என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கலைஞர், ஜெயலலிதா பேரணிக்கு அனுமதி உண்டு.. கேப்டனுக்கு இல்லையா? - தேமுதிக கேள்வி
    X

    கலைஞர், ஜெயலலிதா பேரணிக்கு அனுமதி உண்டு.. கேப்டனுக்கு இல்லையா? - தேமுதிக கேள்வி

    • பேரணிக்கு அனுமதி கோரி கடந்த 5-ந்தேதி கடிதம் வழங்கினோம்.
    • தே.மு.தி.க. பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்?

    சென்னை:

    மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகாலை முதலே கோயம்பேட்டில் குவிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    பேரணிக்கு திட்டமிட்டே அனுமதி மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. பேரணிக்கு அனுமதி கோரி கடந்த 5-ந்தேதி கடிதம் வழங்கினோம். ஆனால் நேற்று மாலை தான் அனுமதி மறுத்த தகவல் வந்தது. முன்பே அனுமதி மறுத்திருந்தால் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றிருப்போம். தே.மு.தி.க. பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்?

    கலைஞர், ஜெயலலிதா நினைவு நாள், பிறந்த நாளின் போது பேரணிக்கு அனுமதி தரும் காவல்துறை கேப்டனுக்கு அனுமதி மறுப்பதா?

    கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா? தொண்டர்கள் அதிகளவில் பேரணியில் பங்கேற்பார்கள் என்பதால் தேமுதிகவின் பலம் தெரிந்துவிடக்கூடாது என காவல்துறை சதி.

    காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பேரணிக்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அடுத்து என்ன செய்வது என பொதுச்செயலாளர் உடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

    இதனிடையே பேரணியாக செல்ல முயன்ற தேமுதிக தொண்டர்கள், காவல்துறையினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    Next Story
    ×