என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேவி கருமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிப்பார்.
    • சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இறைவன் இறைவி அருள் பாலிக்கவும் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில் அலுவலகத்தில் கோவில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந் தேதி அன்று அம்மனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பது கடந்த 40 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும்.

    நிலையில், இவ்வாண்டும் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்வது கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிவறை மற்றும் குளியலறை வசதி, அன்னதானம், பிரசாதம் வழங்குதல், பக்தர்களுக்கு இலவச மருத்துவ உதவி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்வது என முடிவு செய்யப்பட்டது.


    கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜை தொடங்கி, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் தங்க கவசத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிப்பார்.

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலின் உப கோவிலான சம்மந்தரால் பாடல்பெற்ற தொண்டை நாட்டு சிவாலயமும், நான்கு வேதங்களும், வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்ட தலமான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக் கோவிலிலும், 2025 புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபி ஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இறைவன் இறைவி அருள் பாலிக்கவும் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தக்கார் டெக்கான் மூர்த்தி, நகராட்சி அதிகாரிகள், காவல்து றையினர், வியாபாரிகள் சங்கத்தினர், மாநகர போக்கு வரத்து, தீயணைப்புத்துறை, மின்வாரியம், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலை. வளாகத்திற்கு 8 வழிகள் உள்ளன.
    • மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு நபர் தொடர்ந்து பல்கலை. வளாகத்துக்குள் வரும்போது காவலர்கள் விசாரித்தார்களா? என கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது. அதில்,

    * பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கிறோம்.

    * 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலை. வளாகத்திற்கு 8 வழிகள் உள்ளன. அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    * பல்கலைக்கழகம் வரும் அனைவரையும் சரிபார்ப்பது என்பது முடியாத காரியம், காவலர்கள் காரணம் கேட்டு உள்ளே அனுப்புவர்.

    * மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது. மொத்தம் 988 கேமராக்களில் 849 செயல்படுகின்றன, மற்றவை செயல்படவில்லை.

    * மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழகத்திலேயே படிப்பை தொடர்வார்.

    * காவல் துறையினரின் விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது என்று தெரிவித்தது.

    • தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மேலப்பாளையத்தில் முகாமிட்டு திடீர் விசாரணையில் ஈடுபட்டனர்.
    • மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா அருகே பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம் கடந்த மாதம் திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது.

    இந்நிலையில், கடந்த மாதம் 16-ந்தேதி அதிகாலையில் திரையரங்க வாயிலில் 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். தென்மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின்(வயது 30), ஆசூரான் மேலத்தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி (29) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மேலப்பாளையத்தில் முகாமிட்டு திடீர் விசாரணையில் ஈடுபட்டனர்.

    தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், யூசுப் ரசின், முகமது புகாரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    சுமார் 2 மணிநேரமாக பஷீரப்பா தெரு, ஆசூரான் தெருவில் சோதனை நடத்தியதையொட்டி மாநகர ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி பக்தர்களை மலையேற அனுமதித்தனர்.
    • மலை பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவா சையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    மார்கழி மாத பிரதோஷம் (இன்று) மற்றும் அமாவாசையை (30-ந்தேதி) முன்னிட்டு இன்று முதல் வருகிற 31-ந்தேதி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரதோஷங்களில் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பானதாக கருதப்படுகிறது.

    அதன்படி இந்த வருடத்தில் இறுதியில் அமைந்துள்ள சனி பிரதோஷமான இன்று சதுரகிரிக்கு செல்ல நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப்பாறையில் திரண்டனர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது.

    வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி பக்தர்களை மலையேற அனுமதித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை மலையேறி சென்று சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

    மலை பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் பகுதியில் செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணி வரை திரளான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் செய்துள்ளனர்.

    நாளை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது
    • பாதிக்கப்பட்ட மாணவி மீது குறை கூறும் வகையில் முதல் தகவல் அறிக்கை உள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வழக்கை தாமாக முன்வந்து (சுமோட்டாவாக) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்பு வரலட்சுமி தரப்பு வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் நேற்று முறையிட்டார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

    இந்த வழக்குகளை நேற்று மாலை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரணைக்கு எடுத்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகம் இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல, எங்களை பொறுத்தவரை இந்த பாலியல் வழக்கின் புலன் விசாரணையில் தலையிட விரும்பவில்லை. எப்.ஐ.ஆர். கசிந்தது எப்படி? அதற்கு யார் பொறுப்பு? இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து போலீஸ் கமிஷனர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை நாளை மீண்டும் விசாரிக்கின்றோம் என்று தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் எப்.ஐ.ஆர். கசிந்தது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்ப தவறே காரணம் என்று உள்துறை செயலாளர் தரப்பில் கூறப்பட்டது.

    மாணவி தொடர்பான எப்.ஐ.ஆர். காவல் துறை வெளியிடவில்லை என தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர். கசியவில்லை என எப்படி உறுதியாக கூற முடியும். எப்.ஐ.ஆரை யாரெல்லாம் பதிவிறக்கம் செய்தார்கள் என கண்டுபிடிக்க வசதி உள்ளது. ஏன் குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பாதிக்கப்பட்ட மாணவி மீது குறை கூறும் வகையில் முதல் தகவல் அறிக்கை உள்ளது. புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது என்று அதிருப்தி தெரிவித்தனர்.

    • மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • பைசல்கான் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தக்கலை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலருடன் இருந்த குமரி மாவட்ட மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தகவலுடன் கூடிய எப்.ஐ.ஆர். வெளியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளன. சென்னை ஐகோர்ட்டும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிமாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய அவர், இயற்கை உபாதை கழிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    தக்கலை சேர்ந்த தொழிலாளிக்கு 2 மகள்கள் உள்ளனர். தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் அவரது இளைய மகள், கைப்பந்து விளையாட்டில் பங்கு பெற்று வந்துள்ளார். கடந்த 25-ந் தேதி இவர், உடற்பயிற்சி ஆசிரியை மற்றும் 14 மாணவிகளுடன் கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க திருச்சி மாவட்டம் சென்றார்.

    போட்டி முடிந்ததும் அவர்கள் இரவு 9 மணியளவில் குமரி மாவட்டம் திரும்பி உள்ளனர். சக மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டுச் செல்ல தொழிலாளியின் மகள் மட்டும் தனது தந்தை வருகைக்காக காத்திருந்துள்ளார். அப்போது இயற்கை உபாதையால் அவதிப்பட்ட அவர், அதற்காக இடம் தேடியுள்ளார்.

    அந்த நேரத்தில் அங்கு அதேபகுதியை சேர்ந்த பைசல்கான் (வயது 37) என்பவர் வந்துள்ளார். அவர், மாணவியிடம் நைசாக பேசி உதவி செய்வது போல் நடித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவி கழிவறை சென்று வந்ததும், அவரை வீட்டின் அறையில் அடைத்து வைத்து பைசல்கான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

    இந்நிலையில், பைசல்கான் பிடியில் இருந்து தப்பி மாணவி தனது வீட்டிற்கு வந்தார். அவரின் நிலையை பார்த்து பெற்றோர் பதறினர். அப்போது, மாணவி தனக்கு நடந்த பாலியல் கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.

    மேலும் பைசல்கான் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று காலை முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 13-ந்தேதி பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதில் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.

    இந்நிலையில் வெள்ள நீர் குறைந்த சில நாட்களிலேயே மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பழைய குற்றால அருவி பகுதியில் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.

    விவசாய சங்கங்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் என பலரும் பழைய குற்றால அருவியில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    மேலும் அருவி கரையை சுற்றி பாதுகாப்பு கம்பிகள் மீண்டும் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சற்று குறைந்து சீராக விழுந்து வருவதால் அங்கும் காலை முதலே ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    • கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன.
    • காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 35 க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை கடந்த சில நாட்களுக்கு முன் ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

    இந்த யானைகளை கர்நாடகாவுக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநில வனப்பகுதி நோக்கி யானைகள் கூட்டம் சென்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 15 க்கு மேற்பட்ட காட்டு யானைகள் தனியாக முகாமிட்டு விவசாய பயிர்களின் நாசம் செய்து வருகின்றன.

    அதேபோல் ஜவளகிரி வனப்பகுதியிலும் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • கட்டிடத்தின் உள்ளே சென்று ஏணி எடுத்துவர சென்றுள்ளார். அப்போது கட்டிடத்தின் சுவர் கூலிதொழிலாளியின் மீது விழுந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்டது கேர்மாளம் ஊராட்சி. இந்த ஊராட்சி அலுவலகம் கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.

    இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்ததாரர் பழுதடைந்த அலுவலக கட்டிடத்தை ஆட்கள் மூலம் இடித்துக் கொண்டிருந்தார்.

    அப்பொழுது கூலி தொழிலாளி கடம்பூர் மாக்கம் பாளையத்தைச் சேர்ந்த சிக்குமாதன் (வயது 45) என்பவர் கட்டிடத்தின் உள்ளே சென்று ஏணி எடுத்துவர சென்றுள்ளார். அப்போது கட்டிடத்தின் சுவர் கூலிதொழிலாளியின் மீது விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த சிக்குமாதனை அங்கிருந்தவர்கள் கேர்மாளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கூலிதொழிலாளி சிக்குமாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜயகாந்த் நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • தலைவர்கள் பலரும் விஜயகாந்தை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    சென்னை:

    மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே தலைவர்கள் பலரும் விஜயகாந்தை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார். 



    • அமராவதி அணை நீர் நிரம்பி ததும்பும் நிலையில், மீன் பிடிப்பு பாதித்துள்ளது.
    • இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் பணி தடைபட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையால் ஜூலை 18-ந்தேதி அணை நிரம்பியது.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால் கடந்த நவம்பர் 27-ந்தேதி அணை நிரம்பியது. தொடர்ந்து, தற்போது பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடியில் 89.51 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 263 கனஅடியாகவும், நீர் திறப்பு 250 கனஅடியாகவும் உள்ளது.

    அமராவதி அணை நீர் நிரம்பி ததும்பும் நிலையில், மீன் பிடிப்பு பாதித்துள்ளது. அணையில் மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், திலேபியா, மிர்கால், ரோகு உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளர்க்கப்பட்டு மீனவர்கள் வாயிலாக பிடிக்கப்படுகிறது.

    இதற்காக தலா 2 பேரை கொண்ட 20 படகுகள், வலைகள் என 20 குழு மீனவர்கள் உள்ளனர். தற்போது, அணை நிரம்பிய நிலையில் காணப்படுவதோடு, பனிப்பொழிவு அதிகரித்து குளிர் சீதோஷ்ண நிலையும் காணப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் பணி தடைபட்டுள்ளது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை, 5 மணி வரை மட்டுமே, மீனவர்கள் வலை விரித்து மீன் பிடிக்கின்றனர். நீர் இருப்பு அதிகமாக உள்ளதால், குறைந்தஅளவு மட்டுமே மீன் சிக்குகிறது. வழக்கமாக, 300 கிலோ வரை மீன் கிடைத்து வரும் நிலையில், தற்போது 100 கிலோவுக்கும் குறைவாகவே கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    அமராவதி அணை சுற்றுலா தலமாக உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வனத்துறை முதலை பண்ணை, அமராவதி அணை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மகளிர் சுய உதவி குழு வாயிலாக அமராவதி அணையில் படகு சவாரி செயல்படுத்தப்படுகிறது. பருவமழை பொழிவால், அணை நிரம்பிய நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதமாக படகு சவாரி முடங்கி உள்ளது. 

    • விஜயகாந்த் நினைவிடத்தில் அமைச்சர் சேகர்பாபு, ஓ.பன்னீர்செல்வம், சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
    • விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை பெரிதாக்க வேண்டாம்.

    விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

    இதையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் விளக்கேற்றி பிரேமலதா மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, ஓ.பன்னீர்செல்வம், சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை பெரிதாக்க வேண்டாம்.

    * பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அமைதியான முறையில் பேரணி நடைபெற்றது மகிழ்ச்சி என்று கூறினார்.

    ×