என் மலர்
இந்தியா

ராஜஸ்தானில் சோகம்: ஆற்றில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு
- இளைஞர்கள் குழு டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றங்கரை சென்றது.
- இதில் 8 பேர் மூழ்கி இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள் குழு பிறந்தநாள் கொண்டாட டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றங்கரை சென்றது.
அவர்களில் சிலர் நீந்துவதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது அவர்கள் திடீரென நீரில் மூழ்கத் தொடங்கினர். மற்ற நண்பர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
இதில் 8 இளைஞர்கள் மூழ்கி இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர் என தகவல் வெளியானது.
இதுகுறித்து உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கூட்டு மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இளைஞர்கள் நீரில் மூழ்கிய சம்பவத்தில் 8 பேர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உடல்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
ஆற்றில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழந்ததை அறிந்து முதல் மந்திரி பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்தார்.