ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- தொழிலாளிக்கு வலைவீச்சு

படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- தொழிலாளிக்கு வலைவீச்சு
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தவசிகனி, தொழிலாளி.

இவரிடம் அப்பகுதியில் உள்ள பீடி கடை ஒன்றில் வேலை பார்க்கும் விதவை பெண் ஒருவர் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

சம்பவத்தன்று அந்த பெண் தான் வாங்கிய கடன் தொகையை தவசிக்கனியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். அப்போது அவர், கடன் தொகையை தர வேண்டாம், எனது ஆசைக்கு இணங்கினால் போதும் என கூறி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த தவசிக்கனி நேற்று மாலை அந்த பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தவசிக்கனியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com