என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
- அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி நடைபெற்றது.
கேப்டன் வாழ்க... அரசு ஒழிக... என்ற முழக்கத்துடன் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் விளக்கேற்றி பிரேமலதா மரியாதை செலுத்தினார்.
அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் விஜயகாந்த் நினைவிடத்தில் அமைச்சர் சேகர்பாபு, ஓ.பன்னீர்செல்வம், சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
- மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
- புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வருகிறார்.
இதுதொடர்பாக தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார். அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நியோ டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.
மாலை 5 மணிக்கு மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சி முடித்து காமராஜர் சாலை, போல்டன்புரம், தேவர்புரம் ரோடு, தென்பாகம் போலீஸ் நிலையம், பாளையங்கோட்டை ரோடு, 3-வது மைல் வழியாக சத்யா ரிசாட் செல்கிறார்.
மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, காமராஜ் கல்லூரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சி முடிந்து சிவந்தாகுளம் ரோடு, பக்கிள்புரம், புதுகிராமம், வி.இ.ரோடு, அண்ணா சாலை, பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியா குமரி புறப்பட்டு செல்கிறார்.
எனவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் சவரனுக்கு ரூ.56,800-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரன் ரூ.56,720-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57ஆயிரத்துக்கும், நேற்றும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.57,080 ஆயிரத்துக்கும் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,135-க்கும் விற்பனையாகிறது.
மொத்தத்தில் தங்கம் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
26-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,000
25-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
24-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720
23-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-12-2024- ஒரு கிராம் ரூ. 100
26-12-2024- ஒரு கிராம் ரூ. 100
25-12-2024- ஒரு கிராம் ரூ. 99
24-12-2024- ஒரு கிராம் ரூ. 99
23-12-2024- ஒரு கிராம் ரூ. 99
- அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது.
- அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும்.
சென்னை:
தேமுதிக தலைவரும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்.
வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
- யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
- புல்லட் யானை முகாமிட்டு இருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக புல்லட் ராஜா என்ற காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் 48-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்தி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து 75 பணியாளர்கள் கொண்ட வனப்பணியாளர்கள் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
ஆனாலும் யானையின் அட்டாகசம் தொடர்ந்து அதிகரித்தது. இதை தொடர்ந்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்தது.
அதன்படி நேற்று மாலை, சேரம்பாடி பகுதியில் புல்லட் யானை முகாமிட்டு இருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.

பின்னர் கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பரண் மீது இருந்தவாறு புல்லட் யானை மீது மயக்க ஊசியை செலுத்தினார். இதில் யானை மயக்கம் அடைந்த நிலையில் அங்கு நடமாடியது.
தொடர்ந்து விஜய், சீனிவாசன் என்ற கும்கி யானைகள் உதவியுடன் புல்லட் யானையை பிடித்த வனத்துறையினர், லாரி கொண்டு வந்து யானையை அதில் ஏற்றினர்.
பின்னர் யானை அங்கிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.
இன்று காலை டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு யானை வந்தது. அங்கு யானைகள் முகாமில் வைத்து யானையை பராமரிக்க உள்ளதாக தெரிகிறது.
கடந்த ஒரு மாதமாக அட்டகாசத்தில் ஈடுபட்ட வந்த புல்லட் ராஜா யாைன பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
ஊருக்குள் புகும் கரடி ரேசன் கடைகள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு கூடங்களை சேதப்படுத்தி அங்குள்ள பொருட்களை தின்று நாசப்படுத்தி வருகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் கிளண்டல் நான்சச் மற்றும் கிளன் மோர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் கரடி அங்குள்ள குடியிருப்பு மற்றும் பள்ளிகளின் ஜன்னல் கதவுகளையும் சேதப்படுத்தியது. கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர அச்சப்பட்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்வோர் ஒருவித அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகிறார்கள். தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.
அதன்படி கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளான டைகர் ஹில், டென்ட் ஹில், நான்சச் ஆகிய 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
கரடிக்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது தெரியாத வகையில் முழுவதுமாக மரத்தின் கிளைகள் மற்றும் இலைகளை கொண்டு மூடி வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலமாகவே கரடியை கண்காணித்து வருகிறோம். கூண்டின் அருகே வரும் கரடி அதில் உள்ள பழங்களை மட்டும் ருசித்து விட்டு லாவகமாக கூண்டில் சிக்காமல் தப்பி ஓடிவிடுகிறது. தொடர்ந்து வனஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
- விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
- பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் அப்படியே பேரணியாக கிளம்பினர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி தொடங்கியது.

காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தேமுதிக தொண்டர்கள் பேரணியை தொடங்கினர்.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் அப்படியே பேரணியாக கிளம்பினர்.
கேப்டன் வாழ்க... அரசு ஒழிக... என்ற முழக்கத்துடன் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணியாக கிளம்பினர்.
கோயம்பேடு பாலம் வழியாக பேரணி செல்லவிருந்த நிலையில் தற்போது அம்பேத்கர் சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாக பேரணி செல்கிறது.
- விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
- முன்பே அனுமதி மறுத்திருந்தால் கோர்ட்டை அணுகி அனுமதி பெற்றிருப்போம்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.
இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகாலை முதலே கோயம்பேட்டில் குவிந்தனர்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மக்களை திரும்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பேரணிக்கு அனுமதி கேட்டு கடந்த 5-ந்தேதி மனு அளித்திருந்தும் நேற்று மாலை 5 மணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
முன்பே அனுமதி மறுத்திருந்தால் கோர்ட்டை அணுகி அனுமதி பெற்றிருப்போம். ஆனால் நேற்று மாலை அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது காவல் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி தரப்படுமென நம்புகிறோம் என்று கூறினார்.
- பேரணிக்கு அனுமதி கோரி கடந்த 5-ந்தேதி கடிதம் வழங்கினோம்.
- தே.மு.தி.க. பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்?
சென்னை:
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகாலை முதலே கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பேரணிக்கு திட்டமிட்டே அனுமதி மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. பேரணிக்கு அனுமதி கோரி கடந்த 5-ந்தேதி கடிதம் வழங்கினோம். ஆனால் நேற்று மாலை தான் அனுமதி மறுத்த தகவல் வந்தது. முன்பே அனுமதி மறுத்திருந்தால் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றிருப்போம். தே.மு.தி.க. பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்?
கலைஞர், ஜெயலலிதா நினைவு நாள், பிறந்த நாளின் போது பேரணிக்கு அனுமதி தரும் காவல்துறை கேப்டனுக்கு அனுமதி மறுப்பதா?
கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா? தொண்டர்கள் அதிகளவில் பேரணியில் பங்கேற்பார்கள் என்பதால் தேமுதிகவின் பலம் தெரிந்துவிடக்கூடாது என காவல்துறை சதி.
காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பேரணிக்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அடுத்து என்ன செய்வது என பொதுச்செயலாளர் உடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.
இதனிடையே பேரணியாக செல்ல முயன்ற தேமுதிக தொண்டர்கள், காவல்துறையினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- பொம்மனம்பட்டியைச் சேர்ந்த 4 குடும்பத்தினர் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
- விபத்தில் சிக்கிய காரும், வேனும் அப்பளம் போல் நொறுங்கி சாலையோரம் கிடந்தது.
தேவதானப்பட்டி:
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஜெயின் தாமஸ் என்பவர் ஒரு காரில் 4 பேருடன் திண்டுக்கல் வந்து விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். தேனி அருகே உள்ள பொம்மனம்பட்டியைச் சேர்ந்த 4 குடும்பத்தினர் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் தங்கள் வேனில் தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் சுற்றுலா வேனும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
கடும் பனி மூட்டம் நிலவியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என அப்பகுதியில் இருந்தவர்கள் சந்தேகமடைந்தனர். பின்னர் அவர்களின் கூக்குரலை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரில் வந்த ஜெயின் தாமஸ் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். வேனை ஓட்டி வந்த தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த பிரசாத் (28) உள்பட 18 பேரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய காரும், வேனும் அப்பளம் போல் நொறுங்கி சாலையோரம் கிடந்தது. அதனை போலீசார் அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். விபத்தில் இறந்த மற்ற 2 பேர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- “தமிழ்நிலம்” மென்பொருளில், விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- பட்டா இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
சென்னை:
தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான "தமிழ்நிலம்" மென்பொருளில், விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே 28-ந்தேதி (இன்று) காலை 10 மணி முதல் 31-ந்தேதி மாலை 4 மணி வரை 4 நாட்கள் இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் "தமிழ்நிலம்" https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html பட்டா இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
- தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.






