என் மலர்
மகாராஷ்டிரா
- பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைில் இந்திய பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ரகசிய தகவல் அடிப்படையில் தீவிரவாதிகள் மறைந்திருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி செல்லும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தும்போது, வீரர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் பூஞ்ச் உள்ளிட்ட பல பகுதியில் அடிக்கடி வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
நேற்று பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதனால் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடத்தை வீரர்கள் நெருங்கிய நிலையில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இருந்தபோதிலும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் பூஞ்ச் ரஜோரியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
நேற்று பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய வீரர்களின் தியாகத்தை வைத்து நீங்கள் (பா.ஜனதா) மீண்டும் அரசியல் செய்ய விரும்புகிறீர்களா?. 2024-ல் மீண்டும் புல்வாமா விவகாரத்தை வைத்து வாக்கு கேட்க விரும்புகிறீர்களா?.
பூஞ்ச் தாக்குதல் குறித்து நாங்கள் கேள்வி கேட்டால், அதன்பின் அவர்கள் எங்களை டெல்லி அல்லது நாட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
- விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்றவை ஏற்றம் கண்டன.
- மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில் வர்த்தகமானது. மும்பை பங்கு சந்தையில் இந்த உச்சம் இதுவரை இல்லாததாகும். நேற்று 71.437.19 புள்ளிகள் முடிவடைந்து, இன்று காலை 71,647.66 புள்ளிகளில் தொடங்கியது.
இதுபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டி இன்று காலை 138.8 புள்ளிகள் உயர்ந்து 21,591.90-ல் வர்த்தகமானது. இதுவும் புதிய உச்சமாகும். நேற்று 21453.10 புள்ளிகளில் முடிவடைந்து இன்று காலை 21,477.65 புள்ளிகளில் தொடங்கியது.
விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, என்.டி.பி.சி, மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை ஏற்றத்தை கண்டன.
மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.
ஆசியாவில் ஷாங்காய் பங்கு சந்தை சரிவை சந்தித்த போதிலும் சியோர், டோக்கியோ, ஹாங்காங் போன்ற சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.
- மகாராஷ்டிரா வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
மகாராஷ்டி மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சோலார் இன்டஸ்டிரீஸ் என்னும் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாக்பூர் வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மந்திரி நிதியுதவி அறிவித்துள்ளார். விரைவில் விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட உள்ளேன் என தெரிவித்தார்.
- பேக்கிங் செய்யும் போது வெடிவிபத்தான ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வெடிவிபத்து காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டி மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சோலார் இன்டஸ்டிரீஸ் என்னும் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக இந்த வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகின.
மும்பை:
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டாக கேப்டன் பொறுப்பு வகித்த ரோகித் சர்மாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது.
மும்பை அணியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என குமுறும் இணைய வாசிகள், ரோகித் சர்மாவுக்காக மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவளித்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகி வருகிறது.
- இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
- இந்தியாவின் தீப்தி சர்மா இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மும்பை:
பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 104.3 ஓவரில் 428 ரன்களில் ஆல் அவுட்டானது. சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதமடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார்.
இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
298 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் சார்லி தீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
இந்தியாவின் தீப்தி சர்மா 4 விக்கெட்டும், பூஜா 3 விக்கெட்டும், கெய்க்வாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து அனைவரது பார்வையையும் பெற்றவர் அன்னா ஹசாரே.
- லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் என்றால் மிகையாகாது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி பா.ஜனதா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சபை ஒன்று. மற்றொரு மேல்சபை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டசபையில் ஏற்கனவே லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் நேற்று மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக போராடியவருமான அன்னா ஹசாராவை போன் மூலம் தொடர்பு கொண்டு, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா வரம்பிற்குள் முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் அடங்குவர். லோக் ஆயுக்தா அதிகாரி ஒருவரை நியமித்தபின் அவரை மாற்றவோ இடமாற்றமோ செய்ய முடியது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் நீக்க முடியும்.
அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குறித்த புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
மத்திய அரசு லோக் ஆயுக்தா மசோதாவை அமல்படுத்த அன்னா ஹசாரே நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழக்க இவரது போராட்டம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், இவருடன் உண்ணாவிரதம் இருந்து கெஜ்ரிவால் தனியாக சென்று கட்சி ஆரம்பித்து டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் கெஜ்ரிவாலிடம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
- மகளிர் பிரீமியர் லீக் ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.
- இதில் இந்திய, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ரூ.2 கோடிக்கு ஏலம் போயினர்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
முதல் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.
இதற்கிடையே, 2-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் நடத்தப்படுகிறது. இதையொட்டி வீராங்கனைகளின் மினி ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.
ஏலப்பட்டியலில் 104 இந்தியர்கள், 61 வெளிநாட்டினர் என்று மொத்தம் 165 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 109 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியவர்கள்.
5 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30 இடம் காலியாக உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கான 9 இடங்களும் அடங்கும்.
இந்நிலையில், இந்திய வீராங்கனை காஷ்வீ கவுதமை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இதேபோல், ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
மற்றொரு இந்திய வீராங்கனை விருந்தா தினேஷை உ.பி. வாரியர்ஸ் அணி 1.3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயிலை ரூ.1.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
- தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து, பிம்ப்ரி- சின்ச்வாட் நகராட்சி ஆணையர் சேகர் சிங் கூறுகையில், "2.45 மணியளவில் தலவாடேயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு அழைப்பு வந்தது.
பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னும் மெழுகுவர்த்திகளை தொழிற்சாலை தயாரித்து வந்துள்ளது.
பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.
மேலும், "காயமடைந்தவர்கள் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக" ஆணையர் தெரிவித்தார்.
- சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது.
புனே:
மராட்டிய மாநிலம் புனேயில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் 21 வயது மாணவர் ஒருவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை இவர் வாகோலி பகுதியில் உள்ள பகோரி சாலையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஓரினச்சேர்க்கை தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் விசாரணையை தொடங்கினோம்.
அப்பகுதியில் நடை பெற்று வரும் ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரியும் தொழிலாளி ஒருவருடன் ஓரினச்சேர்க்கை தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
- அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை.
- போலீசார் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் போவை பகுதியில் உள்ள அசோக் நகரில் ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றான். விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்வில்லை. இதையடுத்து, பெற்றோர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
உடனே காவல் நிலையம் விரைந்த பெற்றோர், தங்களின் மகன் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர். காணாமல் போன சிறுவன் விளையாடி கொண்டிருந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.
அதன்படி மோப்ப நாய் "லியோ" சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டது. முதலில் சிறுவன் அணிந்திருந்த டி-சர்ட் ஒன்றை மோப்பம் பிடித்த லியோ, பிறகு சிறுவன் விளையாடி கொண்டிருந்த மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தேடலை துவங்கிய லியோ மைதானத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே சிறுவனை கண்டுபிடித்து அசத்தியது.
மோப்ப நாய் தேடுதல் வேட்டையில் இறங்கிய மூன்றரை மணி நேரத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். அதிநவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாத பட்சத்தில் போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் தேடுதல் வேட்டையை நடத்தியதோடு, சில மணி நேரங்களில் சிறுவனை காப்பாற்றிய சம்பவம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றது.
- தொடர்ந்து போதை மருந்து வாங்க தம்பதியிடம் பணம் இல்லை
- சகோதரனின் செயல் தெரிய வந்ததும் ரூபினா காவல்துறையிடம் புகார் அளித்தார்
மும்பையை சேர்ந்த ஷப்பீர் கான் மற்றும் சானியா தம்பதியினருக்கு ஒரு அழகான 2 வயது ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ஒரு மாதம் முன்பு சானியா, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இத்தம்பதியினருக்கு போதை மருந்து எடுத்து கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால், தொடர்ந்து போதை பொருட்களை வாங்க இவர்களிடம் போதுமான அளவு பணம் இல்லை.
இந்நிலையில் இவர்களுக்கு, குழந்தையை விற்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விற்கும் இடைத்தரகராக செயல்படும் உஷா ரத்தோட் என்பவர் அறிமுகமானார்.
உஷா மூலம் தங்கள் ஆண் குழந்தையை ரூ.60 ஆயிரத்திற்கு ஷக்கீல் தம்பதியினர் விற்று விட்டனர். அவர் மூலமாகவே தங்கள் பெண் குழந்தையையும் ரூ.14 ஆயிரத்திற்கு ஷகீல் மக்ரானி என்பவருக்கு விற்று விட்டனர்.
ஷப்பீரின் சகோதரி ரூபினா கானுக்கு போதை மருந்து வாங்க ரூ.74 ஆயிரத்திற்கு தங்கள் குழந்தைகளை தன் சகோதரன் விற்றது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து டி.என். நகர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மும்பை குற்றவியல் பிரிவிடம் வழக்கை மாற்றம் செய்தனர். அவர்கள் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்ற வழக்கில் ஷபீர், சானியா, ஷகீல் மற்றும் இடைத்தரகர் உஷா ஆகியோரை கைது செய்தனர்.
பெண் குழந்தையை மீட்டுள்ள காவல்துறையினர், ஆண் குழந்தையை வாங்கியவரை தேடி வருகின்றனர்.






