பெண்ணை தாக்கிய கணவர், மாமியார் மீது வழக்கு

சிவகாசி அருகே பெண்ணை தாக்கிய கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து மகேசுவரி எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
பெண்ணை தாக்கிய கணவர், மாமியார் மீது வழக்கு
Published on

விருதுநகர்

சிவகாசி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மகேசுவரி(36). இவரது கணவர் சுப்பிரமணியன். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மகேசுவரி கோபித்துக்கொண்டு சகோதரி வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் ஊர் திருவிழாவிற்கு வருமாறு உறவினர் மூலமாக சுப்பிரமணியன் அழைத்துள்ளார். மகேசுவரியும் சமாதானமாகி திருவிழாவிற்கு வந்துள்ளார். திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் சகோதரி வீட்டிற்கு செல்லுமாறு கூறி சுப்பிரமணியனின் தாய் ஜெயலட்சுமி மகேசுவரியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலட்சுமியும், சுப்பிரமணியனும் சேர்ந்து மகேசுவரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகேசுவரி எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில்புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com