டெல்லியில் துணிகரம்: சலூனில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் சுட்டுக்கொலை

காயம் அடைந்த ஒருவர் கெஞ்சியபோதும் அந்த நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர்.துப்பாக்கிச் சூடு பற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது.
டெல்லியில் துணிகரம்: சலூனில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் சுட்டுக்கொலை
Published on

புதுடெல்லி:

டெல்லி தென்மேற்கு பகுதியில் நஜப்கர் என்ற இடத்தில் உள்ள சலூனில் நேற்று சில வாலிபர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக அந்த சலூனுக்குள் நுழைந்தது. அங்கிருந்தவர்கள் அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடினார்கள்.

இதையடுத்து அந்த கும்பல் 2 வாலிபர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டது. முதலில் ஒரு வாலிபர் சலூனுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவர் மீது 4 குண்டுகள் பாய்ந்து இருந்தது.

மற்றொரு வாலிபரை மிக அருகில் சென்று கும்பலைச் சேர்ந்த ஒருவர் மிரட்டினார். தன்னை சுட்டு விடவேண்டாம் என்று அந்த வாலிபர் கெஞ்சினார். என்றாலும் அந்த வாலிபர் தலை மீது கும்பலைச் சேர்ந்தவர் சுட்டார்.

அடுத்தடுத்து அந்த வாலிபர் மீது 4 தடவை துப்பாக்கிச் சூடு நடந்தது. குண்டு பாய்ந்த 2 வாலிபர்களும் சலூனுக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். அந்தச் சமயத்தில் அங்கு வந்த சலூன் பணிப்பெண் இந்த காட்சிகளை கண்டு அலறியடித்து ஓடினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட 2 வாலிபர்களும் சோனு, ஆஷிஷ் என தெரிய வந்துள்ளது. தலா 26 வயதான அவர்கள் இருவர் மீதும் டெல்லி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

ரவுடிகளான அவர்களை மற்றொரு ரவுடி கும்பல் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. முன் விரோதம் காரணமாகவே 2 வாலிபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சலூனுக்குள் 2 வாலிபர்களும் சுட்டுக் கொல்லப்படும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இன்று காலை அந்த கேமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com