என் மலர்
ராஜஸ்தான்
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
- தெலுகு டைட்டன்ஸ் அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது.
ஜெய்ப்பூர்:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
இறுதியில், சிறப்பாக ஆடிய தபாங் டெல்லி அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. டெல்லி தான் ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
- யு.பி.யோதாஸ் அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.
ஜெய்ப்பூர்:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
இறுதியில், சிறப்பாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 41-37 புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
- காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னுவை சேர்ந்தவர் முகேஷ் குமாரி (வயது 37).
இவர் அங்கன்வாடி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பர்மாரை சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் நீண்ட நேரம் அரட்டை அடித்து வந்தனர்.
பின்னர் தங்களது செல்போன்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அப்போது மனோராம் முகேஷ் குமாரியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
மனாராம், முகேஷ் குமாரியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனாராமை வற்புறுத்தி வந்தார். அவர் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்தார்.
இந்த நிலையில் முகேஷ் குமாரி நேற்று முன்தினம் தனது காரை எடுத்துக்கொண்டு 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதலன் வீட்டுக்கு காரில் சென்றார். தங்களுடைய காதல் விவகாரம் குறித்து மனாராமின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதனால் மனாராம் ஆத்திரம் அடைந்தார்.
முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் முகேஷ் குமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் காதலியின் உடலை தூக்கி முள்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீசி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து மனாராமை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் புனேரி பல்தான் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே புனேரி பல்தான் அணி சிறப்பாக விளையாடியது. இறுதியில் 39-33 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணி அபார வெற்றி பெற்றது.
புனேரி பல்தான் அணி பெறும் 5-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் புனே அணி முதலிடத்துக்கு முன்னேறியது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அர்ஜுன் தேஷ்வால் 17 புள்ளிகள் எடுத்தார்.
தமிழ் தலைவாஸ் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.
- மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.
மக்களை ஏமாற்றத் தெரிந்தவர் தான் சிறந்த தலைவர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் அகில பாரத மகானுபவ பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நேற்று நிதின் கட்கரி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "மக்களை ஏமாற்ற தெரிந்தவர் தான் சிறந்த அரசியல்வாதி. எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.
எல்லாருக்கும் அவரவருக்கான நோக்கங்கள் உள்ளன. மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, உண்மையே இறுதியில் வெல்லும் என பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் எழுதியிருக்கிறார்.
வேண்டிய விஷயங்களை சாதிக்க பல குறுக்கு வழிகள் இருக்கும். நீங்கள் விதிகளை மீறி, ரெட் சிக்னலை பொருட்படுத்தாமல் கடந்து செல்லலாம், ஆனால் ஒரு தத்துவ ஞானி சொன்னதுபோல், குறுக்குவழிகள் உங்கள் பயணத்தை முடக்கிவிடும்.
எனவே உண்மை மற்றும் அர்பணிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள்" என தெரிவித்தார்.
- முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி
- ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ளார்.
ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் விண்ணப்பித்துள்ளார்.
சட்டப்பேரவை செயலகம் இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகவும், துணை ஜனாதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்த தேதியிலிருந்து ஓய்வூதியம் பொருந்தும் என்று சட்டப்பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
- நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடற்றவர்களாகவே இருக்கிறோம்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் ரேகா கல்பெலியா (வயது55). இவரது கணவர் காவ்ரா கல்பெலியா. இவருக்கு நிரந்த வேலை இல்லாததால் குப்பை பொறுக்கி பிழைப்பை நடத்தி வருகிறார்.
தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளனர். 5 குழந்தைகள் பிரசவித்த சில நாட்களிலேயே இறந்து போயுள்ளது. மீதி குழந்தைகள் இவர்களுடன் வசதித்து வருகின்றனர். இதில் 5 பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பிணியானார். நேற்று பிரசவ வலியில் துடித்த அவர் ஜாடோல் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 17-வது குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
ஆஸ்பத்திரியில் ரேகா கல்பெலியா பிரசவத்திற்கு அனுமதித்த போது இவருக்கு 4-வது பிரசவம் என்று அவர்கள் டாக்டரிடம் கூறியுள்ளனர். ஏற்கனவே வறுமையில் தவிக்கும் காவ்ரா கல்பெலியா தம்பதியினர் 16 குழந்தைகளை வளர்த்தெடுக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.
குழந்தைகளின் பசியை தீர்க்க காவ்ரா கல்பெலியா 20 சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அடைக்க அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
அவரது மகள் ஷிலா கல்பெலியா கூறும் போது, எங்கள் குடும்பம் வாழ்வதற்கு பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் அனைவரும் நிறைய சிரமங்களை எதிர் கொண்டு வருகிறோம். எங்கள் தாய்க்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர் என்றார்.
குப்பை சேகரிப்பதன் மூலம் உயிர்வாழும் எங்கள் குடும்பத்தினரால் குழந்தைகளுக்கு கல்வி வழங்க முடியவில்லை. "பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் ஒரு வீடு எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடற்றவர்களாகவே இருக்கிறோம்.
குழந்தைகளுக்கு பசி தீர்க்க உணவும், கல்வி வழங்கவும் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கும் போதுமான பண வசதி இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை சந்தித்து வருவதாக 17 குழந்தைகளின் தந்தை காவ்ரா கல்பெலியா கூறியுள்ளார்.
- சஞ்சு பிஷ்னோயிடம் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் சஞ்சு பிஷ்னோய். இவருக்கு திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி (வயது3) என்ற குழந்தை இருந்தது. சஞ்சு பிஷ்னோய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் திலீப், மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
சம்பவத்தன்று காலை அவரது கணவர் சஞ்சுவை பைக்கில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் டைனிங் டேபிளில் இருந்த பெட்ரோலை தனது குழந்தை மீது ஊற்றி தீவைத்தார். மேலும் தன் மீதும் தீவைத்துக் கொண்டார். 2 பேரின் அலறல் சத்தத்தை கேட்டு கணவர், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
குழந்தை யஷஸ்வி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சஞ்சுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சஞ்சுவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கணவர் திலீப், மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதுபோன்ற புதைபடிவம் இதற்கு முன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆராய்ச்சியாளர்கள் நவீன முதலைகளுடன் வலுவான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பழங்கால உயிரினத்தின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது டைனோசர்களை விட பழமையான 'பைட்டோசர்' என்ற ஊர்வனவற்றிற்கு சொந்தமானது.
ஃபதேகர் பகுதியில் உள்ள மேகா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகே கிராமவாசிகளால் இந்தப் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 21 அன்று அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியை ஆய்வு செய்து, அது ஜுராசிக் காலத்தின் புதைபடிவம் என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
பின்னர், ஜோத்பூரில் உள்ள ஜேஎன்வியூ பூமி அறிவியல் நிறுவனத்தின் டீன் டாக்டர் வி.எஸ். பரிஹார் தலைமையிலான குழு இது குறித்த ஆய்வைத் தொடங்கியது.
இது கிட்டத்தட்ட முழுமையான எலும்புக்கூடு என்பதால் இந்த கண்டுபிடிப்பு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுபோன்ற புதைபடிவம் இதற்கு முன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் ஜுராசிக் காலத்தின் பாறைகளில் இந்த இனத்தின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.

புதைபடிவத்தைப் பற்றிப் பேசிய டாக்டர் பரிஹார், "இது பைட்டோசார் குடும்பத்தைச் சேர்ந்தது. முதலை போன்ற இந்த ஊர்வன டைனோசர்களுக்கு முன்பு, பிந்தைய ட்ரயாசிக் மற்றும் ஆரம்பகால ஜுராசிக் காலங்களில் வாழ்ந்தன. அவை சுமார் 1.5 முதல் 2 மீட்டர் நீளம் கொண்டவை" என்று கூறினார்.
இந்த உயிரினத்தின் முதுகெலும்பு ஆய்வு செய்யப்பட்டபோது, ஆராய்ச்சியாளர்கள் நவீன முதலைகளுடன் வலுவான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர்.
இந்த புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் தற்போது வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஜெய்சால்மர் பகுதி பண்டைய உயிரினங்களின் புதைபடிவங்களுக்கு பிரபலமானது. கடந்த காலத்தில், டைனோசர் கால்தடங்கள் தையாட் அருகே காணப்பட்டன. மேலும் 180 மில்லியன் ஆண்டுகள் பழமையான மர புதைபடிவங்கள் அகல் கிராமத்தில் காணப்பட்டன.
- MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
- விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் MiG-21 விமானத்தை ஓட்டினார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் விடைபெற உள்ளன.
விமானப்படையில் தற்போது இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் உள்ளன. செப்டம்பர் 26 ஆம் தேதி சண்டிகரில் நடைபெறும் விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்.
நேற்று ராஜாஸ்தானின் பிகானரில் உள்ள நல் விமானப்படை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பிரியாவிடை விழாவில் விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் MiG-21 விமானத்தை ஓட்டினார்.
சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

MiG-21
1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.
இருப்பினும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் MiG-21 விமானத்திற்கு பாதகமாக அமைந்தது.
62 ஆண்டுகளில் MiG-21 சந்தித்த 400 விபத்துகளில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான Tejas Mk2 விமானங்கள் இருக்கும்.
- மழையால் சுவரின் ஒரு பெரிய பகுதி அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது
- சாலைகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளம் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில் சூழலில் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அமீர் கோட்டையின் 200 அடி நீள சுவர் இன்று இடிந்து விழுந்தது.
இதன் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஏற்படவில்லை.
ஜெய்ப்பூர், பூண்டி, கோட்டா, சவாய் மாதோபூர், கரௌலி ஆகிய இடங்களில் இன்று காலை வரை 10 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது.
இதனால் சாலைகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளம் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமீர் கோட்டை, 16 ஆம் நூற்றாண்டில் முதலாம் மான்சிங் என்ற அரசரால் கட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இது ராஜபுத்திர கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.






