என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேட்டூர் அணைக்கு கடந்த 2 வாரமாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.52 அடியாக உயர்ந்து காணப்பட்டது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 2 வாரமாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
அதே நேரம் நீர்வரத்தை விட பாசனத்துக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.52 அடியாக உயர்ந்து காணப்பட்டது. நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 395 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 77.73 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும்.
- தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 28 மற்றும் 29-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும்.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27-ந்தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 28 மற்றும் 29-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இளம்பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினார்.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை அருகே சந்திரா நகரில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத் தக்க இளம்பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே அவர் தன்னுடன் பள்ளியில் படித்த சித்திக்ராஜா (20) என்பவருடன் நட்பாக பழகி வந்து உள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாத காலமாக சித்திக் ராஜாவுடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து சித்திக் ராஜா இளம் பெண்ணை அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்ச்சியாக அவதூறாக பேசியதோடு, மனரீதியிலான தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனாலும் இளம்பெண் அதனை கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி காலை வழக்கம் போல் ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்கு வந்த இளம் பெண் பணியில் இருந்தார். அப்போது அங்கு தனது நண்பருடன் வந்த சித்திக் ராஜா தன்னை காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த இளம்பெண் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு கூறி எச்சரித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சித்திக் ராஜா, இளம்பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த அந்த பெண் தனது இருக்கையில் இருந்து பின்புறமாக தரையில் விழுந்தார்.
இருந்தபோதிலும் கொலை வெறியுடன் தாக்கியபோது, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த இளம் பெண்ணை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை பார்த்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய ஒத்தக்கடையைச் சேர்ந்த சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பர் டெம்போ ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணை யின்போது தப்பிக்க முயற்சி செய்த சித்திக்ராஜா தவறி விழுந்தபோது அவருக்கு கை எலும்பு முறிந்தது.
பின்னர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவருக்கு மாவுக் கட்டு போடப்பட்டது. தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை மீண்டும் ஏறி வருகிறது. கடந்த 17-ந்தேதி வரை அதன் விலை குறைந்து வந்து, இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்த நிலையில், தற்போது அதன் விலை 'கிடுகிடு'வென ஏறி வருகிறது.
கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதன் பின்னர் விலை அதிகரித்து 19-ந்தேதி ரூ.56 ஆயிரத்தையும், 21-ந்தேதி ரூ.57 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை நேற்று முன்தினமும் அதிகரித்தது.
நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் மட்டும் சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 920 உயர்ந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.57 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
23-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
22-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800
21-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,160
20-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-11-2024- ஒரு கிராம் ரூ. 101
23-11-2024- ஒரு கிராம் ரூ. 101
22-11-2024- ஒரு கிராம் ரூ. 101
21-11-2024- ஒரு கிராம் ரூ. 101
20-11-2024- ஒரு கிராம் ரூ. 101
- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
- இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
இன்று காலை 10 மணி வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இதனால் இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய கூட்டணி.
- 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என்றார்.
நாகை:
நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. கூட்டணி உடையாதா என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி.
கடந்த 3 நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கூட்டணிக்கு சேர்பவர்கள் ரூ.200 கோடி கேட்கிறார்கள்; 20 சீட் கேட்கிறார்கள் என கூறுகிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர்.
இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதாலும் அவருக்கு வயிற்றெரிச்சல்.
வரும் 2026 தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை மக்கள் அளித்தார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என தெரிவித்தார்.
- பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம்.
ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கனிமொழி 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழ்நாட்டின் கலாசார திருவிழாவான பொங்கல் அன்று சி.ஏ. முதல்நிலை தேர்வுகளை நடத்தும் ஐ.சி.ஏ.ஐ.ன் (ICIA) முடிவு, நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். தமிழ் மரபுகள் மற்றும் பிராந்திய சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தை இந்த உணர்வில்லாத செயல் பிரதிபலிக்கிறது. தேர்வு தேதியை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசு தமிழர் உணர்வுகளை உண்மையாக மதிக்கும் பட்சத்தில், தேர்வு தேதியை மாற்றியமைக்க ஐ.சி.ஐ.ஏ.வை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். நமது கலாசார பன்முகத்தன்மையை குலைக்கும் செயல்களை நிறுத்திவிட்டு, பெரும்பான்மையான தமிழர் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டிய நேரம் இது.
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார்.
- தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனான எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.
முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார்.
விருது பெற்ற நடிகர் சத்யராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி மிக மிக சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதற்கு மிகப்பெரிய உதாரணம், கோவைக்கு முதலமைச்சர் வந்திருந்தபோது இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது.
ஓய்வறியா சூரியன் என்று டாக்டர் கலைஞரை கூறுவார்கள். அதேபோல், ஸ்டாலின் அவர்களும் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றுபவர். ஓயாமல் உழைப்புக்கு சொந்தக்காரர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அவர்களின் தலைமையில் தினந்தினம் திட்டங்களை யோசித்து அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்து தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆராய்ந்து தொடர்ந்து நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
அதுதான் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனான எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.
நான் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடிக்கிறேன். ஒவ்வொறு ஊருக்கும் சென்றுவிட்டு வரும்போது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து தெரிகிறது.
அதிகபட்சமாக, அந்த மாநிலங்களின் தலைநகர் மட்டும் ஓகோ என்று இருக்கும். ஆனால், தலைநகரைவிட்டு பிற இடங்களுக்கு செல்லும்போதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்னவென்று புரியும்.
தமிழ்நாட்டை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால், இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களில் இருந்து ஏன் வேலை தேடி வருகிறார்கள் என்றால், இரண்டு விஷயம்.
தமிழ்நாட்டின் வாழ்க்கைதரம் உயர்ந்துவிட்டது. அவர்களின் வாழ்க்கை தரம் குறைவாக இருக்கிறது. நம் மக்கள் நன்றாக படித்து எங்கேயோ சென்றுவிட்டனர்.
1967க்கு பிறகு, திராவிட கருத்தியல் கூடிய ஆட்சியில் தமிழ்நாடு சிறப்பாக நடத்த ஏய்திவிட்டது. அதனால்தான், தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு திராவிட கருத்தியலை போதிக்கவேண்டும்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளாலும், கலைஞரின் சிந்தனைகளாலும், செயல் திட்டங்களாலும்தான் தமிழ்நாட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று வட மாநில தொழிலாளர்கள் அவர்களின் மாநிலத்தில் சொல்ல வேண்டும்.
சிறப்பான முதல்வர் கையில் இருந்து கலைஞர் விருது பெற்றதில் பெருமைக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
- நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
எந்த பண்பாட்டு தாக்குதல் நடந்தாலும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு நிலைத்து நிற்க தமிழின் வலிமையும், நமது பண்பாட்டின் சிறப்பும்தான் காரணம்.
திரைப்படத்தில் பெரியாராக வாழ்ந்து காட்டியவர் நடிகர் சத்யராஜ்.
திராவிடமே தமிழுக்கு அரண் என பேசியவர் சத்யராஜ், தான் நடிகராக ஆனதற்கு கலைஞர் தான் காரணம் என கூறுபவர் சத்யராஜ்.
கலைஞர் பேசினாலே அதில் இசை, நயம் இருக்கும். கலைஞர் பொதுக் கூட்டங்களில் பேசும்போது நாடக தமிழை பார்க்கலாம்.
இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கு உண்டு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திட்டமிட்ட பழிவாங்கும் போக்கை ஆளுநர் கைவிட வேண்டும்.
- துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்ததை அடுத்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கை ஆளுநரின் பழிவாங்கும் செயல் என்றும் துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ( டிசம்பர்12), திடுமென அவரைப் பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
2017 - 2018ம் ஆண்டில் நடந்த நாற்பது பேருக்கான பேராசிரியர் பணிநியமனங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றாலும், அவர்களின் "தகுதிகாண் பருவம்" நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் (சிண்டிகேட்) ஒப்புதலுடன் அவர்களுக்கான பணிநிரந்தர ஆணையை வழங்கியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்னும் நிபந்தனையுடன் தான் இந்த ஆணையை அவர் வழங்கியுள்ளார். இந்த பணிநிரந்தர நடவடிக்கைக்கு எதிராகவே ஆளுநர் துணைவேந்தரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்.
பணிநியமனத்துற்கும் தற்போதைய துணைவேந்தருக்கும் தொடர்பில்லை. தகுதிகாண் பருவம் நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் முழுமையான ஒப்புதலுடன்தான் பணிநிரந்தரம் செய்துள்ளார். அதுவும் நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது அதற்கேறப பணிநிரந்தர ஆணை மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்கிற நிபந்தனையுடன்தான் அவ்வாணையை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், ஆட்சிமன்றக் குழுவின்ஒப்புதலைப் பெறாத ஒரு விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு ஆளுநர் கோரிய விளக்கம் அளிக்கவில்லை என்று அவர்மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆளுநர் அவர்களின் இந்த நடவடிக்கை திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் நடவடிக்கையே ஆகும்.
முனைவர் திருவள்ளுவன் அவர்கள் பல்கலைக் கழகத்தில் இயங்கும் சில சாதியவாத ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலுக்குப் பணியாமல் நேர்மைத் திறத்தோடு துணிவாக தனது கடமைகளை ஆற்றினார் என்பதும்; திராவிட இலக்கியங்கள் மற்றும் பொதுவுடைமை சிந்தனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, பல்வேறு நிகழ்வுகளைப் பல்கலைக் கழக வளாகத்தில் ஒருங்கிணைத்தார் என்பதும்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கொண்டு காணொளி வழியாக (வீடியோ கான்ஃபரன்ஸ்), பொதுவுடைமை 'கவிஞர் தமிழ்ஒளி' அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்ததுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார் என்பதும்; ஆளுநரின் விருப்பறிந்து துணைவேந்தர் இயங்கவில்லை என்பதும் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்குக் காரணமெனத் தெரியவருகிறது.
திராவிட அரசியலுக்கும் திமுக அரசுக்கும் ஆதரவாகவே துணைவேந்தர் செயல்படுகிறார் என அவருக்கு எதிரான சக்திகள் தொடர்ந்து கோள்மூட்டியதையடுத்து, ஆளுநர் அவர்கள் ஆத்திரம் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எனவே, இத்தகைய பழிவாங்கும் போக்கை கைவிட்டு, துணைவேந்தர் மீதான நடவடிக்கையை அவர் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
- ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமை எழுச்சி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எம்ஜிஆர், ஜானகி இருவருக்கும் நூற்றாண்டு விழா எடுத்த பாக்கியம் எனக்கு கிடைத்தது.
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த திரைத்துறையினருக்கு நன்றி.
எம்ஜிஆர், ஜெயலலிதா சந்தித்த பிரச்சினைகளை நாமும் சந்தித்து கொண்டிருக்கிறோம்.
எம்ஜிஆருக்காக திரைத்துறை வாழ்க்கையை துறந்தவர் ஜானகி, பல்வேறு சோதனையான காலக்கட்டத்தில் எம்ஜிஆர் உடன் இருந்தவர்.
அதிமுக எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றி பெற்றது தான் வரலாறு.
அதிமுக அழியும் என்ற எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.
- அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.
அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஜானகி அம்மை யாரின் உருவப் படத்தை திறந்து வைத்தார். இந்த படம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகி அம்மையாருடன் பயணித்த நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி, உள்ளிட்ட வர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன.
அதன்படி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உரையாற்றினார். அப்போது, தான் அனைவருடன் இருப்பதாகவும், அனைவரையும் நலம் விசாரித்து சில நிமிடங்கள் பேசுவது போல் வீடியோ உருவவாக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். தற்போது பேசுவதை போல் உருவாக்கப்பட்ட வீடியோ நிறைவுற்றதும், அங்கிருந்த அ.தி.மு.க. கட்சியினர் வீடியோவை மீண்டும் போடச் சொல்லி ஒன்ஸ் மோர் கேட்டனர். இதனால் வீடியோ மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.






