என் மலர்tooltip icon

    இந்தியா

    சம்பளம் 13000 - காதலிக்கு சொகுசு வீடு, கார் பரிசு: ரூ.21 கோடி நிதி மோசடி செய்து சிக்கிய நபர்
    X

    சம்பளம் 13000 - காதலிக்கு சொகுசு வீடு, கார் பரிசு: ரூ.21 கோடி நிதி மோசடி செய்து சிக்கிய நபர்

    • சாகர் மகாராஷ்டிர அரசில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
    • சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடிக்கு அரசு நிதியை இவர் மோசடி செய்துள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் விளையாட்டு வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அரசின் சார்பில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றுபவர் ஹர்ஷ் குமார் ஷீர்சாகர். இவர் அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்துள்ளார். அவருக்கு மாதம் 13,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

    திடீரென ஹர்ஷ் குமார் பி.எம்.டபிள்யூ. காரில் வலம் வர தொடங்கினார். அவர் தனது காதலிக்கு 4 படுக்கை அறை கொண்ட வீடு ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார். இதைப் பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இவ்வளவு பணம் திடீரென இவருக்கு எப்படி வந்தது என தெரியாமல் திகைத்தனர்.

    பி.எம்.டபிள்யூ. கார், பி.எம்.டபிள்யூ. பைக், விமான நிலையத்திற்கு எதிரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 படுக்கை அறை கொண்ட வீடு, வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி என சாகர் வசதியை பெருக்கிக் கொண்டார்.

    சாகருடன் கூட்டாக சேர்ந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்ட சக பணியாளரின் கணவர் ரூ.35 லட்சம் மதிப்பிலான சொகுசு ரக கார் ஒன்றை சமீபத்தில் வாங்கினார். இதனால் சந்தேகம் அடைந்த சக பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடி அளவுக்கு அரசு நிதியை மோசடி செய்தது, அதில் கிடைத்த தொகையை வைத்து சாகர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தது தெரிய வந்தது.

    விளையாட்டு வளாகம் பெயரில் வங்கிக்கணக்கை தொடங்கி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, துணை இயக்குநரின் போலி கையெழுத்துகளைப் போட்டு காசோலைகளைத் தயாரித்து, மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×