என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு- அமைச்சர் கீதாஜீவன்
- பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தைரியமாக புகார் அளித்த பெண்ணுக்கு பாராட்டுகள்.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் மனைவிக்கு நடந்த சம்பவம் குறித்து புகார் வந்தவுடன் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவரிடம் இப்போது தீவிரமான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தைரியமாக புகார் அளித்த பெண்ணுக்கு பாராட்டுகள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புகார் கொடுக்க முன்வருபவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பிள்ளைகளுக்கு எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக 181 என்ற என்னை தொடர்பு கொண்டு பிரச்சினைகள் பற்றி புகார் கூறுகிறார்கள்.
பெண்களுடைய தோழிகளும் அந்த எண்களை தொடர்பு கொண்டு குழந்தை திருமணம் நடைபெறும் புகார்கள் கூறுகிறார்கள். அனைத்து உதவி எண்களும் நல்ல முறையில் செயல்பட்டுகொண்டு இருக்கிறது.
அரசு பெண்களுக்கு நன்மைபயக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாங்களும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






