என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கார்த்திகை தீபத்தின் போது திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயபாண்டியன், அங்கு கழிவறைக்குச் சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் நலன் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் மகளிர் போலீசார் சிறுமியிடம் நடந்தவை குறித்து கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதனிடையே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் உத்தரவின் பேரில் 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
- சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி பயணிக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஆக மொத்தம் இந்த பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக 44,580 பேருந்துகள் இயக்கபட உள்ளன.
ஜனவரி 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து வெளி ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக வழக்கமாக தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகின்றன.
நான்கு நாட்களும் சேர்த்து 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல பிற ஊர்களிலிருந்து ஜனவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை 7,800 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட முடிவு செய்து இயக்கபட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஜன. 15 முதல் 19-ஆம் தேதி வரை, தினமும் இயக்கக்கூடிய 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதன்படி, பொங்கலுக்கு மொத்தம் 44,580 பேருந்துகளை இயக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்கள் வசதிக்காக சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன..
3. கோயம்பேடு பேருந்து நிலையம்த்தில் இருந்து கிழக்கு கடற்கரை (இசிஆர்) சாலை வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்த்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு சென்னை மாநகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்வதற்காக ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பயணிகள் சிரமமின்றி முன் பதிவு செய்யும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ, எந்தவித இடையூறும் இன்றி பயணிக்கும் வகையில் சிறப்பான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்தது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்தது.
அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
" ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது. பணம், மது, தங்கக்காசு, சொலுசு, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள். மேலும், சட்டம்றற- ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்" என கூறப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
அதில், " ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லாததால் தேமுதிக புறக்கணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
- கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிப்பு.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில், "நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது" என்றார்.
மேலும், தந்தை பெரியாருக்கு எதிராக பேசிய சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சி மீடு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் அடுக்கினார்.
இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
" ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது.
பணம், மது, தங்கக்காசு, சொலுசு, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள்.
மேலும், சட்டம்றற- ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
- பெரியார் வாழ்ந்த காலத்தில் பாமர மக்களுக்கு அவரால் ஏற்பட்ட நன்மைகள் ஏராளம்.
- அந்த காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரியாரால் ஏற்றம் பெற்றனர்.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் அநாகரீகமாக பேசியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "இது வருத்தத்திற்கு உரியது. ஒரு இறந்த பெருந்தலைவரை பற்றி அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் பாமர மக்களுக்கு அவரால் ஏற்பட்ட நன்மைகள் ஏராளம்.
அந்த காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரியாரால் ஏற்றம் பெற்றனர். அதை எல்லாம் நாம் மறந்து விட கூடாது. யாராக இருந்ததாலும் பெரியாரை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு பேசுவது சரியல்ல" என்று தெரிவித்தார்.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில், "நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது" என்றார்.
மேலும், தந்தை பெரியாருக்கு எதிராக பேசிய சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சி மீடு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் அடுக்கினார்.
பின்னர், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு எடப்பாடி பழனிசாமி பெப்பர் ஸ்பிரே விநியோகித்தார்.
மேலும், அன்பு சகோதரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என்ற பெயரில் பெப்பர் ஸ்டிரோ மற்றும் எஸ்ஓஎஸ் உபகரணத்தையும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
- அண்ணா பல்கலை கழக மாணவர் விவகாரத்தில் யாரோ ஒரு முக்கிய நபர் உள்ளார்.
- கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனுதாபி என்று முதல்வர் கூறுகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பொள்ளாச்சி விவகாரத்தில் 10 நாட்களுக்கு முன்பே புகார் கொடுக்கப்பட்டதற்கு என்ன ஆதாரம் உள்ளது? எந்த அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார்?
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வெளிவந்தவுடன் எது உண்மை எது பொய் என்று நாட்டு மக்கள் அறிவார்கள்.
அண்ணா பல்கலைக் கழக மாணவர் விவகாரத்தில் யாரோ ஒரு முக்கிய நபர் உள்ளார். யார் அந்த சார் என்று கேட்டால் திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனுதாபி என்று முதல்வர் கூறுகிறார்.
முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை வாங்கி வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு பயம் இருக்கிறது
- தேர்தலின் போது திமுக அறிவித்த 20% அறிவிப்புகளே நிறைவேற்றப்பட்டுள்ளன.
- ஓட்டை உடைசல் பேருந்துகளை மக்கள் ஸ்டாலின் பேருந்து என்று தான் கூறுகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது.
தேர்தலின் போது திமுக அறிவித்த 20% அறிவிப்புகளே நிறைவேற்றப்பட்டுள்ளன. 565 அறிவிப்புகளில் நீட் ரத்து உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை
பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. திமுக ஆட்சியில், அரிசி, பருப்பு மற்றும் பூண்டு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
அரசு பேருந்துகளை மக்கள் ஸ்டாலின் பேருந்து என்று கூறுவதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆம் ஓட்டை உடைசல் பேருந்துகளை மக்கள் ஸ்டாலின் பேருந்து என்று தான் கூறுகின்றனர். அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலில் முதலமைச்சர் கூறினார். ஆனால் பின்னர் பேருந்துகளின் முன்னாலும் பின்னாலும் லிப்ஸ்டிக் அடித்து அந்த பேருந்துகளில் மட்டும் தான் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
வெளியில் பல்வேறு கடன்வாங்கி மகளிருக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். அரசின் வருவாயை பெருக்கி நலத்திட்டங்களை உருவாக்கினால் தான் அது நல்ல அரசு. ஒருபுறம் வருவாய் அதிகரிக்கிறது, இன்னொரு புறம் கடனும் அதிகரித்து வருகிறது.
கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இப்படியே கடன் வாங்கி கொண்ட போனால் எப்போது கடனை அடைப்பது" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- மொபைல் போன்களில் நேரடியாக தங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கலாம்.
- பார்வையாளர்களின் திருப்திக்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கிண்டி சிறுவர் பூங்காவில், வாட்ஸ் அப் வழியே நுழைவுச் சீட்டு பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மக்கள் 8667609954 என்ற எண்ணிற்கு HI என அனுப்பி விவரங்களை பதிவிட்டு, டிக்கெட் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை நிர்வகிக்கவும், பார்வையாளர்களுக்கு அதிக வசதியை அளிக்கவும் வாட்ஸ்அப் (Whatsapp) டிக்கெட் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
8667609954 என்ற எண்ணுக்கு ஹாய் "Hi" செய்தியை அனுப்புவதன் மூலம், பார்வையாளர்கள் தேவையான விவரங்களைப் பதிவேற்றலாம் மற்றும் தங்களின் மொபைல் போன்களில் நேரடியாக தங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கலாம் இந்த முயற்சியானது தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது.
டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது மற்றும் பார்வையாளர்களின் திருப்திக்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நிதியாண்டில் ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவிகிதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
- வழக்கம் போல் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும், பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை, மத்திய பாஜக அரசு வழங்க மறுத்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதாவது:-
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளால் பெறப்படும் நிதியை ஒன்றிய அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒரு நிதியாண்டில் ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவிகிதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 28 மாநிலங்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 73 ஆயிரம் கோடியை வரி பகிர்வாக ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
இதில் 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 31,000 கோடியும், 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,057 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, 10 கோடி மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 17,000 கோடியும், 9 கோடி மக்கள் தொகை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 13,000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், மாநிலங்களுக்கிடையேயான வரி பகிர்வில் ஒன்றிய பா.ஜ.க. அரசு அப்பட்டமான பாரபட்ச போக்கை கடைபிடித்து வருகிறது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு முரணாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பின்பற்றுவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
புயல், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூபாய் 36,000 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் 226 கோடி. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 2028 கோடி செலவு செய்திருக்கிறது.
மேலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய ரூபாய் 2159 கோடி கடந்த பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் இருக்கிறது.
இதனால், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூன் மாதத்திலிருந்து சம்பளம் வழங்க முடியாத நிதி நெருக்கடியில் கல்வித்துறை சிக்கியிருக்கிறது. இத்தகைய போக்கின் காரணமாக தமிழ்நாடு கல்வித்துறை கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மும்மொழி திட்டத்தை நீண்டகாலமாக ஏற்க மறுக்கிற மாநிலம் தமிழ்நாடு.
ஆனால், அதை திணிக்கிற வகையில் அமைந்துள்ளதால் இப்புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. அந்த அடிப்படையில் கல்வித்துறையை பொறுத்தவரை எந்த முடிவெடுத்தாலும் மாநிலங்களை கலந்து தான் எடுக்க வேண்டும். ஆனால், மாநிலங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தின் மீது திணிக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் முயற்சியை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.
இதனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க மறுத்து வருகிறது. இத்தகைய போக்குகளின் காரணமாக கூட்டாட்சி முறை மிகப்பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியும், பிரதமர் மோடியும் அனைத்து மாநிலங்களையும் சமமாக கருத வேண்டும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்று பாரபட்சம் காட்டுமேயானால், தேசிய ஒருமைப்பாடு என்பது கேலிப் பொருளாகிவிடும் என ஒன்றிய அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.
- 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத்தொகை” வழங்கப்படும்.
சென்னை:
அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக் குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், போக்குவரத்து கழகங்களின் பணியாளர்களில், 2024-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் "சாதனை ஊக்கத்தொகை" வழங்கப்படும். இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 105 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் 6 கோடியே 41 லட்சத்து 18 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
- சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு தோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு முன்பாக பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
சில பக்தர்கள் சர்ப்பகாவடி எடுத்து வந்து வழிபாடு செய்வர். தற்போது சர்ப்பகாவடி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது பொங்கல் திருநாள் நெருங்குவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.






