இனிப்பு 1... காரணம் 2... சென்னை மாமன்ற கூட்டத்தில் கலகலப்பான சம்பவம்

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாமன்ற உறுப்பினர் கூட்டம்.ரிப்பன் மாளிகையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு.
இனிப்பு 1... காரணம் 2... சென்னை மாமன்ற கூட்டத்தில் கலகலப்பான சம்பவம்
Published on

சென்னை மாமன்ற உறுப்பினர் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் நடுவே பா.ஜ.க.வை சேர்ந்த சென்னை 134 வது வார்டு கவுன்சிலர் உமா ஆனந்த், மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

அப்போது அங்குள்ள தி.மு.க. கவுன்சிலர் சொக்கலிங்கம் என்பவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்காக கொடுக்குறீர்களா என கேட்டார். அதற்கு உமா ஆனந்த், நான் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றிக்காக கொடுக்குறேன். நீங்கள் வேண்டுமானால் உதயநிதி பிறந்த நாள் இனிப்பாக நினைத்துக்கொண்டு சாப்பிடுங்கள் என்று கூறினார். இதனால் அங்கு சிறிதுநேரம் சிரிப்பலை எழுந்தது.

ஏற்கனவே மாமன்ற கூட்டம் தொடங்கிய போது பிரியங்கா காந்தியின் வெற்றி குறித்து காங்கிரஸ் உறுப்பினர் திரவியம் உயர்வாக பேசும் போது, உமா ஆனந்த் தனக்கும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. வெற்றி குறித்து பேச அனுமதி வேண்டும் என்று கூறியதால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com