என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
- கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்றிருக்கும் ராமநாதசுவாமி கோவில் ராமாயண வரலாற்று கதைகள் நிறைந்த புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட முக்கிய பகுதியாக உள்ளது.
இந்நிலையில் மார்கழி அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அடைக்கப்படுகிறது. இதன்படி இன்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
காலை 7 மணிக்கு சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும் என்பதால் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, மீண்டும், சுவாமி - அம்பாள் கோவிலுக்கு வந்தவுடன் 12 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு உச்சிகால பூஜை நடைபெறும்.
கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்.
- செல்போனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் வீடியோ வெளிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்.
* தொடர்ந்து செல்போனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் வீடியோ வெளிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றை டிரைவர் ஒருவர் ஒரு கையில் செல்போனில் பேசியபடியும், மறு கையில் பஸ்சை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலானது.
இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமானது, கையில் செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிச் சென்றவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணி மனையை சேர்ந்த டிரைவர் கனகராஜ் என்பதை கண்டறிந்தது. அவர், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் சென்றபோது செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கனகராஜை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) உத்தரவிட்டுள்ளது.
- 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில், அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். இது குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், "2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது.
இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்!" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து நேற்று (டிசம்பர் 22) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவியது.
இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிசம்பர் 24) தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நாளை (டிசம்பர் 24) வடகலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
- குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில், அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
அதன்படி, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கோவா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு இடம்பெறவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.
ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்.
மு.க.ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில், அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
அதன்படி, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கோவா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இடம்பெறவில்லை.
தொடர்ந்து, 4வது ஆண்டாக இந்தாண்டும் டெல்லி மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது, பாஜக பழிவாங்கும் செயல் என அம்மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இரண்டு சிலைகளையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- சிலையை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.
திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்பு நவபாஷாண முருகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நவபாஷாண முருகர் சில 10 கிலோ எடை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு அடி உயர கொண்ட யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சிலைகளையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், சிலையை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
- ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாள் முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
- 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது.
ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு "சப்தரிஷி ஆரத்தி" நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டம் சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தை சேர்ந்த ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஞ்ஜதாச ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டார்.
இந்த "சப்தரிஷி ஆரத்தி", சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை. இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாளை முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
ஈஷா யோக மையம் குறித்து ஜீயர் சுவாமிகள் கூறியதாவது, "இந்த இடத்தில் சுவாமிகளை தரிசனம் செய்வது பெரும் பாக்கியம், அடியேன் பெருமாள் பக்தர், ஆனால் ஹரியும் ஹரனும் ஒன்று என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த சிவாலயத்திற்கு வந்திருக்கின்றோம்.
ஈஷாவிற்கு வந்து இருப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்று, அந்த சிவனின் பாதங்களில் இருப்பது போல் தான் அடியேனுக்கு இருக்கிறது. இங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களும் தனிபட்ட நபரின் செயல்பாட்டில் நடப்பதல்ல. இறைவன் இந்த இடத்தில் இந்த காரியத்தை நடத்துவதற்காக சத்குருவை அனுப்பி ஏற்பாடுகளை செய்து வழி வகுத்து இருக்கிறான்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் கூட சொல்வதை சரியாக கேட்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்று இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்கி இருப்பது தனிபட்ட ஒரு நபர் செய்யக் கூடியது இல்லை. இது இறைவனின் கட்டளை படி சத்குரு அவர்கள் செய்து வருகிறார்கள்.
இங்குள்ள பக்தர்கள் மிகவும் ஆத்மார்த்தமாக தொண்டு செய்கிறார்கள். இப்படி மனப்பூர்வமாக செய்வது மிகவும் சிறப்பானது. இங்கு ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மிக அற்புதமாக நடைபெறுகிறது. மென்மேலும் இது சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது அடியேனின் ஆசை, இறைவன் நாராயணனும் இதற்கு உறுதுணையாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.
இங்குள்ள ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் தமிழ், சமஸ்கிருதம், நாட்டியம், இசை ஆகியன சொல்லி கொடுக்கப்படுகின்றன. இது வார்த்தைகளில் விவரிக்க முடியாத வகையில் சிறப்பாக நடைபெறுகிறது. இது அனைவராலும் முடியாத ஒன்று, தேவலோகத்தில் நடப்பது போல் இங்கு சத்குரு நினைப்பதை சிஷ்யர்கள் செய்கிறார்கள்.
சப்தரிஷி ஆரத்தியில் சிவாச்சாரியார்கள் செய்த பூஜை, அலங்காரம், ஆரத்தி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அதனைத் தொடந்து நடைபெற்ற ஆதியோகி திவ்ய தரிசனத்தை எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை, இது போல் முன்பு நாம் பார்த்தது இல்லை, இதுவே முதல் முறை. நான் ஒரு ஜீயர், இங்கு சிவன் முன்பு அமர வைத்து இருக்கிறாய், உன் திருவிளையாடல் தான் என்ன என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். அந்த அளவிற்கு மிகவும் அற்புதமான ஆனந்தமான காட்சியை காணும் போது நம்மையே மறந்து மெய் சிலிர்த்து போய் விட்டேன்." எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவங்கினர்.
அதனைத் தொடர்ந்து தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை அங்கு சக்திவாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை இரவு 08:30 மணி வரை நடைபெற்றது. பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.
முன்னதாக கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, அன்னூர் உள்ளிட்ட பகுதில் இருந்து நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் ஈஷாவிற்கு நேற்று வந்திருந்தனர். அவர்கள் சூர்ய குண்ட மண்டபத்தில் தேவாரப் பதிகங்களைப் பாடினர். அவர்களும் மாலை நடைபெற்ற சப்தரிஷி ஆரத்தியில் பங்கேற்றனர். கோவை பைரவ பீடத்தின் சுவாமிகள் கிருஷ்ணமூர்த்தி, வாசு ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சப்தரிஷி ஆரத்தி வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் புனிதம் மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஈஷாவில் ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மட்டுமே இந்த சப்தரிஷி ஆரத்தி நடத்தப்படுவது குறிப்பிட்டதக்கது. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் நடைபெற்றது.
- எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க.
தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
பரபரப்பான அரசியல் சூழலில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்கு எதிர்ப்பு, அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பது தான் நம்முடைய இலக்கு. 200 தொகுதிகளில் நம்முடைய கூட்டணி வெல்லும். 2026-ல் வெற்றி நமது தான் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக் கொடுப்போம்!
75 ஆண்டுகளாக எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க!
செயற்குழுவில் பெற்ற கருத்துகள், வகுத்த வியூகங்களுடன் 2026-இல் நம் கொள்கைக் கூட்டணியின் சாதனை வெற்றிக்குத் தயாராவோம்! வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!" என்று பதிவிட்டுள்ளார்.
- சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றச்சாட்டு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை உணவு திருவிழாவில் கரூர் மாவட்ட உணவு அரங்கு எண்.17 இல் மாட்டிறைச்சி உணவும் விற்பனை செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டு குழுவினராக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளனர்.
- சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டதாக கூறி நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிலத்தடி தண்ணீரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- கழிவு நீரால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், கொளப்பாக்கம், அண்ணா நகர், மப்பேடுபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் சுடுகாடு உள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து டிராக்டர் மற்றும் லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் முழுவதும் இந்த சுடுகாட்டு பகுதி மற்றும் சுடுகாட்டை ஒட்டி உள்ள சுற்று சுவர் ஓரத்தில் ஊற்றப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் கழிவு நீரின் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். நிலத்தடி தண்ணீரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவு நீர் ஊற்றப்படுவதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்தொற்று பரவும் அபாயமும் உருவாகி உள்ளது.
அப்பகுதி மக்கள் கழிவு நீரை ஊற்ற வரும் டிராக்டர், லாரி டிரைவர்களை கண்டித்தால் மிரட்டும் வகையில் பேசுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து கழிவுநீரை ஊற்றி வருகிறார்கள்.
எனவே கழிவு நீரை சுடுகாட்டு பகுதியில் ஊற்றுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நெடுங்குன்றம் சுடுகாட்டில் கழிவு நீரை லாரி மற்றும் டிராக்டரில் கொண்டு வந்து ஊற்றி சென்று விடுகின்றனர். இதனை கண்டித்தால் டிரைவர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். போலீசில் புகார் தெரிவித்தாலும் கண்டு கொள்வதில்லை. கழிவு நீரால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இதுபற்றி பலமுறை போலீஸ் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






