என் மலர்
செய்திகள்

20 ஆண்டு நட்பை பிரித்த 10 ரூபாய் - நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
வெறும் 10 ரூபாய்க்காக நண்பரை கத்திரியால் குத்திக் கொலை செய்த சலூன் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர். #UttarPradesh #10rupees
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் பிரேம்பால் கேங்க்வார் (42). இவர் தனது நண்பரின் சலூன் கடைக்கு மகன்களுடன் முடிவெட்டச் சென்றார்.
முடிவெட்டிய பிறகு, பணம் கொடுக்கும்போது 10 ரூபாய் குறைத்துக் கொள்ளும்படி பிரேம்பாலுக்கும், அஹிபரன் பாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அஹிபரன் பால் தனது கையில் இருந்த கத்தரியால் பிரேம்பாலை சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த பிரேம்பாலின் மகன்கள் லகான், விபினையும் தாக்கினார். அதன்பின் அஹிபரன் பால் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

கத்திரியால் குத்தப்பட்டு ரத்த் வெள்ளத்தில் கிடந்த பிரேம்பால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சலூன் கடைக்காரரை தேடி வருகின்றனர்.
20 ஆண்டு கால நட்பு வெறும் 10 ரூபாயில் பிரிந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #UttarPradesh #10rupees
Next Story






