search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Overcrowding"

    • 10ம் தேதி இரவு, அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர்.
    • சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கடலூர்:

    புதுச்சத்திரம் அருகே, கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 35; பஹ்ரைனில் வேலை செய்து வருகிறார். ஊருக்கு வந்திருந்த அவரை, மீண்டும் வெளிநாடு செல்வதற்காக, கடந்த 10ம் தேதி இரவு, அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். பின்னர் காரில் ஊர் திரும்பிக் கொண்டிதிருந்தனர். காரை தரங்கம்பாடியை அடுத்த கீழப்பெரும் பள்ளம் சத்தியசீலன் (38) ஓட்டினார். கார் கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கொத்தட்டை பஸ் நிறுத்தம் அருகே, வந்தபோது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் டிரைவர் சத்தியசீலன், சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் படுகாயமடைந்த கார்த்திகேயன் மனைவி வளர்மதி (30) மகன் ஹரிஹரன்(10) வளர்மதியின் தங்கை வனிதா (29) தாய் வெண்ணிலா(60) வனிதாவின் ஆறு மாத குழந்தை விக்ராந்த், வளர்மதியின் தம்பி வளர்ச்செல்வனின் மூன்று மாத குழந்தை லக்க்ஷனா ஆகியோரை மீட்டு, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், விக்ராந்த், லக்க்ஷனா இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தனர். வளர்மதி, ஹரிஹரன் ஆகியோர் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

    • யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    வங்கக்கடலில் உரு வாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நாட்டுப்படகு மற்றும் சிறிய வகை பைபர் படகுகளில் சென்று மீன் பிடித்து வந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குறைந்த அளவிலான மீன்கள் வரத்து இருந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதில் ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்பனை செய்த அதலை மீன் 450 ரூபாய்க்கும்,ரூ. 200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படும் பாறை மீன் 350 ரூபாய்க்கும், வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றதை காண முடிந்தது.

    ×