என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • விவசாயிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கிபாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று 3-வது நாளாக தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் இன்று விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், உண்ணாவிரத பந்தலில் கருப்புக் கொடி ஏற்றியும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது " சாலையோரமாக எண்ணெய் குழாய்களை கொண்டு செல்லும்படி போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. எண்ணெய் குழாய் அமைப்பதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் எண்ணெய் குழாய்களை சாலையோரமாக பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.
    • லாரிக்கு பாதுகாப்பாக ஒரு சொகுசு காரும் வந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22-ந்தேதி தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேராவூரணி அருகே முடச்சிக்காட்டில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கிருந்த பாலத்தில் லாரியில் இருந்து, பெரிய பெரிய பொட்டலங்களை 3 பேர் காரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, கார் மற்றும் லாரியை சோதனை செய்ததில், சுமார் 330 கிலோ அளவிலான கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் லாரி டிரைவரான தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதுார் ஊத்துமலையை சேர்ந்த பெரமராஜ் (வயது 34), பேராவூரணி அருகே காரங்குடாவை சேர்ந்த அண்ணாதுரை (44), அம்மணிசத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்து கைது செய்தனர்.

    இதில் தஞ்சாவூர் விளார் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பையா (52) என்பவர், ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் அருகே அனகப்பள்ளியில் கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும், இதற்கு தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான படகை ஏற்பாடு செய்திருந்ததும் தெரியவந்தது.

    ஆந்திராவில் இருந்து லாரி டிரைவர் பெரமராஜ் மூலம் டூல்ஸ் பாக்ஸ் என்பது போல ஒரு பெட்டியை உருவாக்கி, அதை லாரியின் அடியில் பொருத்தி அதில் கஞ்சாவை பதுக்கி தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்கு வருவதற்காக லாரிக்கு கர்நாடக பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி உள்ளனர். பிறகு, தமிழக எல்லையில் இருந்து சென்னை, விழுப்புரம் வரை சென்னை பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி உள்ளனர். லாரிக்கு பாதுகாப்பாக ஒரு சொகுசு காரும் வந்துள்ளது.

    பின்னர், திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு வரும் போது, லாரியின் உண்மையான பதிவெண் நம்பர் பிளேட்டை பயன்படுத்தி, பேராவூரணியில் வந்து கஞ்சாவை காரில் மாற்றி உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து 330 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அண்ணாதுரைக்கு சொந்தமான 3 படகுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கருப்பையா தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி. ஷனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி உள்ளிட்டோர் கஞ்சா கடத்தல் கும்பலிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதையடுத்து தஞ்சை விளார் சாலையில் உள்ள கருப்பையா வீடு மற்றும் தஞ்சை புதுப்பட்டினம் பகுதியில் உள்ள அவரது உறவினர் ஒருவர் ஆகியோர் வீடுகளில் பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து, இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என விசாரித்தனர். இதையடுத்து ரூ.37.50 லட்சம் பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    மேலும், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கருப்பையாவை தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் மேலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சையில் நடந்த இந்த அதிரடி சோதனை சம்பவம் டெல்டா பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு.
    • சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

    அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை, இந்திய பெருங்கடலின் மத்திய பகுதிகளில் இன்று காலை 5.30 மணி அளவில் நிலை கொண்டது.

    இது மேலும் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 8.30 மணியளவில் வலுவடைந்தது. இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மாலையில் இருந்து மழை தொடங்கும். இன்று முதல் 27-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

    28 மற்றும் 29-ந்தேதிகளில் ஒருசில மாவட்டங்க ளில் கன மழை பெய்யும். 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் இன்று பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம்.
    • போராட்டத்தால் நாமக்கல்லில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகருக்குள் வரும் வெளியூர் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராமல் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்கிறது.

    இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் நாமக்கல் நகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

    இதில் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் மருந்து கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை நாமக்கல் நகரில் கடைகள் திறக்கப்படவில்லை. நாமக்கல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், நாமக்கல் கோட்டை பகுதியில்உள்ள கடைகள், ஆஞ்சநேயர் கோவில் அருகாமையில் உள்ள கடைகள், பூங்கா ரோடு, தாலுகா அலுவலகம் அருகாமையில் உள்ள கடைகள், மின்சார வாரியம் அருகில் உள்ள கடைகள், மருத்துவமனை அருகில் உள்ள கடைகள், திருச்சி- நாமக்கல் ரோடு, நாமக்கல்- துறையூர் ரோடு, மோகனூர்- சேந்தமங்கலம் ரோடு, சேலம்- நாமக்கல் ரோட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் மளிகை கடைகள், மருந்து கடைகள், ெஜராக்ஸ் கடைகள், எலக்ட்ரிக்கல் கடை, செல்போன் கடை, நகை கடைகள், பாத்திர கடைகள், ஆட்டோ மொபைல், பழைய இரும்பு கடைகள் என 3000 -க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. முட்டை விற்பனை கடைகள், பேக்கரி கடைகள், பழக்கடைகளும் திறக்கப்பட வில்லை.

    இதேபோல் நாமக்கல் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், மருந்து வணிகர்கள் தங்களது கடைகளை திறக்கவில்லை. இந்த கடையடைப்பு போராட்டத்தால் நாமக்கல்லில் இன்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் தங்கள் தொழில்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை.
    • பொதுமக்கள் எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொம்மிடி அருகே கோட்டமேடு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22-ந்தேதி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே பொம்மிடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் முருகனிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கோட்டைமேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனால் எந்நேரமும் கடைக்கு மதுபாட்டில்களை கொண்டு வரக்கூடும் என கருதி நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் அப்பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
    • தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மாலையில் இருந்து மழை தொடங்கும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்று மாலைக்கு பின் மழை படிப்படியாக அதிகரிக்கும். டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மாலையில் இருந்து மழை தொடங்கும். இன்று முதல் 27-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

    28 மற்றும் 29-ந்தேதிகளில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும். 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

    • சென்னையில் நடந்த இந்நிகழ்ச்சியில் கிஸிக் பாடலை படக்குழு வெளியிட்டனர்.
    • நீங்கள் திரைத்துறையில் இருப்பவர்கள் யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா

    தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ள நிலையில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா பீகாரில் வைத்து பிரம்மாண்டமாக கடந்த வாரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அதன் நடிகர்கள் ஈடுபட்டுள்ளனர். புஷ்பா ஒன்றில் அல்லு அர்ஜூன் காதலியாக நடித்த பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா இரண்டாம் பாகத்தில் அவருக்கு மனைவியாக நடித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் கிஸிக் பாடலை படக்குழு வெளியிட்டனர். விழாவில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, நெல்சன் திலிப்குமார் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது மேடை ஏறிய படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவிடம் தொகுப்பாளர் கேள்வி ஒன்றை கேட்டார். அதாவது, நீங்கள் திரைத்துறையில் இருப்பவர்கள் யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா அல்லது திரைத்துறைக்கு வெளியிலிருந்து மாப்பிளை தேடுகிறீர்களா என்று கேள்வி கேட்டார்.

    இதற்கு சிரித்தபடி பதிலளித்த ராஷ்மிகா, எல்லோருக்கும் அதைப் பற்றி தெரியும் என்று சிம்பிளாக பதிலளித்தார். முன்னதாக நடிகர் விஜய் தேவரக்கொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம், பெல்லி சூப்புலு உள்ளிட்ட படங்கள் மூலம் உச்சத்துக்கு வந்த ராஷ்மிகா அவருடன் காதலில் உள்ளார் என்று கூறப்பட்டது.

     

     

     இவர்களின் ரிலேஷன்ஷிப் குறித்து அரசல் புரசலாக திரை வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு இருந்து வரும் நிலையில் தற்போது தனது சாய்ஸ் குறித்து அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருப்பது அவர்களின் உறவை உறுதிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் புளகாங்கிதத்தில் உள்ளனர். 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
    • தமிழக அரசு தனி இணைய தளத்தை உருவாக்கி, பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

    நவம்பர் 25... சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

    இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.

    பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அதனை நம்பியுள்ள ஏராளமானோர் வேலையிழந்து உள்ளனர்.

    மண்டபம்:

    இலங்கை கடலோர பகுதியில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதிதாக உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இலங்கை கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் உருவாகி இருக்கிறது. இதன் எதிரொலியாக அதிக கனமழையும், மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் விசைப்படகுகளை ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு நங்கூரமிட்டு நிறுத்தவும் நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தவும் மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை கரை பகுதியிலும், கடலிலும் போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

    இந்த அறிவிப்பினை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அதனை நம்பியுள்ள ஏராளமானோர் வேலையிழந்து உள்ளனர். கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

    • விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பு.

    புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டி னம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்க ளில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வசதி பெறுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

    இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வில்லை. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து பருவ நிலை மாற்றம் குறித்து மீன்வளத் துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து ள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5500 கனஅடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது.
    • நாம் தமிழர் கட்சியில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினர்.

    இந்த நிலையில் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்து கொண்டனர்.

    தி.மு.க.வில் இணைந்தவர்களை, அமைச்சர் செந்தில்பாலாஜி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    அதனை தொடர்ந்து ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாங்கள் சரியான தலைமை உள்ள கட்சியில் இணைய வேண்டும் என நினைத்தோம்.

    அதன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு சரியான, வலுவான தலைமை உள்ள தி.மு.கவில் தங்களை இணைத்து கொண்டுள்ளோம்.

    தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது. அது தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. அவரது சிரித்த முகத்துடனான பண்பு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. அது எங்களையும் ஈர்த்துள்ளது.

    அதன் காரணமாக நாங்கள் தி.மு.கவில் இணைந்துள்ளோம். நாம் தமிழர் கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்களுடன் பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் விரைவில் தி.மு.கவில் இணைவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், மாநில மாணவரணி தலைவர் வக்கீல் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல் உள்பட பலர் உள்ளனர். 

    ×