எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருப்பது நடக்காது: உதயநிதி ஸ்டாலின்

திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய கூட்டணி. 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என்றார்.
எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருப்பது நடக்காது: உதயநிதி ஸ்டாலின்
Published on

நாகை:

நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க. கூட்டணி உடையாதா என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி.

கடந்த 3 நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கூட்டணிக்கு சேர்பவர்கள் ரூ.200 கோடி கேட்கிறார்கள்; 20 சீட் கேட்கிறார்கள் என கூறுகிறார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர்.

இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதாலும் அவருக்கு வயிற்றெரிச்சல்.

வரும் 2026 தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை மக்கள் அளித்தார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com