கடலூர் துறைமுகத்தில் போட்டி போட்டு மீன்கள் வாங்கி சென்ற மக்கள்

யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மீன் வாங்க குவிந்த மக்களை படத்தில் காணலாம்.
மீன் வாங்க குவிந்த மக்களை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

வங்கக்கடலில் உரு வாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நாட்டுப்படகு மற்றும் சிறிய வகை பைபர் படகுகளில் சென்று மீன் பிடித்து வந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குறைந்த அளவிலான மீன்கள் வரத்து இருந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதில் ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்பனை செய்த அதலை மீன் 450 ரூபாய்க்கும்,ரூ. 200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படும் பாறை மீன் 350 ரூபாய்க்கும், வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றதை காண முடிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com