search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police App"

    டி.ஜி.பி.சைலேந்திர பாபு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வரவேற்றார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக அரங்கில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்தந்த நபர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் கடலூர் மாவட்டத்தில் முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை பிடித்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். இதில் போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் டி.ஜி.பி சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் போலீசாரின் புலன் விசாரணை சிறப்பாக உள்ளது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முத்தாண்டிக்குப்பம் கொலை வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து 48 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது பாராட்டுக்குரியதாகும். மேலும் போலீசார் புலன் விசாரணையில் அறிவியல் ரீதியாக பல்வேறு சாதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மேலும் தமிழகத்தில் பெரிய அளவிலான கலவரம், வட மாநிலத்தவர்கள் கொள்ளையில் ஈடுபடுவது மற்றும் சீரியல் தொடர் கொள்ளை போன்றவற்றை நடைபெறாமல் பாதுகாத்து வருகின்றோம். சிதம்பரம் சிறுமி திருமண வழக்கு மற்றும் விசாரணை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதன் செயலாளர் பதில் அளிப்பார்கள். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10,000 போலீசார் புதியதாக நியமித்த நிலையில் தற்போது 3,200 போலீசார் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு கட்டத்தில் போலீசார் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    தமிழக எல்லைகளில் உள்ள சோதனை சாவடியில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 16 சோதனை சாவடியில் போலீசார் மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றத்தில் எதிர்பாராத குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகின்றது. இதில் அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தொழிலதிபர்கள் வேலை தேடி அலையும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் அதற்காக போலீசார் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 37 மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் குற்றப்பிரிவு மையங்கள் ஏடிஜிபி தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் வெளிநாடுகளில் ஏமாற்றப்படும் பணங்கள் உடனடியாக பறிமுதல் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 26,000 சிம் கார்டுகள் மற்றும் 1700 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய குற்றவாளிகளை பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான குற்றங்கள் கண்டுபிடித்து ரூ.32 லட்சம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது காவல் உதவி என்ற செயலி மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு, அவசர உதவி போன்றவற்றில் போலீசார் உடனுக்குடன் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த செயலி மூலம் 66 விதமான உதவிகள் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் ஒரு நாள் போலீசாருக்கு ஓய்வு கிடைக்க வேண்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிறப்பான திட்டத்தை வடிவமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதன் மூலம் அனைத்து போலீசாருக்கும் வாரம் ஒரு முறை விடுமுறை கிடைப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும் சில நேரங்களில் ஒரு நாள் விடுமுறை அளிப்பதற்கு சிரமம் ஏற்பட்டு வருகின்றது. எனவே தமிழ்நாடு போலீசார் சிறப்பாக பணிபுரிந்து சட்ட ஒழுங்கு சிறப்பான நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×