என் மலர்
நீங்கள் தேடியது "Saloon shop"
- கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
- 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார். இன்று (திங்கட்கிழமை) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு ரூபாயில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.
இதை கேள்விப்பட்டு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர். அனைவருக்கும் தலா ஒரு ரூபாய் சலுகை கட்டணத்தில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.
இதுகுறித்து மூர்த்தி கூறும் போது, 'இந்த ஆண்டுபள்ளிகள் திறப்பை முன்னிட்டு எனது கடையில் முதல் முறையாக மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு முடி வெட்டினேன். அந்த வகையில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து முடி வெட்டிச்சென்றனர்' என்றார்.
- காயம் அடைந்த ஒருவர் கெஞ்சியபோதும் அந்த நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர்.
- துப்பாக்கிச் சூடு பற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது.
புதுடெல்லி:
டெல்லி தென்மேற்கு பகுதியில் நஜப்கர் என்ற இடத்தில் உள்ள சலூனில் நேற்று சில வாலிபர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக அந்த சலூனுக்குள் நுழைந்தது. அங்கிருந்தவர்கள் அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடினார்கள்.
இதையடுத்து அந்த கும்பல் 2 வாலிபர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டது. முதலில் ஒரு வாலிபர் சலூனுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவர் மீது 4 குண்டுகள் பாய்ந்து இருந்தது.
மற்றொரு வாலிபரை மிக அருகில் சென்று கும்பலைச் சேர்ந்த ஒருவர் மிரட்டினார். தன்னை சுட்டு விடவேண்டாம் என்று அந்த வாலிபர் கெஞ்சினார். என்றாலும் அந்த வாலிபர் தலை மீது கும்பலைச் சேர்ந்தவர் சுட்டார்.
அடுத்தடுத்து அந்த வாலிபர் மீது 4 தடவை துப்பாக்கிச் சூடு நடந்தது. குண்டு பாய்ந்த 2 வாலிபர்களும் சலூனுக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். அந்தச் சமயத்தில் அங்கு வந்த சலூன் பணிப்பெண் இந்த காட்சிகளை கண்டு அலறியடித்து ஓடினார்.
சுட்டுக்கொல்லப்பட்ட 2 வாலிபர்களும் சோனு, ஆஷிஷ் என தெரிய வந்துள்ளது. தலா 26 வயதான அவர்கள் இருவர் மீதும் டெல்லி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
ரவுடிகளான அவர்களை மற்றொரு ரவுடி கும்பல் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. முன் விரோதம் காரணமாகவே 2 வாலிபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சலூனுக்குள் 2 வாலிபர்களும் சுட்டுக் கொல்லப்படும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இன்று காலை அந்த கேமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- விலைவாசி உயர்வு காரணமாக ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
- இந்த கட்டணத்தை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை:
தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நடராஜன் பாரதிதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க நிர்வாக கூட்டம் நடந்தது. இதில் நானும், செயலாளர் செல்லப்பன், பொருளாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர், அமைப்பு செயலாளர் சுரேஷ் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
விலைவாசி உயர்வு காரணமாக ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணத்தை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சேவிங்-49, கட்டிங் -99 என்று வெளியே விளம்பரம் வைத்து சாதாரண சக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செய்ய வேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








