திருநாவலூர் அருகே இடத் தகராறில் பெண் மீது தாக்குதல்

நேற்று முருகனின் மனைவி சரிதா வீட்டின் முன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.படுகாயம் அடைந்த சரிதா இது குறித்து திருநாவலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
திருநாவலூர் அருகே இடத் தகராறில் பெண் மீது தாக்குதல்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கோட்டியாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 45) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கும் அருகிலுள்ள முருகன் வீட்டாருக்கும் இடையே முன்னதாகவே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகனின் மனைவி சரிதா வீட்டின் முன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குப்புசாமியின் மனைவி அலமேலு வந்து ஏன் என் வீட்டின் முன் வேலை செய்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் சரிதா மற்றும் அலமேலுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டனர்.

அப்போது அங்கு வந்த குப்புசாமி மனைவி அலமேலுடன் முருகனின் மனைவி சரிதாவை தகாத வார்த்தையால் திட்டி அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த சரிதா இது குறித்து திருநாவலூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து குப்புசாமி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள அலமேலுவை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com