என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train station"

    • ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் பறக்கும் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரெயில் நிலையத்தில் லிப்ட் வசதி உள்ளது.

    மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் இந்த லிப்டை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் இதை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரெயில் நிலையத்துக்கு வந்த பெண் பயணிகள் லிப்டில் ஏறி சென்றனர். அப்போது லிப்டில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் லிப்ட் பாதி வழியிலேயே நின்றது. அதில் இருந்த 10 பெண் பயணிகளும் லிப்டில் சிக்கி தவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் லிப்டின் கதவை கழற்றி அதில் இருந்த 10 பெண்களையும் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அனைத்து பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

    • கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.
    • அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    ராஜஸ்தானின் பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரெயில் நிலையத்தில் இன்று காலை ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.

    அதிகாலை 3 மணியளவில், நிலையத்தில் இருந்து கிளம்பியபோது கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.

    லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஷார்ட் சர்க்யூட் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தின் காரணமாக, அந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.
    • முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மரத்தால் ஆன பழைய கட்டிடம் அகற்றப்பட்டது. பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.

    இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரெயில் நிலையம் ஆகும். அதேசமயம் இந்த முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என ஜப்பான் வீட்டு வசதி நிறுவனமான செரெண்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்த முப்பரிமாண ரெயில் நிலையம் வருகிற ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஜப்பான் மேற்கு ரெயில்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • ரெயில் நிலையத்தில் டேவிட் தனது சகோதரியுடன் போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
    • ரெயில்வே அதிகாரி கிண்டலடிக்கிறார் என்று டேவிட் நினைத்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டின் நான்டெஸில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் தனது செல்போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசியதற்காக டேவிட் என்ற நபருக்கு 207 அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.16,640 க்கு மேல்) அபராதம் விதிக்கப்பட்டது.

    ரெயில் நிலையத்தில் டேவிட் தனது சகோதரியுடன் போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது ரெயில்வே அதிகாரி ஒருவர் அவரிடம் வந்து ஸ்பீக்கரை ஆப் செய்யாவிட்டால் 154 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ரெயில்வே அதிகாரி கிண்டலடிக்கிறார் என்று டேவிட் அப்போது நினைத்துள்ளார். ஆனால் டேவிட் அதன்பின்னும் ஸ்பீக்கரை ஆப் செய்யாததால் அவருக்கு 207 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

    குடியரசு தினவிழா நாளை(சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். #republicday
    கடலூர் முதுநகர்:

    நாடு முழுவதும் நாளை(சனிக்கிழமை) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ரெயில், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் ஏட்டுகள் கோமதி, ராம்குமார், ராமமுர்த்தி மற்றும் போலீசார் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர். மேலும் தண்டவாள பகுதியிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் வழியாக வந்து செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களிலும் ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை நாளை வரை நீடிக்கும் என போலீசார் ஒருவர் தெரிவித்தார். #republicday
    ஜெர்மனியில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதால் ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Germany #Hostage
    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டில் மைன்ஸ் நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடை உள்ளது. அதனுள் புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால், ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நிலையம் மூடப்பட்டது. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    போலீசார் வந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவர் லேசாக காயம் அடைந்து இருந்தார். மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். பயங்கரவாதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.  #Germany #Hostage 
    ×