என் மலர்
நீங்கள் தேடியது "AshokGehlot"
- 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காங்கிரசில் விரிசல் ஏற்பட்டது.
- முதல்வர் பதவி கெலாட்டுக்குச் சென்றதிலிருந்தே பைலட் - கெலாட் இடையேயான பகைமை தொடங்கியது
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசியலில் நீண்டகாலமாக நடந்து வந்த அரசியல் மோதலுக்கு ஒரு திருப்புமுனையாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், முன்னாள் மாநில முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று ஜெய்ப்பூரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவாதத்துக்கு வலு சேர்த்துள்ளது.
சச்சின் பைலட், தனது தந்தை, மறைந்த மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் 25வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்ள அசோக் கெலாட்டை தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். இந்த நினைவு நிகழ்ச்சி வரும் ஜூன் 11 ஆம் தேதி ராஜேஷ் பைலட்டின் முன்னாள் நாடாளுமன்றத் தொகுதியான தௌசாவில் நடைபெறுகிறது.
2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காங்கிரசில் வெடித்த அரசியல் நெருக்கடிக்குப் பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.
2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவி கெலாட்டுக்குச் சென்றதிலிருந்தே பைலட் - கெலாட் இடையேயான பகைமை தொடங்கியது. 2020இல் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இந்த மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இந்தச் சூழலில் இந்தச் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் முதல் மந்திரி அசோக் கெலாட்(67), குடல் இறக்க அறுவைச் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு நேற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘சரியான நேரத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் தற்போது உடல்நிலை தேறி வருகிறேன். விழிப்புணர்வுடன் செயல்படுவதே பன்றிக் காய்ச்சல் உட்பட அனைத்து நோய்களையும் முழுவதுமாக குணப்படுத்தக் கூடியதாகும்.
ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து மக்களும் தங்கள் உடல்நலனை பராமரிப்பதுடன், உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அறுவைச் சிகிச்சை செய்துள்ள ராஜஸ்தான் முதல்வர், விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று குணமடைந்த செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்தேன். மேலும் அசோக் கெலாட் நலமுடன் இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModiWishes #RajastanCM #AshokGehlot






