என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகாலை முதலே கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர்.
- போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தே.மு.தி.க.வினர் கூறினர்.
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகாலை முதலே கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தே.மு.தி.க.வினர் கூறினர்.
இருப்பினும், காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையிலும் பேரணி செல்வதில் தே.மு.திக.வினர் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார்
- லாட்டரி சீட்டை மையமாக வைத்து திரு மாணிக்கம் திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் திரு மாணிக்கம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லாட்டரி சீட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொண்டு 'திரு மாணிக்கம்' படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ப்ரொமோஷன் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படுகிறது.
- காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மன்மோகன் சிங்கின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 27/12/24 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், இன்று காலை 11 மணியளவில் மத்திய மந்திரிசபை கூடியது. டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 8.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், " மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலே அவருக்கு நினைவிடம் அமைப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து, பிரிவினையின் வலிகளையும் துன்பங்களையும் அனுபவித்து, தனது முழு மன உறுதியினாலும், உறுதியினாலும் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, டாக்டர் மன்மோகன் சிங்கின் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலே அவருக்கு கட்டக்கூடிய நினைவிடம் இருக்கவேண்டும் என்ற மேற்கண்ட கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் தகனம் செய்யப்படும் என உள்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நினைவிடம் அமைப்பது அவருக்கு அளிக்கும் அஞ்சலி என மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி.செழியன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் 'காவல் உதவி' (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தைரியமாக புகார் அளித்த பெண்ணுக்கு பாராட்டுகள்.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் மனைவிக்கு நடந்த சம்பவம் குறித்து புகார் வந்தவுடன் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவரிடம் இப்போது தீவிரமான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தைரியமாக புகார் அளித்த பெண்ணுக்கு பாராட்டுகள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புகார் கொடுக்க முன்வருபவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பிள்ளைகளுக்கு எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக 181 என்ற என்னை தொடர்பு கொண்டு பிரச்சினைகள் பற்றி புகார் கூறுகிறார்கள்.
பெண்களுடைய தோழிகளும் அந்த எண்களை தொடர்பு கொண்டு குழந்தை திருமணம் நடைபெறும் புகார்கள் கூறுகிறார்கள். அனைத்து உதவி எண்களும் நல்ல முறையில் செயல்பட்டுகொண்டு இருக்கிறது.
அரசு பெண்களுக்கு நன்மைபயக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாங்களும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானதையொட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
- சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக அரசை கண்டித்து கன்டன ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் கண்டித்தும்;
சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 30.12.2024 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த 23.12.2024 அன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், ``பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து", அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (27.12.2024) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள், முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானதையொட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள், வருகின்ற 30.12.2024 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்கள் நீங்கலாக, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும்.
விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெண்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, அவர் அங்கு சென்றிருக்க கூடாது என பேசக்கூடாது.
- பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது, காதலிப்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
அப்போது, காவல் துறையிடம் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
அதில், " கைதானவருக்கு பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விரவங்களை வெளியிடுவாரா ?
பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, அவர் அங்கு சென்றிருக்க கூடாது என பேசக்கூடாது.
பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது, காதலிப்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்.
புலன் விசாரணை நடந்து வரும்போதே, ஞானசேகரன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று எப்படி கூற முடியும் ?
புலன் விசாரணை அதிகாரி, காவல் ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர், அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார் ?
கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது ?
குற்றத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை, ஒருவரை கைது செய்தததற்காக பாராட்ட வேண்டும் என எப்படி சொல்ல முடியும்?
மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழக என்ன செய்துள்ளது ? நிர்பயா நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க அண்ணா பல்கலைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்ன செய்துள்ளது.
கைதானவருக்கு பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விவரங்களை வெளியிடுவாரா ?
குற்றத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை, ஒருவரை கைது செய்ததற்காக பாராட்ட வேண்டும் என எப்படி சொல்ல முடியும் ? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
பிறகு, இந்த வழக்கு குறித்த விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் எழுப்பி கேள்விகளுக்கு பதிலளித்து நாளை அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்குகிறது.
- மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்துவைத்தார்.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
நந்தனத்தில் அமைந்துள்ள YMCA உடற்கல்வியில் கல்லூரியில் நாளை தொடங்கும் புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருது ஆகியவை வழங்கப்பட உள்ளது.
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
- தலைமை நீதிபதி உத்தரவுக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியிலிடப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
- உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இன்று மாலை 4.45 மணியளவில் விசாரணை தொடங்கியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வக்கீலான வரலட்சுமியின் கடிதம் ஒன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளான எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு இன்று தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
மனுவில், " சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை உள்நோக்கத்துடன் அவர்கள் கசியவிட்டுள்ளனர். எனவே வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கோர்ட்டில் வாதாடிய வக்கீல் ஜெய பிரகாஷ் நாராயணன் சென்னையின் இதய பகுதி போன்ற அண்ணா பல்கலைகழகத்தில் நடந்துள்ள பாலியல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. எனவே ஐகோர்ட்டு இந்த கடிதத்தை ஏற்று தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து பட்டியலிட அறிவுறுத்தினர்.
அப்போது தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், போலீசார் டி.ஜி.பி. சென்னை போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
தலைமை நீதிபதி உத்தரவுக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியிலிடப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இன்று மாலை 4.45 மணியளவில் விசாரணை தொடங்கியது.
அப்போது, புலன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என எப்படி முடிவுக்கு வர முடியும் என்று நீதிபதி காவல் ஆணையருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
- கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளார்.
- ஞானசேகரன் போனில் சார் சார் என பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை தற்போது வரை காவல்துறை வெளிக்கொண்டு வரவில்லை.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஞானசேகருக்கு தி.மு.க. பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டு ஆதாரமாக படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருடமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
* பல்கலைக்கழகத்தில் உள்ள 70 சிசிடிவியில் 56 தான் வேலை செய்கிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.
* தமிழகம் முழுவதும் இருந்து படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
* ஞானசேகரன் போனில் சார் சார் என பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை தற்போது வரை காவல்துறை வெளிக்கொண்டு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
* FIR வெளிவந்த விவகாரத்தில் உண்மையை மறைக்கின்றனர்.
* தமிழகத்தில் குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுகிறார்கள். காவல்துறைக்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை.
* அமைச்சர் மற்றும் காவல் ஆணையரின் கருத்துகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
* கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளார்.
* அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.
* ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காப்பாற்ற முயற்சியா?
* அரசின் இது போன்ற செயல்களால்தான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது.
* பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதுதான் அரசின் கடமை. ஆனால் அரசு சிபிஐ விசாரிக்க கூடாது என மேல்முறையீடு செய்கிறது.
- அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
- தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் சார்பாக நினைவு தினத்தை கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
மேலும், வருகிற 28-ந்தேதி எங்கள் தலைவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் சார்பாக நினைவு தினத்தை கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.






