என் மலர்tooltip icon

    இந்தியா

    காது கேளாத, வாய் பேச முடியாத 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
    X

    காது கேளாத, வாய் பேச முடியாத 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

    • மதியம் வீட்டிலிருந்து சிறுமி காணாமல் போனாள்.
    • அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பந்திகுய் பகுதியில், 7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிலிருந்து காணாமல் போன அந்த சிறுமி, மாலை நேரத்தில் வீட்டிற்கு சற்று தள்ளி தனியாக அமர்ந்திருந்த சிறுமியை பெற்றோர் கண்டுபிடித்தனர்.

    வீட்டிற்கு அழைத்து வந்தபோது, வலி தாங்க முடியாமல் நடுங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு, சிறுமியை உடனடியாக பந்திகுய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.

    இதன் பின் தனது மகள் பாலியல் அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.செய்யப்பட்டதாக சிறுமியின் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிறுமிக்கு பேசவோ கேட்கவோ முடியாது என்பதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×