என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
    • திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத் தங்கை மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு சீமான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். பாஜக, அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1,100 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விட இருக்கின்றன.
    • 900 வீரர்கள் காளைகளை அடக்க தயாராக உள்ளனர்.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    ஜலிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த 1,100 காளைகள் உரிமையாளர்களால் இன்று 5 மணி முதல் அவனியாபுரத்திற்கு அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின் அவிழ்த்து விடப்பட்டது.

    அதேபோல் காளைகள் பிடிக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • காலையிலேயே மக்கள் பொங்கல் வைத்து சூரிய கடவுளை வணங்கி கொண்டாடினர்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே மக்கள் பொங்கல் வைத்து சூரிய கடவுளை வணங்கி, கரும்பு சுவைத்து பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை அன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்க இருக்கிறது.

    தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக விவசாய குடும்பங்களில் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளாக 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று சொல்வார்கள். 1958-ம் ஆண்டு 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற திரைப்படம் வெளிவந்தது. அதில் கவிஞர் மருதகாசி, 'தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம், தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம், ஆடியிலே விதை விதைச்சோம் தங்கமே தங்கம், ஐப்பசியிலே களை எடுத்தோம் தங்கமே தங்கம், கார்த்திகையிலே கதிராச்சு தங்கமே தங்கம், கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்...' என்று வரிகள் வரும் பாடலை எழுதியிருந்தார்.

    இது விவசாயத்தையும், தைப்பொங்கலின் சிறப்பையும் அப்படியே இன்றும் படம்பிடித்து காட்டுகிறது. இந்தப்பாடலில் குறிப்பிட்டு இருந்தபடி, ஆடியிலே விதை விதைத்து இப்போது அறுவடை கண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வில் தைத்திருநாள் வளம்கொண்டு வரும் நாளாக இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. இப்பண்டிகையை கொண்டாட சாதி-மதம் என்ற பேதம் கிடையாது. அனைவருக்கும் பொதுவான, அதிலும் தமிழர்களுக்கே உரித்தான பண்டிகையாகும். நாம் கொண்டாடும் மற்ற அனைத்து பண்டிகைகளும் பிறந்த இடம் தமிழ்நாடு இல்லை. ஆனால், பொங்கல் பண்டிகை மட்டும்தான் நமது தாய் பண்டிகை என்று கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் தோன்றியது.

    சங்க இலக்கியங்களிலேயே இத்திருநாள் குறிப்பிடப்பட்டிருப்பதால், சரித்திர காலம்தொட்டே இந்த நல்லநாள் கொண்டாடப்பட்டு வருவது புலனாகிறது. தை பொங்கலுக்கு பல சிறப்புகள் உண்டு. இது 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். முதல் நாள் போகிப்பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற தார்ப்பரியத்தின்படி வீட்டிலுள்ள பழைய பொருட்களையெல்லாம் கழித்து, எல்லாமே புதிதாத துலங்க வைப்பதுதான் போகிப்பண்டிகை. இதைவைத்து மற்றொரு பொருளும் கூறுவார்கள். உள்ளத்தில் உள்ள கவலைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு மகிழ்ச்சியை புதிதாக பிறக்கச்செய்யும் நாள் இது.

    அடுத்த நாள் பொங்கல் பண்டிகை. உழைப்பின் பலனை மகிழ்வோடு கொண்டாடும் திருநாள்தான் இந்த பொன்னாள். அந்தவகையில், இன்று புதுப்பானையில் பச்சரிசி இட்டு, வெல்லமும் சேர்த்து பொங்கலிடும்போது, பானையில் இருந்து பொங்கல் பொங்கி வழிவதுபோல, இந்தாண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும், செல்வமும் பொங்கி வழியும் என்பதுதான் இதன் பொருள். இந்தநாளின் கொண்டாட்டத்தில் மற்றவர்களுக்கும் வாழ்வளிக்கப்படுகிறது. பொங்கலிட வாங்கும் மண்பானைகளால் குயவர்களுக்கு வாழ்வு கிடைக்கிறது. கைத்தறி புத்தாடைகள் அணிவதால் நெசவாளர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. 3-வது நாள் மாட்டுப்பொங்கல். விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கும், பசு மாடுகளுக்கும் நன்றி மறவாத தமிழன் நன்றி தெரிவிக்கும் நாள். 4-வது நாள் காணும் பொங்கல். அந்த நாளில்தான் உற்றார்-உறவினர்களைக்கண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் நாள். அதுமட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளை விளையாடி மகிழும் நாளாகும்.

    இப்படி இந்த 4 நாட்கள் பண்டிகையும் 'நல்ல காலம் பிறந்தாச்சு...' என்று நம்பிக்கையோடு ஒரு ஆண்டை தொடங்கும் நாளாகும். இந்தாண்டு வளமிக்க ஆண்டாக விவசாயம் தழைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பருவமழை நன்றாக பெய்திருக்கிறது. தமிழக அரசும் விவசாய மேம்பாட்டுக்கு பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இயற்கை விவசாயமும் வளர்ந்து வருகிறது. பொருளாதாரமும் மேம்படுகிறது. ஆக, தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை இந்தாண்டு தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பல வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கெடுத்தோட செய்யும்.

    • சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது.
    • டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.

    சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

    சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவின் தொடக்க விழாவில் பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் தந்தை பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடல் பாடினார்.

    பெரியார் குறித்து டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.

    • பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • விஜய் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பலர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வரிசையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "பொங்கல் திருநாள்!

    உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.

    2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!

    இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.

    அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
    • ஆளுநர் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அவரது அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தன்னுடைய எக்ஸ் பதிவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது முதலமைச்சர் பதவியை குறிப்பிடாமல் ஒரு தனி மனிதராக பாவித்து ஒரு பதிவிட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

    தமிழ்நாட்டின் மரபின்படி தான் நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாட முடியுமென்று சொன்னதை, தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார். நாளை வருகிற இன்னொரு ஆளுநர் இன்னொரு நேரம் பாட வேண்டுமென்று கேட்டால் அப்படி செய்ய முடியுமா?

    மேலும், இதனால் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பு செய்துவிட்டார்கள். அவர்கள் தத்துவமே அப்படித்தான் என்று பதிவிடுவது எல்லாம் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பாணி திசைதிருப்பல் வேலையே. ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், 'திராவிட மாதிரி என்று எதுவும் இல்லை, திராவிடத் தத்துவம் காலவாதியாகிவிட்டது' என்று ஒரு நாளிதழுக்கு கொடுத்த பேட்டியை முதன்மைப்படுத்தி வைத்திருக்கும் அளவிற்கு அத்துமீறி நடந்து கொள்பவர் என்பதையும் அதைப் பெருமையாக கருதிக் கொண்டிருப்பவர் என்பதையும் காண முடிகிறது. ஆளுநராக நியமிக்கப்பட்டாலே வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதிக் கொண்டு அடாவடி செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் சங்பரிவாரம் ஏற்கவோ மதிக்கவோ மாட்டோம் என்று சொன்னதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

    எனவே, ஆளுநர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு தான் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவருக்கு அத்தகைய குணமில்லை எனில் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    • இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

    சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

    இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.

    இத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர். இவற்றுடன் கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    சென்னை சங்கமம் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே. நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் நடைபெறுகிறது. திருவிழா மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். 

    • புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் மூடப்படவுள்ளன.
    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜனவரி 15) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.012025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.

    எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் ஞாயிறு அட்டவணையின்படி இயக்கப்படும்.
    • ஜனவரி 17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் சேவை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமையின் அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணை:

    1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள்இயக்கப்படும்.

    4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    சனிக்கிழமை அட்டவணை:

    1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    2. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    3. காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    • பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ரெயில் சேவை நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது.

    இதே போல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், சூளுர், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. 

    • தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார்
    • தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

     நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சிவா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தின் மாடியில் அடகு கடை நடத்தி வந்தார். கீழ் தளத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி அதிகாலையில் அடகு கடைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்து ரூ. 3 லட்சம் பணம் மற்றும் 250 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்த போது மங்கி குல்லா அணிந்து வந்த மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து நெல்லை சரக டி.ஜ.ஜி. மூர்த்தி ஆலோசனையின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் நாங்குநேரி டி.எஸ்.பி. பிரசன்னகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜகுமாரி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ரெட்டார் குளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் ராமகிருஷ்ணன் (வயது 35) என்பவர் இந்த கொள்ளையை நிகழ்த்தியதும், அவர் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 137 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

    விசாரணைக்கு பின்னர் நாங்குநேரி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி இன்று காலை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த ராமகிருஷ்ணனின் தாய் மீனாட்சி (65) விசாரணைக்கு பயந்து நேற்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இந்த சம்பவத்தில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டது எப்படி?. வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

    ராமகிருஷ்ணன் பல ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கே தன்னுடன் பணிபுரிந்த ஒரு இளம்பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மீது தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

    இவர் ஏற்கனவே மங்கி குல்லா அணிந்து நாசரேத் பகுதியில் திருட்டை நிகழ்த்தியதை அடிப்படையாக கொண்டு நடத்திய விசாரணையில் தற்போது அவர் சிக்கினார்.

    இவர் திட்டமிட்டோ, கூட்டாளிகளோடு சேர்ந்தோ எங்கும் கொள்ளையடிக்க செல்வதில்லை. தனியாக சாதாரணமாக சென்று பூட்டிய வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு பின்னர் 1 வருடம் வரை தெலுங்கானாவில் போய் தங்கி கொள்வார். பின்னர் சொந்த ஊருக்கு வந்து மீண்டும் கைவரிசை காட்டி விட்டு சென்றுவிடுவதாக அவர் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அடகு கடையில் கொள்ளை அடிக்கும் நாளுக்கு முந்தைய நாள் கோவில் கொடை விழாவுக்காக அவர் சொந்த ஊர் வந்துள்ளார். வந்த இடத்தில் தான் அடகு கடையில் கொள்ளையடிக்க அவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது பணத்திற்கு அருகிலேயே லாக்கரின் சாவியும் இருந்துள்ளது.

    அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார். அன்றைய தினமே அந்த நகைகளில் பாதியை தனது தாய் மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு மீதி நகைகளுடன் தெலுங்கானா சென்றுள்ளார்.

    இந்நிலையில் அங்கு தனது வழக்குகளை நடத்தி வரும் தெலுங்கானாவை சேர்ந்த வக்கீலிடம் பாதி நகைகளை கொடுத்துள்ளார். இவ்வாறாக நகைகளை மேலும் 2 பேரிடமும் கொடுத்து விட்டு அவ்வப்போது அதனை வாங்கி விற்று சொகுசாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

    மீனாட்சியிடம் கொடுத்த நகைகளை அவர் தனது மற்ற குழந்தைகளுக்கு பங்கு வைத்து கொடுத்துள்ளார். இதனை அறிந்த ராமகிருஷ்ணன் தனது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த சம்பவங்கள் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே பல்வேறு துப்புகளின் அடிப்படையில் ராமகிருஷ்ணனை போலீசார் நெருங்கிய நிலையில் இந்த சம்பவமும் அவர்களது சந்தேகத்தை உறுதியாக்கியது. தொடர்ந்து அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய வக்கீல் மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். மீதமுள்ள 113 பவுன் தங்க நகைகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமுன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
    • இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்.

    தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில், தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.

    இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.

    வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது, சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்- வள்ளலார் அதனை மீட்டார்.

    தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது எனக்கு வலியை தருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×