என் மலர்
மகாராஷ்டிரா
- உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வி நான் எதிர்பார்ததுதான்
- கங்கனா ரனாவத் பங்களாவி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது என்று மாநகராட்சி இடித்தது
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.பி. ஆனவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
பொதுவெளியில் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை கண்டனத்துக்கு உள்ளாகும் எம்.பி. கங்கனா பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய பஞ்சாப், அரியானா விவசாயிகளைப் பயங்கரவாதி என கூறி சர்ச்சை செய்தார்.
இதற்காக அரியானா விமான நிலையத்தில் வைத்து சிஎஸ்ஐஎப் பெண் அதிகாரி குல்விந்தர் கவுர் என்ற பெண்ணிடம் கங்கானா கன்னத்தில் அரை வாங்கிய சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் நடந்து முடித்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்த இந்தியா கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறித்து கங்கனா காட்டமான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வி நான் எதிர்பார்ததுதான்,பெண்களை மதிக்கிறார்களா அல்லது அவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார்களா என்பதைப் பொறுத்தே ஒருவரை கடவுள் என்றும் அரக்கன் என்றும் அடையாளம் காண முடியும்.

பெண்களை இழிவு செய்யும் அரக்கன் உத்தவ் தாக்கரே. சாத்தானுக்கு நேர்ந்த அதே முடிவை அவர் சந்தித்துள்ளார். பெண்களை அவமதிக்கின்றவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது. எனது வீட்டை இடித்து என்னை வார்த்தைகளால் பழித்தவர்கள் அவர்கள். வளர்ச்சிக்கு வாக்களித்த மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி, பிரதமர் மோடி மகத்தான தலைவர் என்று தெரிவித்துள்ளார்.
பங்களா
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாரஷ்டிர அரசு இருந்தபோது பாந்த்ரா மேற்குபகுதியில் இருந்த கங்கனா ரனாவத் பங்களாவின் சில பகுதிகள் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள்
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணியை சேர்ந்த பா.ஜ.க. 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அஜித் பவார் சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணியை சேர்ந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
+2
- கடந்த வாரம் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் சுமார் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு.
- இன்று காலை சென்செக்ஸ் 1076 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
தீபாவளி பண்டிகை, அமெரிக்க அதிபர் தேர்தல், அதானி மீது அமெரிக்க குற்றச்சாட்டு ஆகியவற்றின் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை வரை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது.
கடந்த 21-ந்தேதி (வியாழக்கிழமை) 0.54 சதவீதம் குறைந்த மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 77,155 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சுமார் 1,961 சென்செக்ஸ் புள்ளிகள் (2.54 சதவீதம்) உயர்ந்து மும்பை பங்குச்சந்தை 79117.11 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,076 புள்ளிகள் உயர்ந்து 80193.47 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இன்று காலை அதிகபட்சமாக செக்செக்ஸ் 80452.94 புள்ளிகளில் வர்த்தகமானது. தற்போது 10 மணியளவில் சென்செக்ஸ் 80248 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையிலும், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இரண்டு நாட்களாக பங்கு சந்தை உயர்ந்து காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களில் சுமார் சென்செக்ஸ் சுமார் 3,200 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லார்சன், எம் அண்டு எம், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளது.
- கெல்லி குலாப் ஜாமூன் இருக்கின்ற கிண்ணத்தை ஆர்வமாக பார்க்கிறார்.
- இது மென்மையாகவும், கிரீமியாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்.
மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் நமது நாட்டு உணவைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ளும்போது, இந்த வீடியோக்களை எப்போதும் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும்.
சமீபத்திய வீடியோவில், தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் இந்திய பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் பிரதானமாக இருக்கும் ஒரு இந்திய இனிப்பான குலாப் ஜாமூனை சுவைத்து பார்க்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கெல்லி கொரியா என்பவர் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில், கெல்லி குலாப் ஜாமூன் இருக்கின்ற கிண்ணத்தை ஆர்வமாக பார்க்கிறார். அதை எப்படி சாப்பிடுவது என்று தெரியவில்லை என்று அவர் கூறும்போது, குலாப் ஜாமூனை பாதியாக கட் செய்து சாப்பிட சொல்கிறார்கள்.
அவள் ஒரு சிறியதாக கட் செய்து சாப்பிடுகிறார். சுவைத்த பின், வாவ்... இது மென்மையாகவும், கிரீமியாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்.
பின்னர் அவள் இனிப்பை மற்றொரு கடி எடுத்து, ஆஹா! எனக்கு இது பிடிக்கும். இது ஒரு இந்திய இனிப்பு நான் அதை விரும்புகிறேன் என்று கூறுகிறார்.
இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "எனக்கு குலாப் ஜாமூன் பிடிக்கும்" என்று தலைப்பிட்டிருந்தார்.
- மகாராஷ்டிராவின் சட்டசபை காலம் நாளையுடன் முடிவடைகிறது.
- அதற்குள் புதிய முதல்வர் பதவி ஏற்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க.,சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
முதல்வர் யார் என்பதில் இந்த கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல்வர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே நாளையுடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற காலம் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். முதல்வர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் நாளைக்குள் புதிய அரசு அமைக்கப்பட வாய்ப்பு இல்லை.
நாளைக்குள் ஒருவேளை முதல்வர் பதவி ஏற்கவில்லை என்றால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என அனுமானம் எழுந்துள்ளது.
ஆனால் 26-ந்தேதிக்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என அரசியலமைப்பு தேவை இல்லை எனச் சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிராவில் இதற்கு முன்னதாக சட்டசபை காலம் காலாவதியான நிலையிலும் சில நாட்கள் கழித்து புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளதற்கு உதாரணம் உள்ளது.
10-வது சட்டமன்ற காலம் 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி முடிவடைந்துள்ளது. 12-வது சட்டமன்றத்திற்காக முதல்வர் நம்வபர் 7-ந்தேதி பதவி ஏற்றுள்ளார்.
அதேபோல் 12-வது சட்டசபை காலம் 2014-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியுடன் முடிவடைந்தது. 13-வது சட்டமன்றத்திற்கான புதிய முதல்வர் சில நாட்கள் கழித்துதான் பதவி ஏற்றுள்ளார்.
13-வது சட்டமன்ற காலம் 2019 நவம்பர் 19-ந்தேதி முடிவடைந்தது. 14-வது சட்டமன்ற காலத்திற்கான புதிய முதல்வர் நவம்பர் 28-ந்தேதிதான் பதிவு ஏற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர்கள் பதவி ஏற்க சில நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது பல முறை நடந்துள்ளது எனச் சொல்லப்படுகிறத.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
- அஜித் பவார் பவார் என்சிபி 59 இடங்களில் போட்டியிட்டு 41 இடங்களில் வென்றுள்ளது. சரத் பவார் என்சிபி 89 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
- மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளில் வடக்கு மகாராஷ்டிராவில் 61 தொகுதிகளை உள்ளடக்கியது வித்ர்ப்பா பிரதேசம்
மகாராஷ்டிரா தேர்தல்
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி இந்த தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளை என்னும் பணி நேற்றைய தினம் [நவம்பர் 23] வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
நேற்று பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக - ஷிண்டே சேனா - அஜித் பவார் என்சிபி] 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கூட்டணியில் பாஜக மட்டுமே 132 இடங்களில் வென்றுள்ளது.
உடைந்த நம்பிக்கை
முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
எனவே சட்டமன்றத் தேர்தலை [காங்கிரஸ் - சரத் பவார் என்சிபி - தாக்கரே சிவசேனாவை ] உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணி சட்டமன்றத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. கட்சியை உடைத்த துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று சரத் பவார் நம்பியிருந்தார்.
ஆனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 79 இடங்களில் போட்டியிட்டு 57 இடங்களிலும், தாக்கரே தலைமையிலான சிவசேனா 98 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களிலும் வெற்றி பெற்றது. அஜித் பவார் பவார் என்சிபி 59 இடங்களில் போட்டியிட்டு 41 இடங்களில் வென்றுள்ளது.
ஆனால் சரத் பவார் என்சிபி 89 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. எனவே கட்சியை உடைத்து பாஜகவுடன் சென்ற ஷிண்டே மற்றும் அஜித் பவாரை மக்கள் ஏற்றுக்கொண்டதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

மக்களை தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில் 6 மாதங்களே இடைவெளி இருந்த நிலையில் மக்களின் இந்த திடீர் மாற்றம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்ற கேள்வி எழலாம். இதுகுறித்த விரிவான பார்வையை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
தேர்தல் பாடம்
மக்களவை தேர்தல் பின்னடைவுக்கு பின்னர் சுதாரித்த ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அவசரகால மக்கள் திட்டங்களை அமல்படுத்த தொடங்கியது.
அதில் முக்கியமானது துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் முன்னெடுத்து தொங்கிய 'முக்கிய மந்திரி லட்கி பஹின்' திட்டம். முதலமைச்சர் பெண்கள் உதவித் தொகை திட்டம் என்று அழைக்கப்படும் இதன்மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்பட்டது.
லட்கி பஹின்
கடந்த 4 மாதங்களாகவே மாநிலத்தில் 18 இல் இருந்து 65 வயது வரை உள்ள பின்தங்கிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் 2 கோடியே 25 லட்சம் பெண்கள் பலனடைந்தனர். இவர்கள் மொத்த பெண்களில் 55% ஆவர்.

இந்த திட்டம் பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த உதவித் தொகையை ரூ. 2,100 ஆக உயர்த்துவதாக மகாயுதி கூட்டணி தேர்தல் வாக்குறுதி மூலம் உறுதியளித்தது. மேலும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும் வரும் 5 வழிகளிலும் உள்ள சுங்கக்கட்டணத்தையும் முதல்வர் ஷிண்டே கடந்த அக்டோபர் 12 இல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ரத்து செய்தார்.
வித்ர்ப்பா வியூகம்
இதுதவிர்த்து மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளில் வடக்கு மகாராஷ்டிராவில் 61 தொகுதிகளை உள்ளடக்கிய வித்ர்ப்பா பிரதேசத்திற்கு முக்கியத்துவம் அளிப்பட்ட்டது. இந்த பிரதேசத்தில் பாஜக கூட்டணி கடந்த மக்களை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
விவசாயம் நிறைந்த பகுதியான விதர்பாவில் சோயாபீன், பருத்தி விலை சரிவு, வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை இதற்கு காரணம் ஆகும். எனவே வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கி, குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து சோயாபீன் மற்றும் பருத்தியை ஆளும் பாஜக கூட்டணி அரசு கொள்முதல் செய்தது.
இது இந்த தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுத்திருக்கிறது. இந்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் பதிய அரியானாவோடு நடக்க இருந்த சட்டமன்றத் தேர்தல் நவம்பருக்கு திட்டமிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிரிக்கட்சிகள் சாடியதும் குறிப்பிடத்தக்கது.
ஓபிசி வியூகம்
அடுத்ததாக ஓபிசி பிரிவினரை குறிவைத்து நடந்தபட்ட பாஜக பிரசாரங்கள் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. ஓபிசிக்களில் உள்ள பல்வேறு சாதியினரை தங்களுக்கான வாக்கு வங்கியாக மற்றும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது. ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே ஓபிசி மக்கள் ஒன்றாக இருப்பதை காங்கிரஸ் தடுக்க முயற்சித்து வருகிறது என்றும் ஓபிசி மக்களின் ஒற்றுமையைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. அதனால்தான் சாதி வாரி கணக்கெடுப்பு கோஷத்தை முன் வைக்கிறார்கள்' என்று மோடி பிரசாரம் செய்தார்.

கோட்டை விட்ட காங்கிரஸ்
ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் மாற்றப்படும் என்றும் பிரதமர் மோடி உட்பட பாஜக மேடைகள் தோறும் பிரசாரம் செய்யப்பட்டது. காங்கிரஸ் இதை பொய்யான கதை என்றும் கூறியது. ஆனால் காங்கிரஸ் தனது பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அலட்சியம் காட்டியதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளது.
பாஜக கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி 10 பேரணிகளில் பங்கேற்று 106 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 16 பேரணிகள் மூலம் 38 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி 7 பிரசாரங்களிலும், மல்லிகார்ஜுன் கார்கே 9 பேரணிகளில் மட்டுமே கலந்து கொண்டனர். இது காங்கிரஸ் கட்சியினரிடையேயேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பாஜக கூட்டணி வெற்றிக்காக அரியானாவில் செய்ததை போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் களப்பணியும் முக்கிய காரணியாக உள்ளது.

பத்தேங்கே தோ கத்தேங்கே
மேலும் இந்துக்களை குறிவைத்து எழுப்பப்பட்ட , 'பத்தேங்கே தோ கத்தேங்கே' [பிரிந்திருந்தால் நாம் வெட்டப்படுவோம்], 'ஏக் ரஹேங்கே தோ சேஃப் ரஹேங்கே' [ஒற்றுமையாக பாதுகாப்பாக இருப்போம்] என்று பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆத்தியநாத் முதல் அடிமட்ட பிரசாரக் கூட்டங்கள் வரை எழுப்பப்பட்ட கோஷங்களும் பாஜக கூட்டணி வெற்றியை தீர்மானித்திருக்கிறது. இந்த தோல்வியில் இருந்தாவது காங்கிரஸ் பாடம் கற்குமா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.
- டீயை குடித்த பதான் 10-க்கு 5 என்று மதிப்பிட்டுள்ளார்.
- வீடியோ 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.
சாமானியர்கள் பலருக்கும் நட்சத்திர ஓட்டல்களை பார்க்கும் போது ஒரு பிரமிப்பு ஏற்படும். அங்கு சென்று ஒரு டீயாவது குடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்பட்ட சாமானிய இளைஞரான அட்னான் பதான் என்பவர் மும்பையின் சின்னமாக விளங்கும் 5 நட்சத்திர ஓட்டலான தாஜ்மஹால் பேலசுக்கு சென்று டீ குடித்துவிட்டு தனது கனவை நிறைவேற்றி உள்ளார். மேலும் இது தொடர்பான ஒரு வீடியோ பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், அட்னான் பதான் தாஜ்மஹால் பேலசுக்கு வெளியில் வீடியோ எடுப்பதில் இருந்து தொடங்குகிறது. பின்னர் உற்சாகமாக ஓட்டலுக்கு செல்லும் அவர், அங்கு அலங்கரிக்கப்பட்ட வளாகம் மற்றும் சுவரில் ஏராளமான பிரபலங்களின் புகைப்படங்கள் இருப்பதை காட்டுகிறார். தொடர்ந்து அவர், தாஜ் ஓட்டல் உள்ளே இருந்து பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது.
'நான் ஒரு அரச அரண்மனையில் இருப்பதை போல் உணர்கிறேன்' என்று கூறுகிறார். அதன் பிறகு பதான், மெனுவை பார்த்து பாம்-கி டீ- ஐ ஆர்டர் செய்கிறார். ரூ.1,800 விலை கொண்ட அந்த டீ வரியுடன் சேர்த்து ரூ.2,124 ஆகும். அதனுடன் வடாபாவ், சாண்ட்விச், பட்டர் போன்ற பிற உணவுகளையும் சேர்த்து வழங்குகின்றனர். டீயை குடித்த பதான் 10-க்கு 5 என்று மதிப்பிட்டுள்ளார்.
வீடியோவின் முடிவில் பதான் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதோடு, வாழ்க்கையில் ஒருமுறையாவது இது போன்ற அனுபவத்தை கண்டிப்பாக பெற வேண்டும் என கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. பயனர் ஒருவர், இந்த வீடியோ மிகவும் உற்சாகம் அளிக்கிறது என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், வெறும் டீக்கு ரூ.2,124? இது நிச்சயம் ஆடம்பரம் என்று பதிவிட்டிருந்தார்.
- பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது.
- கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் இந்த சூழல் ஏற்பட்டது
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றைய தினம் [நவம்பர் 23] வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக - ஷிண்டே சேனா - அஜித் பவார் என்சிபி] 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
கூட்டணியில் பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது.
ஆனால் எதிரணியான மகா விகாஸ் ஆகாதி அணியை சேர்ந்த காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவார் என்சிபி 10 இடங்களிலும் என கூட்டணியே மொத்தமாக 46 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
எனவே அமைய மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத சூழல் உருவாகி உள்ளது. மகாராஷ்டிர அரசியலில் கடந்த 57 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான சூழல் ஏற்பட்டது கிடையாது.

பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற, மொத்தமுள்ள சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 10% இடங்களை பெற்று இருக்க வேண்டும். 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 28 உறுப்பினர்களைத் தன்வசம் வைத்திருக்கும் கட்சியிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவரைப் பரிந்துரைக்க முடியும்.
ஆனால் எதிர் கூட்டணியான மகா விகாஸ் அகாதியில் அதிகபட்சமான இடங்களை வென்றது உத்தவ் தாக்கரே சிவா சேனா. அதுவும் 20 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.
எனவே அவரும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியாது மகா விகாஸ் அகாதி கூட்டணி தேர்தலுக்கு முன்னரே உருவாகியிருந்தாலும், விதிகளின்படி, மூன்று கட்சிகளின் கூட்டு பலத்தைக் கொண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பெற முடியாது என்று சட்டமன்ற முன்னாள் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற எதிர்கட்சித் தலைவர் இல்லாத சூழல் மகாராஷ்டிராவில் கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாஜக கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை.
- இந்த நாட்டில் ஒரே கட்சி தான் இருக்கும் என பாஜக தலைவர் நட்டா கூறியிருந்தார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சறுக்கினாலும் சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியின் மிகப்பெரிய வெற்றி தொடர்பாக பேசிய உத்தவ் தாக்கரே, "2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்றின்போது மகாராஷ்டிரா மக்கள் ஒரு குடும்பத் தலைவனாக எனது பேச்சை கேட்டனர். ஆனால் இப்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மகா விகாஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 4 மாதங்களில் ஆளும் கட்சி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது என்று தெரியவில்லை. பாஜக கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஏக்நாத் ஷிண்டே, இனி பட்னாவிசின் கீழ் தான் பணிபுரிய வேண்டும். மகாராஷ்டிரா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் காலி செய்ய வேண்டும்.
இந்த நாட்டில் ஒரே கட்சி தான் இருக்கும் என பாஜக தலைவர் நட்டா கூறியிருந்தார். தற்போது நடப்பதை பார்க்கும்போது இந்த நாடு ஒரே கட்சி ஒரே ஆட்சி என்ற திசையில் நகர்வது போல் தெரிகிறது. மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 89 தொகுதிகளில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
- நந்தெத் மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
- நந்தெத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சறுக்கினாலும் சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
அதே சமயம் நந்தெத் மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவன் ரவீந்திர வசந்த்ராவ் 1,457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அந்த நந்தெத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்பதுதான்.
மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த மக்கள் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகளில் உள்ள இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டி மகாராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
- மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது.
- இத்தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் உள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஏராளமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் உள்ளனர்.
இந்நிலையில், சகோலி சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் நானா படோல் பா.ஜ.க. வேட்பாளரை 208 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இதேபோல், மால்கான் மத்தி தொகுதியில் போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளர் 162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- கேப்டன் தமிழ்ச்செல்வன் 7895 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
- தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் தமிழ்ச்செல்வன்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 231 இடங்களில் முன்னிலை பெற்று மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7895 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
சயான் கோலிவாடா தொகுதியில் 2014, 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான கேப்டன் தமிழ்ச்செல்வன் தற்போது தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ச்செல்வன் மகாராஷ்டிராவில் வார்டு கவுன்சிலராக இருந்து எம்.எல்.ஏ.வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வோர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார்.
- ஆதித்யா தாக்கரே 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 229 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 49 இடங்களிலும் பிற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்ததையொட்டி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது.
இந்த தேர்தலில் வோர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார். ஆரம்பத்தில் சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் மிலிந்த் முர்ளி தியோராவிடம் பின்னடைவை சந்தித்த ஆதித்யா அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் முன்னிலை பெற்று இறுதியாக 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.






