என் மலர்
உள்ளூர் செய்திகள்
- லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
- அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது.
லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. அதன்படி, லுலு சூப்பர் ஃப்ரைடே மற்றும் லுலு பியூட்டி திருவிழா, அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது.

லுலு சூப்பர் ஃப்ரைடே: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை
எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளில் ஆச்சரியமூட்டும் தள்ளுபடியுடன் உங்கள் விடுமுறை ஷாப்பிங்கைத் தொடங்குங்கள்.
அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பதற்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சரியான பரிசுகளைக் கண்டறிவதற்கும் இது சரியான வாய்ப்பு.
தேதி: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை.
சலுகைகள்: பல்வேறு வகைகளில் 50% தள்ளுபடி வரை சலுகை.
லுலு பியூட்டி திருவிழா: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை

தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தொடர்பான பொருட்களுக்கு பிரத்யேக சலுகைகளுடன் அழகு சாதணங்களை அள்ளுங்கள்.
தேதி: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை
சலுகைகள்: அழகு சாதனப் பொருட்களில் 50% வரை தள்ளுபடி.
பியூட்டி திருவிழா போட்டிகள்: டிசம்பர் 7
டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் லுலு பியூட்டி ஃபெஸ்ட் கோ கிளாம் போட்டியில் உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். உற்சாகமான சவால்களில் பங்கேற்று, அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.
நிகழ்வு தேதி: டிசம்பர் 7
போட்டிகள்:
* மெஹந்தி போட்டி: அற்புதமான மெஹந்தி வடிவமைப்பை உருவாக்குங்கள்.
* நெயில் ஆர்ட்: உங்கள் நகத்தை படைப்பாற்றலுடன் பெயிண்ட் செய்யுங்கள்.
* ஐலைனர் சவால்: தலைசிறந்த ஐலைனர் வடிவமைப்புகளை உருவாக்கவும்.
நிகழ்வு தேதி: டிசம்பர் 7
தகுதி: 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்
பதிவு: நவம்பர் 28 ஆம் தேதி முதல் லுலு வாடிக்கையாளர் சேவை மேசையில் தொடங்குகிறது.
இந்த விழாக்காலத்தை லுலு ஹைப்பர் மார்க்கெட்டுடன் உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றவும். மேலும் விவரங்களுக்கு லுலு ஹைப்பர்மார்க்கெட் கோயம்புத்தூரின் சமூக ஊடக சேனலை பின்பற்றுங்கள்.
- வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது.
- தற்காலிக புயலாக மாறும் எனத் தெரிவித்த நிலையில் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது.
கடந்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 30ம் தேதி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
தற்காலிக புயலாக மாறும் எனத் தெரிவித்த நிலையில் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கோவில் நிர்வாகங்களுக்கு 39 அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
- உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
கோவில் யானைகளை பாராமரிப்பது தொடர்பாக, கோவில் நிர்வாகங்களுக்கு 39 அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
யானைகளை உறுதியான மண் அல்லது புல் தரையில் நிறுத்தி வைக்கவும், காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், யானையின் எடை, வயதுக்கு ஏற்ப உணவுகளை உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்க வேண்டும்.
யானையின் கால், நகக்கண், தந்தங்களில் தோக்கா மல்லி எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும்.
யானைக்கு வெப்பம் அதிகரிக்கும்போது, சங்கிலியால் கட்டி தேவையான உணவு, தண்ணீர் அருகில் வைக்க வேண்டும். மது அருந்தியவர்களை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது.
கோயில் யானைகள் அருகே பக்தர்களை அனுமதிக்கக் கூடாது. அருகே நின்று, செல்பி, புகைப்படம் எடுக்கவும் விடக் கூடாது.
உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
வாரத்திற்கு நான்கு முறையும், கோவை காலத்தில் தினமும் யானையை கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும்.
யானைக்கு தினமும் 10 கி.மீ தூரத்திற்கு நடைபயிற்சி அளிக்க வேண்டும் என அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
- விரைவில் ஃபெங்கல் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து இன்று அல்லது நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
புயல் உருவானாலும் பின்னர் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- 2010ல் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதியப்பட்டது.
- இந்த வழக்கில் கடந்த 2018 ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியினர் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனையடுத்து இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமார், இந்த வாசஹக்கில் 13 சாட்சியங்களிடம் விசாரணை முடிந்துள்ளது. ஆகவே வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.
பின்னர் சீமான் தரப்பில் ஆஜரான சங்கர், சாட்சிகள் விசாரணை தொடங்கி விட்டதால் நாங்கள் தொடர்ந்த இந்த வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீமான் மீது பதியப்பட்ட இந்த வழக்கை எவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- தேவனம்பட்டில் தனியார் பேருந்தில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது வழக்கம்.
- மஞ்சக்குப்பத்தில் அரசு பள்ளியில் போக்குவரத்து போலீசார் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்,
கடலூர்:
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் தனியார் பேருந்தில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது வழக்கம்.
அதேபோல் தனியார் பேருந்தில் மாணவன் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மஞ்சக்குப்பத்தில் அரசு பள்ளியில் போக்குவரத்து போலீசார் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் விபத்தில் உயிரிழந்த மாணவனின் தந்தை கலந்து கொண்டு பேசியதாவது-
பசங்களா தயவு செஞ்சி பஸ்ல ஏறுனா படியில நிக்காம உள்ள போயிடுங்க.. என் புள்ள போயிட்டான்பா உங்க காலுல விழுந்து கெஞ்சி கேக்குறேன் என்று மாணவர்கள் முன் கதறி அழுத தந்தையை அருகில் இருந்த காவல்துறையினர் தேற்றினர்.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5- ந்தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பட்டினப்பாக்கத்தில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் வடசென்னை தாதா நாகேந்திரன் உள்பட 28 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2 வாரங்களுக்கு முன் எழும்பூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று நடந்த முதல் கட்ட விசாரணையில், 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரவுடி நாகேந்திரன் தன்னை வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிடுமாறு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தனக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளதால் நீண்ட நேரம் பயணம் செய்ய முடியாது என மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரவுடி நாகேந்திரனை புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
- தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அந்த ஆய்வறிக்கையில்," பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்" எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தெற்கு ரெயில்வேயின் மூத்த அதிகாரி சவுத்ரி, பாம்பனில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே பாலத்தின் தரம் குறித்த தனது கருத்து மற்றும் பரிந்துரைகளை இந்திய ரெயில்வேக்கு அனுப்பியிருப்பதை நான் புரிந்துகொண்டேன்.
அவரது கண்காணிப்பின் பேரில் கீழே உள்ள முக்கிய பகுதிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். பாலம் கட்டும் போது அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது சில தூண்கள் மற்றும் மூட்டுகளில் கடல் அரிப்புக்கான அறிகுறிகள் உள்ளன.
மேலும், ரெயில் பாதையை கடந்து செல்லும் போது பெரும் சத்தம் ஏற்படுகிறது. வேலை கிட்டத்தட்ட முடிந்து, ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எதிர்வரும் நாட்களில் பாலத்தை பயன்படுத்தவிருக்கும் பல லட்சம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையரின் அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வடக்கு மாவட்ட செயலாளர் பெரியகுளம் ராமச்சந்திரன் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.
- சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பெரியகுளம் ராமச்சந்திரன் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.
இதேபோல், சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதுபோன்று, நாம் தமிழர் கட்சியில் இருந்து தினமும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்நிலையில், நா.த.க நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளனர்.
இதுகுறித்து வினோத் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசி வருகிறார்" என்றார்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 25-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது மேலும் வலுவடைந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யாமல் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிகமாக புயல் உருவாக கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாகே தமிழகத்தில் கரையை கடக்கும். தற்காலிக புயலாக மாறியபின் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். நவம்பர் 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தமிழகத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும்," என்று தெரிவித்தார்.
- த.வெ.க முதல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
- மாநாட்டிற்கு புறப்பட்டபோதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை விஜய் வழங்கினார்.
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று நடைபெற்ற த.வெ.க முதல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டிற்கு புறப்பட்டபோதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ் உள்பட திருச்சி, திருவண்ணாமலையை சேர்ந்த 6 பேருக்கு தலா ரூ.2 லட்சத்தை விஜய் வழங்கியுள்ளார்.
மேலும், குடும்ப சூழல் பொருத்து, சிலருக்கு கூடுதல் நிதி, இறந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவும் த.வெ.க. ஏற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- மேயர் பிரியா தலைமையில் சென்னை மாமன்ற உறுப்பினர் கூட்டம்.
- ரிப்பன் மாளிகையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு.
சென்னை மாமன்ற உறுப்பினர் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் நடுவே பா.ஜ.க.வை சேர்ந்த சென்னை 134 வது வார்டு கவுன்சிலர் உமா ஆனந்த், மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.
அப்போது அங்குள்ள தி.மு.க. கவுன்சிலர் சொக்கலிங்கம் என்பவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்காக கொடுக்குறீர்களா என கேட்டார். அதற்கு உமா ஆனந்த், நான் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றிக்காக கொடுக்குறேன். நீங்கள் வேண்டுமானால் உதயநிதி பிறந்த நாள் இனிப்பாக நினைத்துக்கொண்டு சாப்பிடுங்கள் என்று கூறினார். இதனால் அங்கு சிறிதுநேரம் சிரிப்பலை எழுந்தது.
ஏற்கனவே மாமன்ற கூட்டம் தொடங்கிய போது பிரியங்கா காந்தியின் வெற்றி குறித்து காங்கிரஸ் உறுப்பினர் திரவியம் உயர்வாக பேசும் போது, உமா ஆனந்த் தனக்கும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. வெற்றி குறித்து பேச அனுமதி வேண்டும் என்று கூறியதால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.






