என் மலர்
ராஜஸ்தான்
- ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
- பாழடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பள்ளி இன்று காலை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பாழடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்து ஜலாவர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி அமித் குமார் புடானியா சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பள்ளியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- ஆசிரியர் ஷம்புலால் தகாத், மாணவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது.
- புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷம்புலால் தகாத்தை கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஷம்புலால் தகாத். இவர் அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் செல்போன்களில் இருந்த அந்தரங்க வீடியோக்களை, தனது செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர் அதை வைத்து மாணவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். இந்த விகாரம் பற்றி அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ஷம்புலால் தகாத், மாணவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷம்புலால் தகாத்தை கைது செய்தனர்.
தவறு செய்யும் மாணவர்களை திருத்த வேண்டிய ஆசிரியரே இப்படி நடந்தால் எப்படி? என்று சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
- கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.
- அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ராஜஸ்தானின் பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரெயில் நிலையத்தில் இன்று காலை ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.
அதிகாலை 3 மணியளவில், நிலையத்தில் இருந்து கிளம்பியபோது கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.
லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஷார்ட் சர்க்யூட் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தின் காரணமாக, அந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாணவி பள்ளிக்கு வந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.
- இது குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிதான நிகழ்வு.
ராஜஸ்தான் மாநிலம் சிகாரின் டான்டா நகரை சேர்ந்த சிறுமி பிராச்சி குமாவத் (வயது 9) இவர் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார் .
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் பள்ளியில் சக மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட சென்றார். சாப்பாடு பாத்திரத்தை திறந்த போது மாணவிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அவள் வகுப்பிலேயே சரிந்து விழுந்தார்.
பதறிப்போன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
குடும்பத்தினர் அவளை சிகாரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.
மாணவி பள்ளிக்கு வந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். காலை பிரார்த்தனை மற்றும் கூட்டத்திலும் பங்கேற்றார். மதிய உணவு நேரத்தில் அவள் மயக்கமடைந்துள்ளார்.
மாணவி மாரடைப்பு காரணமாக இருந்து விட்டதாக தெரிவித்தனர்.
பள்ளியில் பதிவு செய்யப்பட்ட கடைசி வீடியோவில், மாணவி சிரித்துக் கொண்டே தன்னையும் தனது வகுப்புச் சான்றிதழ்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்து செல்வது காணப்பட்டது.
பிராச்சிக்கு எந்த தீவிர அறிகுறிகளும் இல்லை என்றும், அவரது திடீர் மரணம் தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இது குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிதான நிகழ்வு. சில நேரங்களில், பிறவி இதய நோய் அல்லது மின் தூண்டுதலில் தொந்தரவு இருக்கலாம், பெற்றோர்கள் அவற்றைக் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் அது விசாரிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் வர்மா என்பவர் கூறினார்.
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
- ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
- கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் அடித்துசெல்லட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜுன்ஜுனு மாவட்டத்தின் பாக்வாலி பகுதியில், கடந்தவாரம் பெய்த கனமழை காரணமாக பாக்வாலி - ஜஹாஜை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்லி நதிப் பகுதியில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகி நதி நீர் பாய்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- ரூ.15 கோடி மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் தயாரித்துள்ளனர்.
- கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ராஜஸ்தானில் போதைப்பொருள் தயாரித்ததற்காக இரண்டு தனியார் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கு அமெரிக்க தொலைக்காட்சி தொடரான Breaking Bad பாணியில் அமைந்துள்ளது.
அவர்கள் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் தயாரித்துள்ளனர். இதில் 4.22 கிலோவை மருந்துகள் விற்பனை செய்துள்ளனர். இதன் பயன்பாடு கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கங்காநகரில் உள்ள டிரீம் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் போதைப்பொருள் தயாரித்து வந்தனர்.
விசாரணையில், இருவரும் சுமார் இரண்டரை மாதங்களாக இங்கு போதைப்பொருள் தயாரித்து வந்தது தெரியவந்தது.
டெல்லியில் இருந்து போதைப்பொருள் தயாரிக்க ரசாயனங்கள் மற்றும் பிற உபகரணங்களை அவர்கள் கொண்டு வந்தனர். வேலைக்கு விடுமுறையில் இருந்தபோது அவர்கள் போதைப்பொருள் தயாரித்து வந்தனர்.
ஜூலை 8 ஆம் தேதி காலை போதைபொருள் தடுப்புப் பிரிவினர் (NCB) நடத்திய சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ராஜஸ்தானில் விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் கீழே விழுந்தது. வழக்கமான பயிற்சியின்போது இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
தகவலறிந்து போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விமான விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- லால் வைஷ்ணவ் - சரஸ்வதி வைஷ்ணவ் இணையருக்கு மூத்த மகன் அஸ்வினி வைஷ்ணவ் ஆவார்.
- ஜோத்பூரில் குடியேறி வழக்கறிஞராகவும், வரி ஆலோசகராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
ராஜஸ்தான்: மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை டவு லால் வைஷ்ணவ், வயது மூப்பு காரணமாக இன்று காலை (செவ்வாய்க்கிழமை) காலமானார்.
அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 11:52 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாலி மாவட்டத்தில் உள்ள ஜீவன்ட் கலா கிராமத்தைச் சேர்ந்த டவு லால் வைஷ்ணவ், பின்னர் ஜோத்பூரில் குடியேறி வழக்கறிஞராகவும், வரி ஆலோசகராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
அவர் தனது சொந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றி உள்ளார். லால் வைஷ்ணவ் - சரஸ்வதி வைஷ்ணவ் இணையருக்கு மூத்த மகன் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இளைய மகன் ஆனந்த் வைஷ்ணவ் ஆவர்.
இறுதிச் சடங்குகள் இன்று மாலை ஜோத்பூர், காகாவில் உள்ள வைஷ்ணவ் சமாஜ் மயானத்தில் நடைபெற்றன. இதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் சபாநாயகர் வாசுதேவ் தேவ்நானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து பகிர்ந்து கொண்டார்.
- சமூக ஊடகங்களில் ஊக்கமளிக்கும் ரீல்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
ராஜஸ்தான் போலீஸ் அகாடமியில் போலி ஆவணங்களுடன் ஒரு பெண் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நாக்வார் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகள் மோனா பாக்லியா. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தோல்வியடைந்த பிறகு, மூலி தேவி என்ற பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி, தான் தேர்ச்சி பெற்றதாக சமூக ஊடகங்களில் கூறிக்கொண்டார்.
இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியாளர்களுக்கான வாட்ஸ்அப் குழுவிலும் மூலி தேவி என்ற அடையாளத்துடன் இணைந்துள்ளார். விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கை பெற்றதாகக் கூறி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளார்.
இரண்டு வருடங்களாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமி மைதானத்தில் பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்ட தேவி, மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து பகிர்ந்து கொண்டார். காவல்துறை அதிகாரிகளாக, அவர்கள் சமூக ஊடகங்களில் ஊக்கமளிக்கும் ரீல்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
தொழில் விழிப்புணர்வு கருத்தரங்குகளில் பங்கேற்று, மோட்டிவேஷன் உரை நிகழ்த்தும் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட சக பயிற்சி அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மோனா, தனது குடும்பதினரை திருப்திப்படுத்தவும், போலீஸ் வேலையில் கிடைக்கும் மரியாதைக்காகவும் இந்த மோசடியைச் செய்ததாக தெரிவித்தார்.
அவரது வீட்டில் இருந்து போலி ஆவணங்கள், ரூ.7 லட்சம் ரொக்கம், போலீஸ் அகாடமி வினாத்தாள்கள் மற்றும் மூன்று போலி சீருடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- வீட்டில் இருந்து சிவ்லால் எழுதிய தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது.
- சிவ்லால் மற்றும் கவிதா தங்களது தொலைபேசிகளை அணைத்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ராஜஸ்தானில் ஒரு குடும்பமே தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்மர் மாவட்டத்தை சிறந்த சிவ்லால் மேக்வால் (35), அவரது மனைவி கவிதா (32), இளைய மகன் ராமதேவ் (8), மூத்த மகன் ஆகிய 4 பேர் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். புதன்கிழமை அதிகாலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்கொலை செய்யும்முன்னர் கவிதா தனது இளைய மகன் ராமதேவ் (8)க்கு பெண்களின் உடையை அணிவித்து, அவனது தலையில் துப்பட்டாவை போர்த்தி, அவன் கண்களில் காஜல் மை பூசி, தனது தங்க நகைகளை அவனுக்கு அணிவித்து அழகு பார்த்துள்ளார்.
வீட்டில் இருந்து சிவ்லால் எழுதிய தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் குடும்பத்தின் இந்த முடிவுக்கு காரணம் என்றும், அதில் சிவ்லாலின் இளைய சகோதரரும் ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலம் மற்றும் வீட்டின் உரிமை தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த சண்டைகளே தற்கொலைக்குக் காரணம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனி வீடு கட்ட சிவ்லால் விரும்பியதாகவும், இதற்கு அவரது தாயும் சகோதரரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கவிதாவின் மாமா கூறியுள்ளார்.
சம்பவத்தன்று குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வெளியே இருந்த நிலையில், சிவ்லால் மற்றும் கவிதா தங்களது தொலைபேசிகளை அணைத்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
- துஷ்ட சக்திகளின் தாக்கத்தை நீக்க சடங்குகள் செய்வதாக ஏமாற்றினார்.
- அங்கு, இரவு வரை சிறுமிக்கு சடங்குகளைச் செய்வது போல் நடித்தார்.
ராஜஸ்தானில் தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வளம் போலி சாமியார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில், தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வளம் வந்த பிரஹலாத் மேஹர் (41) என்பவர், சிறுமியை கடத்தி மூன்று நாட்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, மேஹர், சிறுமியின் குடும்பத்திடம், அவளுக்கு ஏற்பட்ட துஷ்ட சக்திகளின் தாக்கத்தை நீக்க சடங்குகள் செய்வதாகவும், குடும்பக் கடன்களைத் தீர்க்க உதவுவதாகவும் உறுதியளித்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஜூன் 22 அன்று ராய்ப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து
அங்கு, இரவு வரை சிறுமிக்கு சடங்குகளைச் செய்வது போல் நடித்தார். அடுத்த நாள் ஜூன் 23 காலை சாமியாரும் சிறுமியும் அந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். கடந்த வாரம் ஜூன் 26 ஆம் தேதி அஜ்மீர் மாவட்டத்தில் சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமி கடத்தப்பட்ட மூன்று நாட்களுக்கும் மேலாக சாமியாரால் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதன்பின் சாமியார் திங்களன்று கைது செய்யப்பட்டார். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
- தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்.
- புதிதாக திருமணம் செய்து இந்தியாவில் வாழ்க்கை நடத்த முடிவு செய்து எல்லை கடந்திருக்க வாய்ப்பு.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் இருந்து 11 கி.மீ. தூரத்திற்கு முன்பாக இருவருடைய உடல்களும் கிடந்துள்ளது. ஆடு, மாடு மேய்க்கும் நபர்கள் இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
அப்போது இறந்து கிடந்தது ரவிக்குமார் (வயது 17), ஷாந்தி பாய் (வயது 15) எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானின் செல்போன் சிம்கார்டு வைத்துள்ளனர். இதன் மூலம் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் கிடந்த இடத்தில் வாட்டர் கேன் கிடந்துள்ளது. இதனால் தண்ணீர் முடிவடைந்து, நாக்கு வறண்டு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். அந்த பெண் கையில் சிகப்பு, வெள்ளை வளையல்கள் கிடந்துள்ளது. திருமணம் முடிந்தவர்கள் இதுபோன்று வளையல்கள் அணிவார்கள் என்பதால், சமீபத்தில் திருமணம் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.






