என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • பாகிஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
    • பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தியது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர். இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • பெட்ரோல் பங்க் நன்கொடையாக கொடுக்கப்பட்டது.
    • வீடியோ வைரலாகி சமூக வலைத்தளவாசிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    திருமணத்திற்காக வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என சட்டம் உள்ளது. இருப்பினும் ஆங்காங்கே வரதட்சணை கொடுமையால் புதுப்பெண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகள் குடும்பத்தினரால் மணமகனுக்கு பெட்டி, பெட்டியாக வரதட்சணைகள் வழங்கப்பட்டது. குண்டூசி முதல் ஏ.சி. வரை சீர்வரிசைகளும், 1 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி, 210 பிகா நிலம், ரூ.1½ கோடி ரொக்கம் மட்டுமின்றி பெட்ரோல் பங்க் நன்கொடையாக கொடுக்கப்பட்டது.

    வட இந்தியாவில் மார்வாரி மற்றும் ஜாட் கலாசாரத்தில் திருமண சடங்கின்போது பரிசுகள் வழங்குவது இயல்புதான் என்றாலும் வரதட்சணையாக ரூ.21 கோடி மதிப்பிலான பொருட்களை வாரிக் கொடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி சமூக வலைத்தளவாசிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



    • இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது
    • வடக்கு குஜராத்தில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது

    ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

    தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிக்கையின்படி, இன்று காலை 9.30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

    மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. தற்போது நிலைமை கண்காணிக்கப்படுகிறது.

    முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு குஜராத்தில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

    • அப்போது மாணவரின் குடும்பத்தினர் அவர்களிடம் வினாத்தாளை காட்டச் சொன்னார்கள்.
    • ஆனால் அவர்கள் மறுக்கவே, மாணவனின் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்

    இன்று நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக ராஜஸ்தான் போலீஸ் மூன்று பேரை கைது செய்தது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் பால்வான் (27), முகேஷ் மீனா (40) மற்றும் ஹர்தாஸ் (38) என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    வெள்ளிக்கிழமை, மூவரும் மாணவனையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் குருகிராமிற்கு அழைத்துச் சென்று பணத்தைக் கேட்டனர். அப்போது மாணவரின் குடும்பத்தினர் அவர்களிடம் வினாத்தாளை காட்டச் சொன்னார்கள்.

    ஆனால் அவர்கள் மறுக்கவே, மாணவனின் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் நேற்று கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

    • 'நீட்' தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது.
    • இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

    2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 17 வயது மாணவி நேற்று இரவு தந்து அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். .

    கோட்டாவில் தனது பெற்றோருடன் வசித்து வந்த மாணவிஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட்-யுஜி தேர்வுக்குத் தயாராகி வந்தாள். இந்நிலையில், உரிய பாடங்களை படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தேர்வுக்கு முந்தைய நாள் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக ஏப்ரல் 23 ஆம் தேதி பஞ்சாபில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை அவர் அளித்துள்ளார்.
    • பணத்துக்காக அவர் உளவு பார்த்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    காஷ்மீர் தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சால்மரில் வசிக்கும் பதான்கான் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை கைது செய்தது. ஒரு மாதத்துக்கு முன்பே அவர் விசாரிக்கப்பட்டார். தற்போது தான் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    பதான்கான் 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று அங்கு புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை அவர் அளித்துள்ளார். பணத்துக்காக அவர் உளவு பார்த்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 48 ரன்கள் சேர்த்தார்.

    நடப்பு தொடரில் களம் இறங்கிய 11 ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல்லில் தொடர்ந்து 11 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    இதற்கு முன் 2014-ம் ஆண்டில் ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்காக 10 ஆட்டங்களில் தொடர்ந்து 25 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    நடப்பு ஐ.பி.எல்லில் சூர்யகுமாரின் ரன் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்தது. இதையடுத்து, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத்தின் சாய் சுதர்சனிடம் (456 ரன்) இருந்து தட்டிப் பறித்தார்.

    • ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    2வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை பஞ்சாப்பும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.

    ராஜஸ்தான் அணி 11 போட்டியில் 3 வெற்றி, 8 தோல்வி என எட்டாவது இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    • சந்தீப் சர்மா இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்விகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்த சந்தீப் சர்மா கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சந்தீப் சர்மா இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி வெறும் 9 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மாவுக்கு பதில் ஆகாஷ் மத்வால் சேர்க்கப்பட்டார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்தது.

    • கிரிஜா வியாசின் இறுதிச்சடங்கு உதய்ப்பூரில் நடக்கிறது.
    • அவரது மறைவுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்தார்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கிரிஜா வியாஸ் (79), ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் வசித்து வந்துள்ளார்.

    கடந்த மார்ச் 31-ம் தேதி நடந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவருடைய துப்பட்டாவில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால், அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் பின்பு, அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில், ஒருமாத கால சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு உதய்ப்பூரில் நடக்கிறது. அவரது மறைவுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல் மந்திரி பஜன்லால் சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் குவித்தது.

    ஜெய்ப்பூர்:

    18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது.

    முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா- ரிக்கல்டன் ஜோடி 116 ரன்கள் சேர்த்த நிலையில் ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோகித் 53 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்து இணைந்த சூரியகுமார் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி கடைசி வரை நின்றது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    ஹர்திக் பாண்ட்யா, சூரியகுமார் தலா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    முதல் ஓவரில் அதிரடி வீரர் சூர்யவன்ஷி டக் அவுட்டானார். 2வது ஓவரில் 2 சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 4வது ஓவரில் நிதிஷ் ரானா, 5வது ஓவரில் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் அவுட்டாகினர்.

    அடுத்து வந்த ஷுபம் துபே, துருவ் ஜுரலும் நிலைத்து நிற்கவில்லை

    இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் 6-வது தொடர் வெற்றி இதுவாகும். அத்துடன், புள்ளிப்பட்டியலிலும் மும்பை அணி முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.

    ×