என் மலர்
ராஜஸ்தான்
- உள்ளூர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து குடும்பத்தை அவர் காப்பாற்றி வந்தார்.
- உடல் விரைவாக அழுகி, எந்த தடயங்களும் கிடைக்காமல் இருக்க அவரது உடல் முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஹன்ஸ்ராம், ராஜஸ்தானின் கைர்தல்-திஜாரா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மேல் தளத்தில் தனது மனைவி சுனிதா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். உள்ளூர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து குடும்பத்தை அவர் காப்பாற்றி வந்தார்.
ஹன்ஸ்ராமின் மனைவி சுனிதா உரிமையாளரின் மகன் ஜிதேந்திராவுடன் திருமணத்திற்கு புறம்பான உறவைக் கொண்டிருந்தார்.
இந்தச் சூழலில், சனிக்கிழமை முதல் ஹன்ஸ்ராம் காணாமல் போயுள்ளார். அதே நாளில், சுனிதா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது காதலன் ஜிதேந்திராவுடன் ஓடிவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை, தங்கள் வீட்டின் கூரையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வந்ததால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, கூரையில் இருந்த நீல நிற டிரம்மை திறந்து பார்த்தபோது, ஹன்ஸ்ராமின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். உடல் விரைவாக அழுகி, எந்த தடயங்களும் கிடைக்காமல் இருக்க அவரது உடல் முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.
தலைமறைவான சுனிதா மற்றும் ஜிதேந்திராவை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு பெண் தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, சிமெண்டில் கலந்து, டிரம்மில் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
- மொட்டை மாடிக்குச் சென்றபோது, கடுமையான துர்நாற்றம் வீசியது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹன்ஸ் ராஜ், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரின் ஆதர்ஷ்நகர் காலனியில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ஹன்ஸ் ராஜ் உள்ளூர் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இருப்பினும், சிறிது காலமாக வீட்டில் யாரையும் காணவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை மொட்டை மாடிக்குச் சென்றபோது, கடுமையான துர்நாற்றம் வீசியது.
உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். மொட்டை மாடியில் உள்ள டிரம்மில் இருந்து துர்நாற்றம் வருவதைக் கவனித்த போலீசார், டிரம்மைத் திறந்து உடலைக் கண்டுபிடித்தனர்.
சிதைந்த உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஹன்ஸ் ராஜ் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் காணாமல் போன அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.
- ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த பாஜக தலைவர் ரோஹித் சைனி, சஞ்சு என்ற பெண்ணை மணந்தார்.
- வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தனது மனைவியைக் கொன்று விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிவிட்டதாக போலீசாரை நம்ப வைக்க முயன்றார்.
ராஜஸ்தானில் காதலியுடன் புது வாழ்வை தொடங்க தனது மனைவியை கொலை பாஜக தலைவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித் சைனி, சஞ்சு என்ற பெண்ணை மணந்தார்.
இருப்பினும், ரோஹித் அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்ற மற்றொரு பெண்ணுடன் சிறிது காலமாக திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்து வருகிறார்.
மனைவி சஞ்சு அவர்களின் உறவுக்கு தடையாக இருந்துள்ளார். இந்த மாதம் 10 ஆம் தேதி, சஞ்சு சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வீட்டில் இறந்தார்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரோஹித் முரண்பாடான பதில்களை அளித்தார்.
வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தனது மனைவியைக் கொன்று விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிவிட்டதாக போலீசாரை நம்ப வைக்க முயன்றார்.
இருப்பினும், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த போலீசார், அவர்களது பாணியில் விசாரித்தபோது அவர் காதலி ரிதுவின் தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ரோஹித் சைனியுடன், கொலையைத் தூண்டிய அவரது காதலி ரிது சைனியும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள், ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
- நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் ஜெய்சால்மர் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விருந்தினர் மாளிகையின் மேனஜர் மகேந்திர பிரசாத் என்பவரை சிஐடி போலீசார் கைது செய்தனர்.
ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது. இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு அவர் கசியவிட்ட குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
- விலங்குகளின் உடல்கள் சாலைகளிலும் அருகிலுள்ள வயல்களிலும் உயிரற்ற நிலையில் கிடப்பதும் பதிவாகி உள்ளது.
- வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
ராஜஸ்தானில் 2 நபர்கள் 2 நாட்களில் 25க்கும் மேற்ப்பட் தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம், நவல்கர் பகுதியில் உள்ள குமாவாஸ் கிராமத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 25க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இரண்டு நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டன.
வீடியோவில், கிராமத் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு ஆண்கள் தெருநாய்களைத் துரத்திச் சென்று அவற்றைச் சுடுவதும். விலங்குகளின் உடல்கள் சாலைகளிலும் அருகிலுள்ள வயல்களிலும் உயிரற்ற நிலையில் கிடப்பதும் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.
- பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.
ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேசிய அளவிலான முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- மதியம் வீட்டிலிருந்து சிறுமி காணாமல் போனாள்.
- அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பந்திகுய் பகுதியில், 7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிலிருந்து காணாமல் போன அந்த சிறுமி, மாலை நேரத்தில் வீட்டிற்கு சற்று தள்ளி தனியாக அமர்ந்திருந்த சிறுமியை பெற்றோர் கண்டுபிடித்தனர்.
வீட்டிற்கு அழைத்து வந்தபோது, வலி தாங்க முடியாமல் நடுங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு, சிறுமியை உடனடியாக பந்திகுய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.
இதன் பின் தனது மகள் பாலியல் அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.செய்யப்பட்டதாக சிறுமியின் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பேசவோ கேட்கவோ முடியாது என்பதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பார்மர் மாவட்டத்தில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சனை பல ஆண்டாக நீடித்து வருகிறது.
- ஜோஜாரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
அங்குள்ள பார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஜோத்பூர், பாலி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், ஜோஜாரி ஆற்றில் கலக்கின்றன.
அந்த ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது, தொழிற்சாலை கழிவுகள் மாசடைந்த நீராக கரையோர பகுதிகளில் தேங்குகின்றன. வீடுகளுக்கு உள்ளேயும் புகுந்து விடுகிறது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், பார்மர் பகுதிக்குச் சென்ற ராஜஸ்தான் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை மந்திரி கே.கே.விஷ்ணோயிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், பார்மர் மாவட்டத்தில் பகவான் கிருஷ்ணர் மிகவும் தாராள மனதுடன் இருக்கிறார். நமது முதல் மந்திரி, பகவான் கிருஷ்ணரை வேண்டும் போதெல்லாம் இங்கு மழை கொட்டித் தீர்க்கிறது. பிறகு, இந்திரனிடம் சொல்லி, மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடர மழையை தணிக்க வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.
கே.கே.விஷ்ணோயின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக, பார்மர் மாவட்டம் பேடூ தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஷ் சவுத்ரி கூறுகையில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனையின் பொறுப்பை கடவுள்மீது சுமத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. மந்திரி, பிரச்சனையை திசைதிருப்புவது மட்டுமின்றி, பிரச்சனையை அரசாங்கத்தால் சரிசெய்ய முடியாது, பிரார்த்தனையால்தான் பலன் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் கூறுகிறார். இது அபத்தமானது என்றார்.
- மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
- முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனைகளை நடத்தினர்.
வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் ராஜஸ்தான் முதல்வர் அலுவலகம் பீதியில் ஆழ்ந்தது.
முதல்வர் அலுவலகத்துடன் சேர்த்து ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த மின்னஞ்சல்களில், முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு தடுப்புப் படை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் உடனடியாக முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனைகளை நடத்தினர்.
இருப்பினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இரு இடங்களிலும் கிடைக்காததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
- பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் பலமுறை புகார் அளித்தனர்.
- "ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பாழடைந்த பள்ளி கட்டிடங்களில் உட்கார வைக்க வேண்டாம் என்று நாங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்தோம்.
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிம்ப்லோடில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை அரசுப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏழு அப்பாவி மாணவர்கள் உயிரிழந்தனர். 11க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவத்திற்கு முன்பு மாணவர்கள் கூரையிலிருந்து கற்கள் விழுவதாக என்று ஆசிரியர்களை எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.
இதுகுறித்து விபத்தில் இருந்து தப்பிய எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் கண்ணீருடன் கூறுகையில், "மேலே இருந்து கற்கள் விழுவதாக ஆசிரியர்களிடம் சொன்னோம். ஆனால் அவர்கள் எங்களைத் திட்டி வகுப்பறையில் உட்காரச் சொன்னார்கள். அப்போது, கூரை இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது" என்று கூறினார்.
இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஆசிரியர்களின் கடுமையான அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு மேற்பரப்பு சிமென்ட் மற்றும் பிளாஸ்டரிங் மூலம் தாற்காலிகமாகச் சரிசெய்யப்பட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, ஜலவார் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோட், அலட்சியத்திற்காக ஐந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்தார்.
"ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பாழடைந்த பள்ளி கட்டிடங்களில் உட்கார வைக்க வேண்டாம் என்று நாங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்தோம். இந்த சம்பவத்தில் தெளிவான அலட்சியம் உள்ளது. நாங்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம், அதன் அறிக்கையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ரத்தோட் கூறினார்.
- கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வெவ்வேறு பரிசுகளை வழங்குவது இது முதல் முறை அல்ல.
- கடந்த காலங்களில் வெள்ளி பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி மற்றும் ஐபோன் போன்ற பரிசுகள் வந்துள்ளன.
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சவாரியா சேத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் மூலவரான கிருஷ்ணருக்கு பக்தர் ஒருவர் வெள்ளி துப்பாக்கி மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூண்டு காணிக்கை அளித்தார்.
இந்த இரண்டும் சேர்ந்து சுமார் அரை கிலோ எடை கொண்டவை. கடவுளுக்கு ஆயுதம் காணிக்கையாக வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கோவில் தலைவர் ஜானகி தாஸ் கூறினார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தானில் பூண்டின் விலை கடுமையாக அதிகரித்தது.
பூண்டு பயிரில் இருந்து சில விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டினர். அதனால் வெள்ளி துப்பாக்கி, பூண்டு ஆகியவற்றை இறைவனுக்கு வழங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வெவ்வேறு பரிசுகளை வழங்குவது இது முதல் முறை அல்ல.
கடந்த காலங்களில் வெள்ளி பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி மற்றும் ஐபோன் போன்ற பரிசுகள் வந்துள்ளன. இங்குள்ள கிருஷ்ணர் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என தெரிவித்தனர்.
- பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
- பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளி இன்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டது. பள்ளி திறந்து சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, பள்ளிக்கு வந்த அப்பகுதி கிராம மக்கள் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் 4 ஜே.சி.பி. எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் அரசு பள்ளி இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,
ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






