என் மலர்
மகாராஷ்டிரா
- மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 228 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
- மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, பாஜக கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 228 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும், பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அங்கு, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் ? அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
- ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 224 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 53 இடங்களிலும் பிற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததுள்ளார்.
ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார். அஜாஸ் கானை இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெறும் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்விடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொகுதியில் பாஜக பாஜக வேட்பாளரை தோற்கடித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே) வேட்பளார் ஹரூன் கான் வெற்றி பெற்றார்.
- பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை ஆகும்
- என்சிபி கிங்மேக்கராக இருக்கும் என்று கூறினார்.
தேர்தல் முடிவுகள்
மகாராஷ்டிர மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரபடி பாஜக [ மகாயுதி] கூட்டணி 223 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 54 இடங்களிலும் பிற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
முதல்வர் யார்?
பாஜகவின் மகாயுதி கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது சிவ சேனா பிரிவை சேர்த்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ள நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் என்சிபியின் அஜித் பவார் துணை முதல்வர்களாக உள்ளனர். கூட்டணியை சேர்ந்த மூன்று கட்சிகளும் அடுத்த முதல்வராக தங்கள் தலைவரையே கொண்டுவர வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றன.

நல்ல முடிவு
அந்த வகையில் மகாயுதி சிவசேனா எம்.எல்.ஏ.வும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ஷிர்சத் கூறுகையில், சட்டசபை தேர்தலில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை முன்னிறுத்தியே நடந்தது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் ஏக்நாத் ஷிண்டே மீது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர். அடுத்த முதல்வராவது ஷிண்டேவின் உரிமை என்று நான் நினைக்கிறேன், அவர் அடுத்த முதல்வராக வருவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று ஷிர்சட் தெரிவித்தார்.
ஆனால், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆக வேண்டும் என்று பாஜக தலைவர் பிரவின் தரேகர் விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து யாராவது முதல்வர் ஆகிறார் என்றால் அது தேவேந்திர பட்னாவிஸ் தான் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார். முன்னதாக பட்னாவிஸ் 2014 முதல் 2019 வரை முதல்வராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் என்சிபி தலைவர் அமோல் மிட்காரி கூறுகையில், துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் முதல்வர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். மேலும் முடிவுகள் என்னவாக இருந்தாலும், என்சிபி கிங்மேக்கராக இருக்கும் என்று மிட்காரி கூறினார்.
இதற்கிடையே முதல்வர் முகத்தைப் பற்றி கேட்டதற்கு, மூன்று மஹாயுதி கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து நல்ல முடிவை எடுக்கும் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளில் யாருக்கு அதிக இடங்கள் வெற்றி கிடைக்கிறதோ அதைப் பொறுத்தே முதல்வர் பதவி தீர்மானிக்கப்படும் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை கட்சியை உடைத்து வந்ததால் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக முதல்வர் பதவி வழங்கியது என்றும் இந்த முறை மற்றொரு பதவியை தங்கள் வசம் வைத்துக்கொள்ள பாஜக விரும்புவதாகவே செய்திகள் வருகின்றன.

நிலவரம்
அந்த வகையில் பார்த்தால், 149 இடங்களில் நின்ற பாஜக 127 இடங்களில் முன்னிலை வகிக்கிறது 81இடங்களில் போட்டியிட்ட ஷிண்டே சிவசேனா 56 முன்னிலை வகிக்கிறது. 59இடங்களில் போட்டியிட்ட அஜித் பவார் கட்சி 38 முன்னிலையில் உள்ளது. எனவே தேவேந்திர பட்னாவிஸை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க பாஜக மேலிடம் தீவிரம் காட்டும் என்றே தெரிகிறது.
- பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை ஆகும்
- பிற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
மகாராஷ்டிர மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
288 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.
முன்னிலை நிலவரம்
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 221 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 55 இடங்களிலும் பிற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. எனவே பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.

'துரோகிகள்'
சரத் பாவர் என்சிபியை உடைத்து அஜித் பவாரும், சிவா சேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேவும் பாஜகவுடன் சேர்ந்ததால் கடந்த 2022 இல் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக ஏற்று பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. எனவே கட்சிகள் உடைக்கப்பட்ட பின்னர் நடக்கும் இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் யாரை ஏற்பார்கள் என்ற கேள்வி நிலவியது. இந்தியா கூட்டணி என்சிபி தலைவர் சரத் பவார் துரோகிகளுக்கு மக்கள் இந்த தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

என்சிபி கடிகார சின்னத்தையும் அஜித் பவார் தன்வசம் வைத்திருந்தார். இதற்கிடையே கடந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை விட இந்தியா கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்ததால் இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அது எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சரத் பவார் கணக்கு
இந்நிலையில் தற்போது கட்சிகளை உடைத்து சென்றவர்களை மக்கள் ஏற்றுக்கொண்தையே தற்போதைய நிலவரம் காட்டுகிறது. ஷிண்டே சிவ சேனா போட்டியிட்ட 81 இடங்களில் 53 இடங்கள் முன்னிலையில் உள்ளது. அஜித் பவார் என்சிபி போட்டியிட்ட 59 இடங்களில் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஆனால் இந்தியா கூட்டணியை சேர்ந்த உத்தவ் சிவசேனா போட்டியிட்ட 95 இடங்களில்18 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. சரத் பவார் சிவசேனா போட்டியிட்ட 86 இடங்களில் 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது சரத் பவார் கணக்கு பொய்த்ததையே உறுதி படுத்துவதாக உள்ளது.
கருத்துக்கணிப்புகள்
நியூஸ்18 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி 137 முதல் 157 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 126 முதல் 146 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. மற்றவை 2 முதல் 8 இடங்களில் வெற்றி பெறலாம்.
இதேபோல் ஏபிபி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 150 முதல் 170 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 இடங்களிலும் மற்றவை 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- காலை 8 மணிக்கு 288 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
- தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்ற இத்தோ்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 1995, சட்டமன்ற தோ்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
ஆளும் 'மகாயுதி' கூட்டணியில் பா.ஜ.க. 149, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81, துணை முதல்-மந்திரி அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.
எதிா்க்கட்சிகளின் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனா (உத்தவ் தாக்கரே) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 86 தொகுதிகளில் களம்கண்டன. இது தவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்களைக் கண்ட மாநிலம் என்பதால், தற்போதைய சட்டமன்ற தோ்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் எதிர் பாா்க்கப்பட்டது. கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தது.
அதன்படி, இன்று வாக்கு எண்ணிக்கை கருத்து கணிப்பு முடிவுகளை உறுதிப்படுத்துவது போல் அமைந்தன. காலை 8 மணிக்கு 288 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
தொடக்கத்திலேயே அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வந்தன. தொடர்ந்து பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 159 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிந்து இருந்தது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி என்று உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:- இந்த தேர்தலின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல. ஷிண்டே அணியின் எல்லா எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெற்றது எப்படி? ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள். மோடி, அமித்ஷா, அதானி கூட்டணி வெற்றி பெற்றதாக சஞ்சய் ராவத் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
+5
- மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
- ஜார்க்கண்ட் மாநிலதில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வினோத் தாவ்டே மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
- தன்மீது தவறாக குற்றம்சாட்டியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு பா.ஜ.க. தேசிய பொதுச்செயலர் வினோத் தாவ்டே கடந்த 19-ம் தேதி பண விநியோகம் செய்தார் என பகுஜன் விகாஸ் அகாதி குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. இதனை வைத்து ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே ஆகியோருக்கு வினோத் தாவ்டே வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், என் மீதான குற்றச்சாட்டு பொய். ஆதாரமற்றது. தவறான நோக்கத்துடன் சுமத்தப்பட்டது. பணம் கொடுத்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது கிரிமினல் நடவடிக்கையை தொடர நேரிடும் என தெரிவித்துள்ளார்.
- இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
- நிப்டி 51 ஆயிரத்து 135.40 புள்ளிகளில் நிறைவு செய்தது.
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்காவில் அதானி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் நேற்று இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. அதன் விளைவாக நேற்று பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றம் தொழிலதிபர் கௌதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த விவகாரம் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்க, நேற்று பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.
நேற்று பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்த நிலையில், இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 557.35 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 907.25 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 762.50 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 135.40 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
1,961.32 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 117.11 புள்ளிகளிலும் 350.30 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 623.75 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. 142.20 புள்ளிகள் உயர்ந்த மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 306.85 புள்ளிகளிலும், 923.48 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 306.05 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
பாரத ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், ஐடிசி, இன்போசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் கைமாறின. நேற்று சரிவில் இருந்த அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்வுடன் முடிவடைந்தன.
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியீடு.
- காங்கிரஸ் கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என கணிப்பு.
மும்பை:
மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடை பெற்றது.
இந்த தேர்தலில் பா.ஜனதா சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் அணி) ஆகிய கட்சிகள் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ்சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) ஆகிய எதிர்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. நாளை (சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதற்கிடையே வாக்குப் பதிவு முடிவடைந்த சில மணி நேரங்களில் அங்கு ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 145 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 2 கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்து கணிப்பின் படி பா.ஜ.க கூட்டணி 178-200 இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி 82-102 இடங்களை வெல்லும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.
இதேபோல டூடேஸ் சாணக்கியா கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே 175 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் மந்தமாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகளும் 11 மணி வரை 18.14 சதவீத வாக்குகளும் பதிவான நிலையில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில், 113 வயதான கஞ்சன்பென் பாட்ஷா என்ற பெண்மணி இந்த தேர்தலில் நேரில் வந்து வாக்களித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வாக்குப் பதிவு மையத்திற்கு வீல்சேரில் வந்த கஞ்சன்பென் பாட்ஷா உற்சாகத்துடன் தனது வாக்கை பதிவு செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அவர் தவறாமல் வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிராவில் காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகள் பதிவு
- ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகளும் 11 மணி வரை 18.14 சதவீத வாக்குகளும் பதிவான நிலையில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு காலை 11 மணி வரை 31.37 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 47.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- மகாராஷ்டிராவில் காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தனர்.
- ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தனர். இந்த நிலையில் 11 மணி வரை நிலவரப்படி 18.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு காலை 11 மணி வரை 31.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 9 மணி வரை 12.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.






