என் மலர்
நீங்கள் தேடியது "சிறுநீரக கற்கள் பிரச்சினை"
- சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல.
- சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன.
தக்காளி அதிகம் சாப்பிட்டாலோ, சமையலில் அதிகம் சேர்த்தாலோ சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்பது கட்டுக்கதையே. ஏனெனில் உலகளவில் பொதுவாக உண்ணப்படும் காய்கறிகளுள் ஒன்றாக தக்காளி விளங்குகிறது. அதனை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படியானால் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் படிவதை தடுப்படி எப்படி?
உடலில் நீரிழப்பு ஏற்படுவதே சிறுநீரக கற்கள் படிவதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும் சரி, கடுமையான உடல் உழைப்பு கொண்ட வேலையில் ஈடுபட்டாலும் சரி தினமும் குறைந்தது 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ புரதம் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.
உணவு வழக்கத்தை மாற்றுவதன் மூலம் சிறுநீரக கற்களை தடுக்க முடியுமா?
சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல. கால்சியம் ஆக்சலேட் உள்பட பிற ஆக்சலேட் படிகங்கள், யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட் கற்கள், சிஸ்டன் கற்கள் போன்றவற்றின் காரணமாகவும் சிறுநீரக கற்கள் உருவாகலாம். இருப்பினும் ஆக்சலேட் படிகங்கள் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகுவது அதிகமாக இருக்கிறது. தக்காளியில் ஆக்சலேட் இருப்பதால் அதனை சிறுநீரக கற்களுடன் முடிச்சு போட்டுவிட்டனர்.
இந்த கட்டுக்கதை எப்படி தோன்றியது?
தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன. பொதுவாக சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. தக்காளியில் அவை இருப்பதால் இந்த கட்டுக்கதை தோன்றிவிட்டது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவுக்கே ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரக கற்களை ஏற்படுத்த போதுமானதல்ல.
சில அசைவ உணவுகள் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்து உண்மையா?
இதுவும் தவறான கருத்து. உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் சேர்வது காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். மீன் மற்றும் விலங்கு இறைச்சியிலுள்ள புரதங்கள் உள்ளிட்ட பியூரின் நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும். எனினும் இந்த விஷயத்தில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்காது. மருத்துவர்களின் ஆலோசனையும், மருந்துமே கைகொடுக்கும்.
எதனால் ஏற்படுகிறது?
அடிப்படை உடல்நலப்பிரச்சனை, சில நொதிகளின் குறைபாடு அல்லது வளர்சிதை மாற்றப்பிரச்சனைகள் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும். குறிப்பாக சிறுநீரகங்கள் உடலில் இருந்து கால்சியம் ஆக்சலேட் படிகங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதை நிறுத்தும்போது ஆக்சலோசிஸ் என்னும் பாதிப்பு உருவாகும். இது அரிய வகை வளர்சிதை மாற்றக்கோளாறு ஆகும். இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை நிறுத்தி ஆக்சலேட் படிகங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும்.
- வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள்.
- வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும்.
இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நல்லது. வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
- வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும்.
- சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன.
சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம் சிஸ்டின், ஷேந்தீன் வகை கற்கள் உருவாகிறது. சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. அவை வருமாறு:-

1) சிறுகண் பீளை குடிநீர், நெருஞ்சில் குடிநீர், நீர்முள்ளி குடிநீர் இவைகளில் ஒன்றை ஒரு டீஸ் பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மி.லி. வீதம் காலை, மாலை என இரு வேளை குடிக்கவும்.
2) அமிர்தாதி சூரணம் 1 கிராம், நண்டுக்கல் பற்பம் 200 மி.கி., சிலாசத்து பற்பம் 200 மி.கி., வெடியுப்பு சுண்ணம் 100 மி.கி. வீதம் இருவேளை தண்ணீர் அல்லது இளநீரில் சாப்பிடலாம்.
3) கல்லுடைக்குடோரி - காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். கல்லுருக்கி இலை மற்றும் இரணகள்ளி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர சிறுநீரக கல் குணமாகும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
சிறுநீரகக் கற்களை தடுக்கும் முறைகள்:
வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது, கரைக்கிறது. எனவே பொட்டாசியம்
சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை சாப்பிடலாம்.
சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.
கால்சியம் அளவு குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.

இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ருட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ள பருப்பு வகைகள், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும்.
வெண்பூசணி, வெள்ளரிக்காய், கோவைக்காய். முள்ளங்கிக்காய், கரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்க வேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.






