என் மலர்

  நீங்கள் தேடியது "drowned in river"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருந்தது.
  • கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் எதிரே காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

  இதன்பேரில் கொடுமுடி போலீசார் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த நபருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்று தெரியவந்தது.

  ஆனால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  முதியவர் ஆற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார்.
  • பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.

  மொடக்குறிச்சி:

  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கரட்டாங்காடு அடுத்துள்ள அன்னாசி கடை வீதியை சேர்ந்தவர் செல்வம். தறி பட்டறை தொழிலாளி.

  இவரது மகன் புவனேஷ் (வயது 17). இவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

  இந்நிலையில் புவனேசுக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு கரட்டாங்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.

  கடந்த 3 நாட்களாக புவனேஷ் மற்றும் அவரது தந்தை செல்வம் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று பரிசல் துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் காலை நேரத்தில் குளித்து வந்தனர்.

  அதேபோல் இன்று காலை 8 மணிக்கு தந்தை, மகன் 2 பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது குளித்து கொண்டிருத்த போது புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார். பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.

  இது குறித்து மொடக்கு–றிச்சி தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி மாணவர் புவனேஷ் உடலைதேடினர்.

  பின்னர் புவனேஷ் உடலை மீட்டு மொடக்குறிச்சி போலீ–சாரிடம் ஒப்படைத்தனர்.

  தந்தை கண் முன்பே மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.
  • நீச்சல் தெரியாததால் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார்.

  சத்தியமங்கலம்:

  கோபிசெட்டிபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வசந்த் (19). இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

  இந்த நிலையில் வசந்த் தனது கல்லூரி நண்பர்க ளுடன் சத்தியமங்கலம் அடுத்த அரசூர் பவானி ஆற்று பகுதிக்கு சென்றார்.

  இதையடுத்து வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.

  அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நீச்சல் தெரியா ததால் அவர் திடீரென நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.

  இதை கண்ட அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். இவர்களது சத்தத்தை கேட்டு அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டனர். ஆனால் அவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

  இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்தும் அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

  ×