளி திடீரென 50 லாரிகளாக குறைந்து விட்டதால் அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தக்காளியின் விலை மேலும் உச்சம் அடையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
    • அனைவரையும் டிக்கெட் எடுக்காமல் செல்ல அனுமதித்தனர்.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் வீடு திரும்புவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

    பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்பட்டாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டத்தால் நேற்று காலை முதல் மாலை வரை ஸ்தம்பித்தது.

    சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப பல மணி நேரம் நீடித்தது. பறக்கும் ரெயில், புறநகர் மின்சார ரெயில்களில் நெரிசலில் மக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில் சேவை நேற்று மக்களுக்கு மிகுந்த கை கொடுத்தது.


    3½ நிமிட நேரத்திற்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்பட்டதால் கூட்டத்தை சமாளிக்க முடிந்தது. ஆனாலும் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., சென்ட்ரல், எழும்பூர் போன்ற மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    பயணிகள் கூட்டமாக வந்ததால் டிக்கெட் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. டிக்கெட் ஸ்கேனிங் எந்திரம் உடனுக்குடன் செயல்பட வில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாத ரெயில் நிலைய அதிகாரிகள், பணியாளர்கள் தடுமாறி னார்கள்.

    தொடர்ந்து அதிகரித்து வந்த கூட்டத்தை சமாளிக்க தடுப்பு கேட் அகற்றப்பட்டது. அனைவரையும் டிக்கெட் எடுக்காமல் செல்ல அனுமதித்தனர்.

    ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறும் போது டிக்கெட் எடுக்க வேண்டும் என சிலர் கூறினார்கள். ஆனால் அங்கும் டிக்கெட் எடுக்காமல் பொதுமக்கள் வெளியே சென்றார்கள்.

    டிக்கெட் எடுக்க யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என அறிவுறுத் தப்பட்டதால் பொதுமக்கள் டிக்கெட் எடுக்காமல் சென்றனர். டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தால் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடந்திருக்கும்.

    ஆனால் 5.45 மணி வரை சாகச நிகழ்ச்சி பார்க்க வந்தவர்களின் கூட்டம் இருந்ததாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக மெட்ரோ ரெயில்களில் கூட்டம் குறைவாக இருக்கும். சேவை குறைக்கப்படும்.

    ஆனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்திருக்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
    • அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டங்கள் நடத்தி பல சேவைகள் துறையை ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தோம்.

    * மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கடைகள் அகற்றி, தடுப்புகள் அமைத்து அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயலாற்றியது.

    * அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    * வெயிலின் தாக்கத்தினால் தான் மயக்கம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் நானும் இருந்தேன் என்று கூறினார்.

    • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை வருகை தந்தார்.
    • தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூரில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை வருகை தந்தார்.

    முன்னதாக அவர் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோவிலில் உள்ள மூலவர் தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பித்தனர். பின்னர், அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, அவர் கோவிலை பிரதட்சனம் செய்து அங்குள்ள பிற சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அப்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.
    • தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம்.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நேற்று வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது.

    * 5 பேரும் இறந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    * மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை

    * 5 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் தருகிறது. இதில் அரசியல் செய்ய நினைக்கக்கூடாது.

    * சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102.

    * விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.

    * ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

     

    * குடிநீர், குடை உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம்.

    * தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம்.

    * அரசு மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

    * அரசு சார்பில் மருத்துவ முகாம், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தது.

    * 7500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    * குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் பேசுவதை தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • தூங்கும் வசதி படுக்கைகள் நவீன தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தற்போது இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூரு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை-பெங்களூர், மதுரை-பெங்க ளூர் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    சொகுசான வசதியுடன் பயண நேரம் குறைவதால் வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் எப்போதும் முழுமையாக நிரம்பி செல்கின்றன.

    பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரெயில்களை படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. முற்றிலும் படுக்கை வசதியுடன் இந்த ரெயில் பெட்டிகள் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டது.


    சென்னை ஐ.சி.எப். இதற்கான மாடலை தயாரித்து பெங்களூரில் உள்ள நிறுவனத்திடம் கொடுத்தது. ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்கு தூங்கும் வசதி படுக்கைகள் நவீன தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    160 கி.மீ. வேகத்தில் சென்றாலும் பெட்டிகள் குலுங்காமல் இருக்கவும் விரைவாக கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில் விரைவில் பரிசோதனைக்கு விடப்படுகிறது.

    சென்னையில் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

    வந்தே பாரத் முதல் படுக்கை வசதி ரெயில் தயாரிப்பு பணிகள் முடிந்து ஐ.சி.எப். தொழிற்சாலைக்குள் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து ஏதாவது ஒரு நகருக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    படுக்கை வசதி வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக எந்த நகருக்கு விடப் படும் என்பதை ரெயில்வே வாரியம் முடிவு செய்யும். சென்னையில் இயக்கப் படுமா? அல்லது வேறு நக ரங்களுக்கு ஒதுக்கப்படுமா? என்பது ஓரிரு மாதங்களில் தெரிய வரும் என்றனர்.

    • அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
    • 500 கடைகளை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28-ந்தேதி மாற்றி அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சராக உதயநிதி நியமனத்தை தொடர்ந்து அமைச்சரவையில் அவருக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டது.

    இந்த மாற்றத்தின் போது அமைச்சரவையில் இருந்து செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், கா.ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டனர். செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    அப்போது பொன்முடி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் அனுமதிகள், சலுகைகள் குறித்து விவா தித்து இறுதி முடிவு செய் யப்படும். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள நிலையில் புதிய நிறுவனங்களின் அனுமதி பற்றி கொள்கை முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 4829 மதுக்கடைகளில் 500 கடைகளை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    ×