என் மலர்
நீங்கள் தேடியது "Police Academy"
- மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து பகிர்ந்து கொண்டார்.
- சமூக ஊடகங்களில் ஊக்கமளிக்கும் ரீல்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
ராஜஸ்தான் போலீஸ் அகாடமியில் போலி ஆவணங்களுடன் ஒரு பெண் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நாக்வார் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகள் மோனா பாக்லியா. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தோல்வியடைந்த பிறகு, மூலி தேவி என்ற பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி, தான் தேர்ச்சி பெற்றதாக சமூக ஊடகங்களில் கூறிக்கொண்டார்.
இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியாளர்களுக்கான வாட்ஸ்அப் குழுவிலும் மூலி தேவி என்ற அடையாளத்துடன் இணைந்துள்ளார். விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கை பெற்றதாகக் கூறி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளார்.
இரண்டு வருடங்களாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமி மைதானத்தில் பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்ட தேவி, மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து பகிர்ந்து கொண்டார். காவல்துறை அதிகாரிகளாக, அவர்கள் சமூக ஊடகங்களில் ஊக்கமளிக்கும் ரீல்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
தொழில் விழிப்புணர்வு கருத்தரங்குகளில் பங்கேற்று, மோட்டிவேஷன் உரை நிகழ்த்தும் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட சக பயிற்சி அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மோனா, தனது குடும்பதினரை திருப்திப்படுத்தவும், போலீஸ் வேலையில் கிடைக்கும் மரியாதைக்காகவும் இந்த மோசடியைச் செய்ததாக தெரிவித்தார்.
அவரது வீட்டில் இருந்து போலி ஆவணங்கள், ரூ.7 லட்சம் ரொக்கம், போலீஸ் அகாடமி வினாத்தாள்கள் மற்றும் மூன்று போலி சீருடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
- உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.
தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் துணை இயக்குநராகப் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி பயிற்சி பெற்று வரும் உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.
அப்போது ஐஏஎஸ் உமா ஹார்த்திக்கு அவரது தந்தை வெங்கடேஸ்வரலு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.