தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Published on

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில், அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.

அதன்படி, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கோவா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு இடம்பெறவில்லை.

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.

ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்.

மு.க.ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com