பஸ் டிரைவர்களுக்கு பிஸ்கெட் வினியோகிக்கும் முதியவர்

20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், முதியவரின் முயற்சியை பாராட்டி உள்ளனர்.
பஸ் டிரைவர்களுக்கு பிஸ்கெட் வினியோகிக்கும் முதியவர்
Published on

சமூக வலைதளங்களில் பரவும் சில வீடியோக்கள் பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் மும்பையில் பஸ் டிரைவர்களுக்கு முதியவர் ஒருவர் பிஸ்கெட் வினியோகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

மினல் படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், மும்பை ஹியூஸ் சாலையில் செல்லும் பஸ்களை முதியவர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். பின்னர் அவர் டிரைவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்களை வழங்குகிறார். அதனை டிரைவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளும் காட்சிகள் உள்ளது.

20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சில பயனர்கள், முதியவரின் முயற்சியை பாராட்டி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com