என் மலர்
இந்தியா

ரூ. 14.5 லட்சம் மதிப்புள்ள மாலை.. துப்பாக்கி முனையில் கொள்ளை - திருமண வீட்டில் சோகம்
- பண மாலையை அரியானாவில் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நூதனமான முறையில் ரூ.14.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1-ந்தேதி அன்று நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு அணிவிப்பதற்காக 500 ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. இந்த மாலையை அரியானாவில் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளனர். இதைதொடர்ந்து திருமணத்திற்கு பிறகு அதனை உரிமையாளரான ஷாத் இருசக்கர வாகனத்தில் அரியானாவிற்கு எடுத்து சென்று கொண்டு இருந்தார்.
இதனை அறிந்த மர்மநபர்கள் காரில் வந்து இருசக்கரவாகனத்தின் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷாத்தை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டி மாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஷாத் அளித்த புகாரின் பேரில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






