என் மலர்
இந்தியா

கணவனின் கழுத்தை அறுத்து உடலை டிரம்மில் அடைத்த மனைவி.. காதலனுடன் ஓட்டம் - இருவரும் கைது
- உள்ளூர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து குடும்பத்தை அவர் காப்பாற்றி வந்தார்.
- உடல் விரைவாக அழுகி, எந்த தடயங்களும் கிடைக்காமல் இருக்க அவரது உடல் முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஹன்ஸ்ராம், ராஜஸ்தானின் கைர்தல்-திஜாரா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மேல் தளத்தில் தனது மனைவி சுனிதா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். உள்ளூர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து குடும்பத்தை அவர் காப்பாற்றி வந்தார்.
ஹன்ஸ்ராமின் மனைவி சுனிதா உரிமையாளரின் மகன் ஜிதேந்திராவுடன் திருமணத்திற்கு புறம்பான உறவைக் கொண்டிருந்தார்.
இந்தச் சூழலில், சனிக்கிழமை முதல் ஹன்ஸ்ராம் காணாமல் போயுள்ளார். அதே நாளில், சுனிதா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது காதலன் ஜிதேந்திராவுடன் ஓடிவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை, தங்கள் வீட்டின் கூரையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வந்ததால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, கூரையில் இருந்த நீல நிற டிரம்மை திறந்து பார்த்தபோது, ஹன்ஸ்ராமின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். உடல் விரைவாக அழுகி, எந்த தடயங்களும் கிடைக்காமல் இருக்க அவரது உடல் முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.
தலைமறைவான சுனிதா மற்றும் ஜிதேந்திராவை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு பெண் தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, சிமெண்டில் கலந்து, டிரம்மில் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.






