என் மலர்
நீங்கள் தேடியது "Schools Open"
- கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
- 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார். இன்று (திங்கட்கிழமை) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு ரூபாயில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.
இதை கேள்விப்பட்டு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர். அனைவருக்கும் தலா ஒரு ரூபாய் சலுகை கட்டணத்தில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.
இதுகுறித்து மூர்த்தி கூறும் போது, 'இந்த ஆண்டுபள்ளிகள் திறப்பை முன்னிட்டு எனது கடையில் முதல் முறையாக மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு முடி வெட்டினேன். அந்த வகையில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து முடி வெட்டிச்சென்றனர்' என்றார்.
- 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
- 1 முதல் 5-ம் வகுபு மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
சென்னை:
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 23-ம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வு நிறைவு பெற்றது.
அரையாண்டு தேர்வு முடிந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று
பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது
- பள்ளிகளில் திருத்தப்பட்ட அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர்
பெரம்பலூர்:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் அரையாண்டு தேர்வு நடந்தது. கடந்த 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்களும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 9 நாட்களும் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன்படி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று காலை மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். பள்ளிகளில் திருத்தப்பட்ட அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 7-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவக்கால விலையில்லா பாடப்புத்தக்கங்களும், பாட குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன. 8, 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாட குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.
- மேற்கு வங்காளத்தில் கோடை வெயிலும், வெப்ப அலையும் நீடிக்கிறது.
- வெப்ப அலையால் அங்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுகின்றன.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கோடை விடுமுறை முடிந்து மேல்நிலைப் பள்ளிகள் வரும் 5-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகள் 7-ம் தேதியும் திறக்கப்படும் என மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் மாநிலத்தில் கோடை வெயிலும், வெப்ப அலையும் நீடிக்கிறது. அங்கு இந்த மாதத்தின் முதல் பாதி வரை வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றார்.
- தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதேபோல், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
- மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது.
அதன்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. காலாண்டு விடுமுறை முடிந்து உற்சாகமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்கவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து அந்த மக்கள் மீண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 2 ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் தண்ணீர் வடியாத காரணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மழைநீர் வடிந்து சகஜநிலை திரும்பிய நிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு இணைய வழி சேவைகள் மற்றும் 2022-23-ம் கல்வி ஆண்டு நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் அதற்கான தமிழ்வழி சான்றிதழை பள்ளிக்கு சென்று வாங்கி வந்தனர். இனி சான்றிதழ்கள் ஆன்லைன் வழியாக வழங்கப்படும்.
அதேபோல் இணை படிப்புகளுக்கான சான்றிதழ், மைக்ரேஷன் சான்றிதழ் உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்கள் இனி ஆன்லைன் வழியாக இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இது எளிதான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் பள்ளிகளில் ஆசிரியர்கள் 100-க்கும் மேலான பதிவேடு பராமரித்து வருகிறார்கள். இதனால் கால விரயம் ஏற்படுகிறது. மேலும் வேலை பளுவும் அதிகரிக்கிறது.
இதனை எளிதாக்கும் வகையில் 38 வகையான பதிவேடுகள் இணைய வழியில் பராமரிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் விடுப்புகள் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கும், படிப்பதற்கு வெளிநாடு செல்ல அனுமதி பெறுவதற்கும் கல்வி அலுவலகங்களை நாட வேண்டி இருந்தது. அவை எளிதாக்கப்பட்டு இருக்கும் இடத்திலேயே விண்ணப்பித்து இந்த பணி பலன்களை பெறலாம். ஆசிரியர்களுக்கு எந்தெந்த நாட்களில் பயிற்சி அளிப்பது என்பது குறித்து நாட்காட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது தவிர காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளும் அந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் பள்ளி செயல்படும் நாட்கள் மாறுபட்டு இருந்தது. வருகிற கல்வியாண்டு முதல் வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெறும்.
ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 13-ந்தேதி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜூன் 20-ந்தேதி 12-ம் வகுப்புகளுக்கும், ஜூன் 27-ந்தேதி 11-ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கு அப்பாற்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தால் அந்த வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இரண்டு மார்க், ஐந்து மார்க் வினாக்கள் பாடத்துக்கு வெளி பகுதியில் இருந்து கேட்டதாக தெரிய வந்துள்ளது. அதனால் மாணவர்கள் பயப்பட தேவையில்லை. மதிப்பெண் குறையும் என்றோ தேர்ச்சி பெறாமல் ஆகி விடுவோமோ என்று பயப்பட வேண்டாம்.
தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது குறித்து நிதித்துறையிடம் இருந்து ஒப்புதல் வரவேண்டும். நீட் தேர்வு விலக்குக்கான முயற்சி தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நீட் பயிற்சி அளிக்கப்படும். வரும் கல்வியாண்டில் பயிற்சி பெற 16 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 44 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அவர்கள் பள்ளியில் தங்களது பெயர்களை பதிவு செய்து விட்டு பின்னர் இடைநிற்றதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






