என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Thalaisvas"

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தபாங் டெல்லி அணி 37-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 11-வது தோல்வியாகும்.

    மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-29 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தியது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • அரியானா ஸ்டீலர்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நேற்று இரவு நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சிரமபட்டனர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர்கள் அதன்பின் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 45-33 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • ஜெய்ப்பூர் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், யு மும்பை அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய யு மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், யு மும்பை அணி 42-24 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் யு மும்பை அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அர்ஜுன் தேஷ்வால் 17 புள்ளிகள் எடுத்தார்.

    தமிழ் தலைவாஸ் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    • தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.
    • இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 44-29 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் 37-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்சையும், தபாங் டெல்லி 36-28 என்ற கணக்கில் மும்பை அணியையும் தோற்கடித்தன.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 44-29 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நடந்த ஆட்டத்தில் உபி யோதா அணியை 46 - 24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ் அணி. #ProKabaddi
    லக்னோ:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் உபி யோதா அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின.

    தமிழ் தலைவாஸ் அணி 8 ஆட்டத்தில் 6 தோல்வி கண்டிருந்ததது. எனவே, இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 26 -11 என முன்னிலை பெற்றது.

    இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அபாரமாக ஆடியது. அவர்களின் ஆட்டத்துக்கு உபி யோதாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், உபி யோதாவை 46 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது தமிழ் தலைவாஸ் அணி பெற்ற மூன்றாவது வெற்றி ஆகும். #ProKabaddi 
    ×