என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காப்பி வழங்க ஏற்பாடு.
    • குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் வழக்கத்தை விட ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    தினமும் அதிகாலை 4.30 மணி முதல் படிப்பாதை, யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோ விலுக்கு சென்றவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பழனி தேவஸ்தானம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மோர் கொடுக்கப்பட்டு வந்தது.

    தற்போது மழை மற்றும் கடும் குளிர் நிலவுவதால் மோருக்கு பதிலாக சுடச்சுட சுக்கு காப்பி இலவசமாக வழங்கப்படுகிறது. மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் இடும்பன் கோவில் அருகே தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு உள்ளிட்டவை சேர்த்து தயார் செய்து தொடர்ந்து வழங்கப்படுகிறது. தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கும், தேவைக்கேற்ப கூடுதலாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதேபோல் மலைக்கோவிலில் தினமும் காலை முதல் இரவு வரை 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்தது.
    • கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 19-ந்தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.

    இந்த விலை அடுத்த 2 நாட்களில் அதாவது 23-ந்தேதி (சனிக்கிழமை) ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ரூ.58 ஆயிரத்து 400-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,160-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,280-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720

    27-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,840

    26-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640

    25-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600

    24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-11-2024- ஒரு கிராம் ரூ. 98

    27-11-2024- ஒரு கிராம் ரூ. 98

    26-11-2024- ஒரு கிராம் ரூ. 98

    25-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    24-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    • மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் படிப்படியாக வலு இழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அது நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் குளிர் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    • சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • திரிகோணமலையின் கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. திரிகோணமலையின் கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

    • வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது.

    மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.

    'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார். 

    • தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் படிப்படியாக வலு இழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அது நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிகழ்வு காரணமாக, இன்று முதல் வருகிற 2-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, நேற்று முன்தினம் புயல் உருவாகவில்லை.
    • டெல்டா பகுதிகளில் கொட்ட வேண்டிய மழை, வட இலங்கை பகுதிகளில் கொட்டி தீர்த்திருக்கிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெற்று, நேற்று முன்தினம் புயலாக உருவாகிவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, நேற்று முன்தினம் புயல் உருவாகவில்லை.

    இப்போது உருவாகிவிடும், அடுத்த சில மணி நேரங்களில் வலுப்பெற்றுவிடும் என்று சொல்லப்பட்டு, பின்னர் அதன் நகர்வின் வேகம் குறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது புயலுக்கு மட்டுமல்ல, மழை முன்னறிவிப்புகளிலும் மாற்றம் இருந்தது. அதாவது, அதிகனமழை வரை டெல்டா மாவட்டங்களில் மழை பொழியும் என கூறப்பட்டு, அதை திரும்ப பெற்ற நிகழ்வும் அரங்கேறியது.

    இதற்கான காரணம் என்ன? புயல் உருவாகாமல் போனது ஏன்? எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போனது எப்படி? என்பது பற்றிய கேள்விகளுக்கு வானிலை ஆய்வாளர்களும், ஆய்வு மையமும் விளக்கம் அளித்திருக்கிறது.

    அதாவது, கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் சில பகுதிகள் இலங்கையின் நிலப்பரப்பில் ஊடுருவியதால், டெல்டா பகுதிகளில் கொட்ட வேண்டிய மழை, வட இலங்கை பகுதிகளில் கொட்டி தீர்த்திருக்கிறது. இதனால் அங்கு பெருவெள்ளம் சூழ்ந்துவிட்டது.

    மேலும், அரேபிய உயர் அழுத்தம், பசிபிக் உயர் அழுத்தம் மற்றும் மேற்கத்திய தாழ்வு நிலை ஆகிய காரணிகளால் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக உருவாகுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது.

    அதிலும் குறிப்பாக வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில், வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த காற்றினால் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக தமிழக கடல் பகுதிகளை நோக்கி தீவிரம் அடையாமல் சற்று வலு இழந்து போனது. அந்த நேரத்தில்தான் மணிக்கு 13 கி.மீ. வேகம் வரை நகர்ந்து வந்த அந்த அமைப்பு, அப்படியே நகராமல் நின்று போனது. இந்த காரணங்களால்தான் புயல் உருவாகவில்லை. எதிர்பார்த்த மழையும் பெய்யாமல் போனது.

    • தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை (சனிக்கிழமை) மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன்காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

    அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது.
    • கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை (சனிக்கிழமை) மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செங்கல்பட்டு  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

    • நள்ளிரவில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
    • கனமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவில் திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    கனமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • நள்ளிரவில் திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
    • ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    சென்னை:

    வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    நள்ளிரவில் திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    சென்னையில் நள்ளிரவு ஒரு மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.

    மேலும், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அஜித்துடன் அர்ஜூன், திரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர்.
    • இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    சென்னை:

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.

    படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் டீசர் இன்று இரவு ரிலீசாகும் என அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் டீசர் இன்று இரவு 11.03 மணிக்கு வெளியானது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    ×