search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Premalatha Vijayakant"

    • ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்தது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்தது.

    அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    " ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது. பணம், மது, தங்கக்காசு, சொலுசு, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள். மேலும், சட்டம்றற- ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்" என கூறப்பட்டது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    அதில், " ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லாததால் தேமுதிக புறக்கணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    • 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.
    • 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்கக்கோரி போராட்டம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.

    கடந்த 12 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது.

    திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

    கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. பணிநிலைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும்.

    ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பதிலாக மாநில திட்ட இயக்குநர் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆசிரியர்களின் பிரச்சினை குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்குகூட நேரம் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என்பது தெரியவில்லை. தற்காலிக ஆசிரியர்கள் எவரும் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதால் பணிநிலைப்புப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.

    ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழை ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. திமுக அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை.

    நூறு நாட்கள் என்று கூறி, இன்றைக்கு ஆயிரம் நாட்களையும் கடந்து, இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் அவர்களுடைய கோரிக்கையைச் செவி சாய்க்கவும் இல்லை, பரிசீலனை செய்து, அவர்களுக்கு ஆவணமும் செய்யவில்லை. இதுகுறித்து அவர்கள் குடும்பத்துடன் இன்றைக்கு, கோட்டையை நோக்கி பேரணி நடத்தியபோது கைது செய்து, காவல் துறையை வைத்து அடக்குமுறையை ஏவி விட்டுள்ளனர்.

    பகுதி நேர ஆசிரியர்களைக் கைது செய்ததை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப்படுத்தாமல், கண்ணீர் மல்க வாழந்து கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி.செங்குட்டுவன் நியமனம்.
    • தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும்.

    கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராமநாதன் தேமுதிகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த இராமநாதன்.

    இவர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், இவர் மாவட்ட கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (23.03.2024) முதல் நீக்கப்படுகிறார்.

    இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி.செங்குட்டுவன். இவர் இன்று (23.03.2024) முதல் நியமனம் செய்யப்படுகிறார்.

    இவருக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
    • அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்திகள் புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    முன்னதாக அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி இந்தியா கூட்டணி சார்பில் அமைதி பேரணி மற்றும் பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாண்டிச்சேரியில், 9 வயது சிறுமி இரண்டு நாட்களாகக் காணாமல் போன நிலையில், அந்தச் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு, சாக்கடையில் தூக்கி எறியப்பட்ட சம்பவம், நம் அனைவர் மனதையும் கலங்கச் செய்துள்ளது."

    "மேலும் இந்தச் செயலைச் செய்தவர்கள் போதைக்கு அடிமையாகிய இளம் வயது மற்றும் வயது முதிர்ந்தவர்கள். கஞ்சா விற்பனை என்பது மிக மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. இதனால் மனிதர்கள் மிருகங்களாக மாறக்கூடிய ஒரு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."

    "எனவே யாருக்கும் எந்த விதப் பாதுகாப்பும் இல்லை. இந்த சம்பவம் மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தப் பாதகச் செயலை செய்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நிச்சயம் வழங்க வேண்டும். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு எங்களது வருத்தத்தையும், சிறுவயதிலேயே தன் உயிரை இழந்த சிறுமிக்கு, தே.மு.தி.க. சார்பாகக் கண்ணீர் மல்க அஞ்சலியையும் செலுத்துகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

    • விஜயகாந்த்தின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.
    • விஜயகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அவரது மார்பில் அதிக அளவு சளி தேங்கியதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.

    ஆனால், விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார் என பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு விவரித்துள்ளார்.

    மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 

    மேலும் அந்த வீடியோவில், " தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார்.

    யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்.

    மருத்துவமனையில் சமூகமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வெளியில் மட்டுமே வதந்திகளால் பரபரப்பு நிலவி வருகிறது.

    வதந்திகளால், திரையுலகமும், குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றோம்.

    விரைவில் நல்ல செய்தி வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • விஜயகாந்தின் உடல்நிலை 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லை.
    • அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இன்று (நவம்ர் 29) மட்டுமே இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் கடைசியாக வெளியான அறிக்கையில், "தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது," என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    கேப்டன் விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக அறிக்கை வெளியானது முதல், திரைத்துறை பிரபலங்கள் துவங்கி அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலத்தரப்பினரும் விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் நலமாக இருக்கிறார் என்றும் விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, அனைவரையும் சந்திப்பார் என்றும் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

    ×