என் மலர்
இந்தியா

தீப்பற்றி எரிந்த ரெயில் எஞ்சின்.. பதறியடித்த பயணிகள் - ராஜஸ்தானில் பெரும் விபத்து தவிர்ப்பு
- கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.
- அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ராஜஸ்தானின் பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரெயில் நிலையத்தில் இன்று காலை ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.
அதிகாலை 3 மணியளவில், நிலையத்தில் இருந்து கிளம்பியபோது கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.
லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஷார்ட் சர்க்யூட் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தின் காரணமாக, அந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






