என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non Veg Food"

    • சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல.
    • சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன.

    தக்காளி அதிகம் சாப்பிட்டாலோ, சமையலில் அதிகம் சேர்த்தாலோ சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்பது கட்டுக்கதையே. ஏனெனில் உலகளவில் பொதுவாக உண்ணப்படும் காய்கறிகளுள் ஒன்றாக தக்காளி விளங்குகிறது. அதனை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படியானால் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்.

    சிறுநீரக கற்கள் படிவதை தடுப்படி எப்படி?

    உடலில் நீரிழப்பு ஏற்படுவதே சிறுநீரக கற்கள் படிவதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும் சரி, கடுமையான உடல் உழைப்பு கொண்ட வேலையில் ஈடுபட்டாலும் சரி தினமும் குறைந்தது 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ புரதம் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

    உணவு வழக்கத்தை மாற்றுவதன் மூலம் சிறுநீரக கற்களை தடுக்க முடியுமா?

    சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல. கால்சியம் ஆக்சலேட் உள்பட பிற ஆக்சலேட் படிகங்கள், யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட் கற்கள், சிஸ்டன் கற்கள் போன்றவற்றின் காரணமாகவும் சிறுநீரக கற்கள் உருவாகலாம். இருப்பினும் ஆக்சலேட் படிகங்கள் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகுவது அதிகமாக இருக்கிறது. தக்காளியில் ஆக்சலேட் இருப்பதால் அதனை சிறுநீரக கற்களுடன் முடிச்சு போட்டுவிட்டனர்.

    இந்த கட்டுக்கதை எப்படி தோன்றியது?

    தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன. பொதுவாக சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. தக்காளியில் அவை இருப்பதால் இந்த கட்டுக்கதை தோன்றிவிட்டது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவுக்கே ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரக கற்களை ஏற்படுத்த போதுமானதல்ல.

    சில அசைவ உணவுகள் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்து உண்மையா?

    இதுவும் தவறான கருத்து. உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் சேர்வது காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். மீன் மற்றும் விலங்கு இறைச்சியிலுள்ள புரதங்கள் உள்ளிட்ட பியூரின் நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும். எனினும் இந்த விஷயத்தில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்காது. மருத்துவர்களின் ஆலோசனையும், மருந்துமே கைகொடுக்கும்.

    எதனால் ஏற்படுகிறது?

    அடிப்படை உடல்நலப்பிரச்சனை, சில நொதிகளின் குறைபாடு அல்லது வளர்சிதை மாற்றப்பிரச்சனைகள் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும். குறிப்பாக சிறுநீரகங்கள் உடலில் இருந்து கால்சியம் ஆக்சலேட் படிகங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதை நிறுத்தும்போது ஆக்சலோசிஸ் என்னும் பாதிப்பு உருவாகும். இது அரிய வகை வளர்சிதை மாற்றக்கோளாறு ஆகும். இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை நிறுத்தி ஆக்சலேட் படிகங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும்.

    • குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.
    • பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும்

    திருப்பதி:

    ஐதராபாத் பிரியாணி பெயரைக் கேட்டாலே ருசிக்க தோன்றும். சுவையான இந்த பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் பிரபல ஓட்டல் நிர்வாகம் ஒன்று தற்போது 3 இடங்களில் புதிய கிளைகளை திறந்தது. இங்கு 2 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.

    இதனைக் கண்ட அசைவ பிரியர்கள் ஓட்டல் முன்பு குவிந்தனர். அப்போதுதான் ஓட்டல் நிர்வாகம் ஒரு நிபந்தனையை விதித்தது. அது என்னவென்றால் பழைய 2 ரூபாய் நோட்டுகள் தந்தால் மட்டுமே 2 ரூபாய்க்கான பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்தது.

    இதனை கேட்ட வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 2 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.

    இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில்:-

    பொதுமக்களிடம் இன்னும் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த நூதன விற்பனையை தொடங்கினோம். இதுவரை எங்களிடம் 120 ரூபாய் மதிப்பிலான 2 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

    எங்கள் உணவகம் சார்பில் 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகள் கொண்ட பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.

    இதன் விலை ரூ.1,999 இந்த கட்டணத்தை செலுத்தி 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசை வழங்கி வருகிறோம். இதுவரை இந்த போட்டியில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் மூடப்படவுள்ளன.
    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜனவரி 15) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.012025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.

    எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரையின் துவக்கத்தில் ராகுல்காந்தி அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்ததையடுத்து அவர் சாப்பிட்ட ஓட்டல் விளக்கம் அளித்தது. #RahulGandhi #MansarovarYatra
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 31-ந் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றார். அன்று இரவு அங்குள்ள வூட்டு ஓட்டலில் ராகுல்காந்தி தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட்டார்.

    அப்போது அவர் அசைவ உணவு வகைகளையும், சிக்கன் சூப்பும் சாப்பிட்டதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

    அந்த ஓட்டல் ஊழியரிடம் பேட்டி எடுத்து செய்தியை வெளியிட்டு இருந்தது.

    இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி கூறும் போது, “ராகுல்காந்தி புனித யாத்திரை செல்லும் போது அசைவ உணவை சாப்பிட்டதன் மூலம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தி விட்டார். அவர் அசைவம் சாப்பிட்டதில் தவறு இல்லை. புனித யாத்திரை சென்றபோது அசைவம் சாப்பிட்டது கண்டிக்கத்தக்கது” என்றார்.

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து வூட்டு ஓட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ராகுல்காந்தி சைவ உணவுகளையே சாப்பிட்டதாக தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இமாச்சல பிரதேச மாநிலம் ஜாவாலி தொகுதி காங்கிரஸ் முன்னாள் நீரஞ்பார்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணரின் கதையை விளக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. #RahulGandhi #MansarovarYatra 
    ×