என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் .
    • முற்றுகை போராட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்க அழைப்பு.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசிய மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், காவல் நிலையங்களில் 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 22-ம் தேதி சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக வி.கே. சசிகலாவின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது.
    • சசிகலாவின் காளையை வளர்த்து வரும் மலையாண்டிக்கு ரூ.10 லட்சம் மதிப்பு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவில் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கி 2 ஆம் பிடித்து அரவிந்த் திவாகருக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக வி.கே. சசிகலாவின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து சசிகலாவின் காளையை வளர்த்து வரும் மலையாண்டிக்கு ரூ.10 லட்சம் மதிப்பு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளையாக இரண்டாம் இடம் பிடித்த காளை உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்திக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
    • நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடுகிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன. நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடுகிறார்.

    இதனால் தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்கி உள்ளது. இதன்படி பெரியார் நகரில் வீடு வீடாக சென்று வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

    • 11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.
    • 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்துள்ளார்.

    குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2 ஆம் இடம் பிடித்துள்ளார். திருப்புவனம் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.

    19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 15 காளைகளை அடக்கி 2 ஆம் பிடித்து அரவிந்த் திவாகருக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

    • இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த நவீன் குமார் மார்பில் மாடு குத்தியது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்ற இளைஞரின் மார்பில் மாடு குத்தியது.

    இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார்.

    ஜல்லிக்கட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது.
    • வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார்.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், அவனியாபுரத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்தபடி நடிகர் வேல ராமமூர்த்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து ரசித்தார்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால், கோபமடைந்த வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார். இதையடுத்து, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

    • இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் மற்றும் 2 தங்க காசுகள் பரிசு என அறிவிக்கப்பட்டது.

    பின்னர் அந்த மாட்டை அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற மாடுபிடி வீரர் பாய்ந்து பிடித்தார். இதனையடுத்து களத்திலேயே ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 2 தங்க காசுகள் அவருக்கு வழங்கப்பட்டது.

    • பாமக இளைஞர் சங்கத் தலைவராக பரசுராமன் முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்தார்.
    • இது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருது முரண்பாடு எழுந்தது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.

    இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய தைத்திருநாள் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரது இல்லங்களிலும் இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பொங்கி வழியட்டும். உங்களது அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை நியமனம் செய்தது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருத்து முரண்பாடு எழுந்த நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து இன்று பொங்கல் கொண்டாடியுள்ளனர். 

    • பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நம் பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைப் போற்றி மகிழ்வோம்

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி பொங்கல் வாழ்த்து பெற்றார்.

    இது தொடர்பாக உதயநிதி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய ஒன்றியத்தின் ஒப்பற்றத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் - அன்னையாரிடமும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்பத்தாருடன் இன்று காலை வாழ்த்து பெற்றோம்.

    நம் பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைப் போற்றி மகிழ்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • சிறப்பு ரெயிலானது மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும்.

    பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இந்த தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயிலானது (ரெயில் எண் 06168) வருகிற 19-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (15-ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஶ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று பவுனுக்கு 200 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 80 ரூபாய் குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது.

    சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு 200 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு பவுன் 58,640 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,330 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 2 ரூபாய் குறைந்துள்ளது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720

    12-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

    11-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

    10-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

    09-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    12-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    11-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    10-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    09-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி புறப்பட்ட ரெயிலில் தரம் புரண்டது.
    • சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.

    விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகள் ரெயில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் ரெயில் நிலையத்தை தாண்டும்போது இந்த ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகள் அப்படியே தண்டவாளத்தில் இருந்து இறங்கி நின்றன. 5 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால், ரெயில் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரெயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்படடனர்.

    ரெயில்வே ஸ்டாஃப்கள் மற்றும் இன்ஜினீயர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயிலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக செல்லும் மற்ற ரெயில்களுக்கான வழி உடனடியாக சரி செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாரா? அல்லது சதி வேலையா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    ×