என் மலர்
நீங்கள் தேடியது "பெண் தாக்குதல்"
- இரும்பு கம்பியை எடுத்து வந்து ரம்யாவை தாக்க முயன்றார்.
- 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை உருமாண்டம்பாளையம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை ரம்யா வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டிற்கு எரிவாயு சிலிண்டர் போடுவதற்காக ஆட்டோ ஒன்று வந்தது.
அப்போது அந்த சாலையில் ஆட்டோ வர முடியாதபடி இருசக்கர வாகனம் ஒன்று நின்றிருந்தது. குறுகலான சாலை என்பதால் 2 வாகனங்கள் வரமுடியாது. இதை பார்த்த அந்த பெண், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம், வாகனத்தை எடுத்து அருகே உள்ள வீட்டின் முன்பு சாக்கடை மேல் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் சிலாப்பில் நிறுத்துமாறு கூறியதாக தெரிகிறது.
இவர் கூறியதை அந்த வீட்டின் உரிமையாளரான செங்காளியப்பன் (வயது60), அவரது மகன் ராஜேஷ்(37), ஆகியோர் யாரை கேட்டு எங்களது வீட்டின் வாசலில் உள்ள சிலாப் மேல் வண்டியை நிறுத்த கூறினாய்? என ரம்யாவிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளாலும் வசைபாடினர்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜேஷ் இரும்பு கம்பியை எடுத்து வந்து ரம்யாவை தாக்க முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து, ரம்யாவை காப்பாற்றி அங்கிருந்து அனுப்பினர்.
அவர் அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு செங்காளியப்பனின் உறவினரான காப்பீடு ஏஜென்சி முகவரான சுந்தர்ராஜன்(50) வந்தார்.
அவர் இங்கு என்ன நடந்து என தெரியாமேலேயே வந்த வேகத்தில் ரம்யாவை தனது காலால் எட்டி உதைத்தார். மேலும் ரம்யாவின் கையை பிடித்து முறுக்கி, அவரை கீழே தள்ளி தாக்கினார்.
இதை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினர், எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் ஓடி சென்று தடுத்தார். ஆனாலும் அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். பெண்ணை தாக்கும் வீடியோவை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ரம்யா கூறியதாவது:-
செங்காளியப்பன் எப்போதும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் என்று கூட பாராமல் பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும் செங்காளியப்பனின் மகன் ராஜேஷ் என்னை அடிக்க இரும்பு ராடை எடுத்து வந்ததாகவும், சுந்தரராஜன் அடித்தபோது, அருகில் இருந்தவர்கள் என்னை காப்பாற்றினர். இல்லையென்றால் அவர்கள் என்னை கொன்று இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணை தாக்கிய சுந்தர்ராஜன், செங்காளியப்பன், அவரது மகன் ராஜேஷ் ஆகிய 3 பேர் மீதும் பொது இடத்தில் பெண்ணை மானபங்க படுத்துதல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண்ணை தாக்கிய சுந்தர்ராஜன் வெள்ளகிணர் பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார்.
- படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தவசிகனி, தொழிலாளி.
இவரிடம் அப்பகுதியில் உள்ள பீடி கடை ஒன்றில் வேலை பார்க்கும் விதவை பெண் ஒருவர் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
சம்பவத்தன்று அந்த பெண் தான் வாங்கிய கடன் தொகையை தவசிக்கனியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். அப்போது அவர், கடன் தொகையை தர வேண்டாம், எனது ஆசைக்கு இணங்கினால் போதும் என கூறி உள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தவசிக்கனி நேற்று மாலை அந்த பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தவசிக்கனியை தேடி வருகின்றனர்.
- பயந்து நடுங்கிய சாந்தியிடம் கொள்ளையர்கள் நகை-பணத்தை தருமாறு கேட்டனர்.
- சந்தோசும் அவனது கூட்டாளிகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையையொட்டிய சர்வீஸ் சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் வாலிபர்கள் சுற்றி வந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மெரினாவில் தூங்குபவர்களிடம் பணம் பறிப்பது, காதல் ஜோடியை மிரட்டி செல்போன்களை பறித்துச் செல்வது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மெரினா கடற்கரையை பகுதியில் நேற்று நள்ளிரவு பரபரப்பான கொள்ளை சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாந்தோம் சர்ச்சுக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியையொட்டி உள்ளது லூப் ரோடு. இந்த சாலையில் நேற்று இரவு சாந்தி என்ற வயதான பெண் ஆட்டோவில் பயணம் செய்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் இவர் சென்று கொண்டிருந்தபோது மழை பெய்தது.
இதனால் ஆட்டோவை சாலையோரமாக டிரைவர் நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் மழை பெய்வதால் சிறிது நேரம் ஆட்டோவில் ஒதுங்கிவிட்டு செல்கிறோம் என்று கூறினர். இதற்கு ஆட்டோ டிரைவரும் மூதாட்டி சாந்தியும் சம்மதித்தனர்.
இதையடுத்து ஆட்டோவில் ஏறி அமர்ந்த 4 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்ட தொடங்கினார்கள்.
முதலில் ஆட்டோ டிரைவரிடம் சென்று "பேசாமல் இங்கிருந்து ஓடி விடு... சத்தம் போட்டால் நீ காலி" என்று எச்சரித்தனர். இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் எதுவும் செய்யாமல் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதைதொடர்ந்து பயந்து நடுங்கிய சாந்தியிடம் கொள்ளையர்கள் நகை-பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் அவர் தரமறுத்து கூச்சல் போட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளை கும்பல் சாந்தியின் முகத்தில் ஓங்கி கத்தியால் குத்தியது. பின்னர் கழுத்து பகுதியிலும் கொள்ளையர்கள் கீறல் போட்டனர். இதனால் நிலைகுலைந்த சாந்தி உயிர் பயத்தில் நடுங்கினார். அப்போது தங்க கம்மல், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை கும்பல் பறித்தது.
பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதை தொடர்ந்து சாந்தி, திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் கொள்ளையர்களை விரட்டினர்.
கொள்ளையர்களில் 3 பேர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் ஒருவன் மட்டும் மோட்டார் சைக்கிளில் ஏற முடியாமல் தவித்தான். அவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க கடலில் குதித்தான்.
ஆனால் காவலர்கள் விடாமல் விரட்டிச் சென்று கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் கடலில் இருந்து குண்டுகட்டாக கையையும், காலையும் பிடித்து கரைக்கு தூக்கி வந்தனர்.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பிடிபட்ட கொள்ளையனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவனது பெயர் சந்தோஷ் என்பது தெரியவந்தது. அயனாவரம் பகுதியை சேர்ந்த இவன்மீது கொலை முயற்சி வழக்கு ஒன்றும் உள்ளது. இந்த வழக்கில் சிறை சென்ற இவன் சமீபத்தில்தான் வெளியில் வந்துள்ளான்.
இந்த நிலையில்தான் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டு உள்ளான். தப்பி ஓடிய இவனது கூட்டாளிகள் யார்-யார்? என்பது பற்றி சந்தோஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் தலைமறைவான கொள்ளையர்கள் 3 பேரும் யார்-யார்? என்பது தெரிய வந்தது. அவர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார் கைது செய்ய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சந்தோசும் அவனது கூட்டாளிகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளனர்.
அப்போதுதான் சாந்தோம் லூப்ரோடு பகுதியில் ஆட்டோவில் பெண் ஒருவர் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து அருகில் சென்று பேச்சு கொடுத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசில் சிக்கியுள்ள கொள்ளையர்கள் சந்தோஷ், சூர்யா இருவரையும் விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் மெரினா பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
- சம்பவத்தன்று அசோக் செல்போன் மூலம் லட்சுமியை தொடர்பு கொண்டு அரசு வேலைக்காக ரூ.5 லட்சம் வைத்துள்ளேன்.
- விடுதி அறையில் பெண்ணை அடைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நாச்சியார்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லட்சுமி (வயது45). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மணி இறந்து போனார். இதனால் லட்சுமி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.
இதற்கிடையே நெய்வேலியை சேர்ந்த பிரபாகரன் மூலம் புதுவையை சேர்ந்த அசோக் என்பவர் லட்சுமிக்கு அறிமுகமானார். அப்போது அசோக் தனக்கு அரசு வேலை வாங்கி தர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதால் லட்சுமி ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து ரூ.35 ஆயிரம் பெற்றார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அசோக் செல்போன் மூலம் லட்சுமியை தொடர்பு கொண்டு அரசு வேலைக்காக ரூ.5 லட்சம் வைத்துள்ளேன். அந்த பணத்தை புதுவைக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைத்தார். அதன்படி லட்சுமி அன்று இரவு புதுவைக்கு வந்தார்.
அப்போது திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு லட்சுமியை அசோக் அழைத்து சென்றார். அதனை நம்பி லட்சுமி விடுதி அறைக்கு சென்ற போது அங்கிருந்த அசோக்கின் நண்பர்கள் பிரபாகரன், சூர்யா, முருகன், சொர்ணராஜ் மற்றும் புவனேஸ் ஆகியோர் கொண்ட கும்பல் விடுதியை பூட்டிக்கொண்டு அசோக் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு மிரட்டினர்.
மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த தடியால் லட்சுமியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். அதோடு பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். தொடர்ந்து 4 நாட்கள் அவர்கள் இதுபோல் விடுதி அறையில் அடைத்து வைத்து லட்சுமியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒருவேளையாக அந்த கும்பல் அசந்து இருந்த நேரத்தில் அவர்களிடமிருந்து தப்பிய லட்சுமி இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிவகாசி அருகே பெண்ணை தாக்கிய கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- இதுகுறித்து மகேசுவரி எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மகேசுவரி(36). இவரது கணவர் சுப்பிரமணியன். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மகேசுவரி கோபித்துக்கொண்டு சகோதரி வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் ஊர் திருவிழாவிற்கு வருமாறு உறவினர் மூலமாக சுப்பிரமணியன் அழைத்துள்ளார். மகேசுவரியும் சமாதானமாகி திருவிழாவிற்கு வந்துள்ளார். திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் சகோதரி வீட்டிற்கு செல்லுமாறு கூறி சுப்பிரமணியனின் தாய் ஜெயலட்சுமி மகேசுவரியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலட்சுமியும், சுப்பிரமணியனும் சேர்ந்து மகேசுவரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகேசுவரி எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில்புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார்த்திக் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
சென்னை,எம்.ஜி.ஆர்.நகர்,அடுத்த ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது32). இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்த்து வரும் இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.
கார்த்திக் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததால் இளம்பெண் அவரை பிரிந்தார். இந்த நிலையில் இளம்பெண் அப்பகுதியில் வேறு ஒரு வாலிபருடன் பேசிக் கொண்டு இருந்தார். இதனை கண்டு ஆத்திரமடைந்த கார்த்திக் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும், பணகுடி பகுதியில் வசிக்கும் ஒரு 44 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருகிறது.
- சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி கோரி காலனியை சேர்ந்தவர் சித்திரை செல்வன்(வயது 36). இவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் மீது பணகுடி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு பெண் புகார் அளித்தார். அதில் சித்திரை செல்வன் தனக்கு பணம் தராமல் ஏமாற்றியதோடு தன்னை தாக்கியதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் புகார் மனு அளித்துவிட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும், பணகுடி பகுதியில் வசிக்கும் ஒரு 44 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருகிறது. இதனால் அந்த பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் சித்திரை செல்வன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகவும், அவருக்கு ஆடம்பர செலவுக்காக பணம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால், அந்த பெண் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சித்திரை செல்வன் தன்னை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாகவும், அதனை திருப்பி தருமாறும் அந்த பெண் அவரிடம் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரை செல்வன், நேற்று அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை காட்டுப்பகுதியில் வைத்து தாக்கி, பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அவதூறாக பேசி மீண்டும் பணகுடியில் இறக்கி விட்டுள்ளார்.
இதில் காயம் அடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணகுடி போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது. திருச்சியில் விபத்தில் இறந்த அவர்களது பேட்ஜ் போலீஸ்காரர் ஒருவரின் குடும்பத்திற்கு வழங்குவதற்காக நண்பர்களிடம் பிரித்த ரூ.28 லட்சம் பணத்தை அவர் வழங்காமல் மோசடி செய்ததாக புகார் வந்தது. அதன்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- விருதுநகர் அருகே பெண்ணை தாக்கிய கள்ளக்காதலன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இதுகுறித்து முதலமைச்சர் தனிபிரிவில் புகார் கொடுத்தார்.
விருதுநகர்
திருத்தங்கல் புதிய ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வருபவர் மாலா பிரியதர்ஷினி (வயது42). இவர் கணவரை பிரிந்தவர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிவசந்திரன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர்.
அப்போது 16 பவுன் நகைகள், ரூ.4½ பணம் ஆகியவற்றை தொழில் தேவைக்காக மாலா பிரிய தர்ஷினியிடம் சிவகங்கர் வாங்கியுள்ளார். பல நாட்களாகியும் அதனை திருப்பித்தரவில்லை. அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் தட்டிக் கழித்து வந்துள்ளார். சந்தேகமடைந்த மாலா பிரியதர்ஷினி நகை, பணத்தை திருப்பித்தரும்படி சிவசங்கரிடம் வலியுறுத்தி யுள்ளார்.
இந்தநிலையில் சிவசங்கர் தனது உறவினர்கள் கார்த்தி, தேவி உள்பட 4 பேருடன் வந்து பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலா பிரியதர்ஷினி இது தொடர்பாக கள்ளக்குறிச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே திருத்தங்கல் வீட்டிற்கு வந்து அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் எனக்கூறி
- ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.
- உடனடியாக கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் இன்று காலை திடீரென கரடி ஒன்று புகுந்துள்ளது. தொடர்ந்து இந்த கரடி செய்வதறியாமல் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள தெருக்களில் ஓடியது.
இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 57) பெண்ணை அந்த கரடி தாக்கி உள்ளது.
இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பெண் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கரடியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக அந்த கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே கரடி ஊருக்குள் புகுந்து பொது மக்களை விரட்டிய காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
- காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இளம்பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினார்.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை அருகே சந்திரா நகரில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத் தக்க இளம்பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே அவர் தன்னுடன் பள்ளியில் படித்த சித்திக்ராஜா (20) என்பவருடன் நட்பாக பழகி வந்து உள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாத காலமாக சித்திக் ராஜாவுடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து சித்திக் ராஜா இளம் பெண்ணை அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்ச்சியாக அவதூறாக பேசியதோடு, மனரீதியிலான தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனாலும் இளம்பெண் அதனை கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி காலை வழக்கம் போல் ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்கு வந்த இளம் பெண் பணியில் இருந்தார். அப்போது அங்கு தனது நண்பருடன் வந்த சித்திக் ராஜா தன்னை காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த இளம்பெண் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு கூறி எச்சரித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சித்திக் ராஜா, இளம்பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த அந்த பெண் தனது இருக்கையில் இருந்து பின்புறமாக தரையில் விழுந்தார்.
இருந்தபோதிலும் கொலை வெறியுடன் தாக்கியபோது, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த இளம் பெண்ணை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை பார்த்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய ஒத்தக்கடையைச் சேர்ந்த சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பர் டெம்போ ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணை யின்போது தப்பிக்க முயற்சி செய்த சித்திக்ராஜா தவறி விழுந்தபோது அவருக்கு கை எலும்பு முறிந்தது.
பின்னர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவருக்கு மாவுக் கட்டு போடப்பட்டது. தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சிகரெட் தர மறுத்ததால் பெண்ணை தாக்கிய சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது 55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவரது கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பணம் தராமல் சிகரெட் கேட்டுள்ளனர். காளியம்மாள் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உருட்டுக்கட்டையால் காளியம்மாளை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மகனின் மோட்டார் சைக்கிளையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.
இதுகுறித்து காளியம்மாள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனியாபுரம், பெரியசாமி தெரு பாஸ்கரன் மகன் ஆப்ரகாம் (வயது 24), ஜே.ஜே நகர் பாலசுப்பிரமணியம் மகன் மணிகண்டன் ( 21), அவனியாபுரம், அம்பேத்கார் நகர் பாறைகனி மகன் அருண்குமார் ( 19), பிரசன்னா காலணியை சேர்ந்த 17 வயது சிறுவன், அவனியாபுரம், அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜா ( 39) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- நேற்று முருகனின் மனைவி சரிதா வீட்டின் முன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
- படுகாயம் அடைந்த சரிதா இது குறித்து திருநாவலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கோட்டியாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 45) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கும் அருகிலுள்ள முருகன் வீட்டாருக்கும் இடையே முன்னதாகவே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகனின் மனைவி சரிதா வீட்டின் முன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குப்புசாமியின் மனைவி அலமேலு வந்து ஏன் என் வீட்டின் முன் வேலை செய்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் சரிதா மற்றும் அலமேலுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டனர்.
அப்போது அங்கு வந்த குப்புசாமி மனைவி அலமேலுடன் முருகனின் மனைவி சரிதாவை தகாத வார்த்தையால் திட்டி அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த சரிதா இது குறித்து திருநாவலூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து குப்புசாமி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள அலமேலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.






